Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கரு உருவாகிறது...

நாங்குநேரி வாசஸ்ரீ


வணக்கம் அண்ணாச்சி. சுந்தரி இருக்காளா. வேல முடிஞ்சாச்சுன்னா வாசத்திண்ணைக்கு வரச்சொல்லுங்க. வெளியிலிருந்து எட்டிப்பார்த்து குரல் கொடுத்தாள் பக்கத்துவீட்டு இல்லத்தரசி நந்தினி. தெருவில் வீடு இருப்பது இவங்களுக்கெல்லாம் நல்ல வசதி. ராச்சாப்பாடு முடிஞ்சவொடனே அரட்டைக் கச்சேரிதான் தினமும். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அரட்டைச்சங்கம் அது. யாராவது ஒருத்தர் வரவில்லையென்றால் அன்றைய டாபிக் யார் வரவில்லையோ அவர்களைப் பற்றியது. எல்லாரும் வந்திருந்தால் பொது விசயங்கள், சமையல் குறிப்புகள் போன்றவை அலசப்படும். இன்னிக்கு இவுங்க பேச்சுல யார் தலை உருளப்போகுதோ...

யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரியும் திண்ணைக்குப் போய்விட்டாள். ஹாலில் நான் மட்டும் தான். நிம்மதியாக கதை எழுதலாம். மூன்று வாரப் பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகச் சிறுகதைகள் அனுப்பி வருகிறேன். எது எப்படிப் போனாலும் வாரம் மூன்று கதை அனுப்பியே தீர வேண்டும். இந்த முறை என்னவோ ரெண்டு கதை எழுதியாச்சு மூன்றாவது கதை மனசுக்குப் பிடிச்ச மாதிரி அமையவே மாட்டேங்குது. காலக் கெடு கொடுத்து வேலை செய்யச் சொன்னால் எரிச்சல் தானே வரும். எப்ப வேணும்னாலும் எழுதி அனுப்பலாம்னு இருந்தா நல்லா இருந்திருக்கும். இது நானா இழுத்துப்போட்டுக்கிட்டது. செஞ்சுதான் ஆகணும். மனம் ஒரு நிலையில் இல்லை.

நந்தினியோட குரல் கேக்க ஆரம்பிச்சிடுச்சு. அவ லௌட் ஸ்பீக்கர் மாதிரி. வேற வழியில்லாம அவ பேச்சக் கேட்டுதான் ஆகணும். மெதுவா பேசுன்னு சொன்னா சுந்தரி கோபப்படுவா.

உங்க வீட்ல என்ன சமையல். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு அன்றைய டாபிக் தொடங்கியது. பரமு அன்றைய கூட்டத்தில் இல்லபோல. பரமு அண்ணன் பொண்ணு சடங்கப் பத்திதான் விலாவாரியா பேசறாங்க. நந்தினி தான் பேசுகிறாள். பரமு வீட்டுக்காரரு கோபிச்சுக்கிட்டாராமா. அவுக அண்ணன் தன் பொண்டாட்டி அதான் பரமுவோட மைனி பேச்சக் கேட்டுக்கிட்டு மைனி தம்பிய வீடு தேடிப் போயி பாக்கு வெத்தல வச்சு சடங்கான சேதி சொன்னாங்களாமா. பரமுக்கு மூலக்கடை அண்ணாச்சி தம்பி சொன்ன தகவல்தானாம்.

மச்சான் படிச்சவரு புது பணக்காரரு அதான் முறை செஞ்சிருப்பாங்க. இது எதிர் வீட்டரசியின் குரல்.

நந்தினி தொடர்ந்தாள்.

அட அது இல்லங்கேன். அவ மைனிக்கு தன் தம்பிய மாப்ள ஆக்கணும்னு எண்ணம். அத நேரடியா சொல்லிட்டுப் போலாம்ல. அத உட்டுப்போட்டு பரமுவ திட்டம் போட்டு அவமானப்படுத்திருக்கா அவ. மொதல்ல சடங்கானத அத்தை மொறைக்கு சொல்லிவுடல. அடுத்தாப்ல சடங்குக்கு பத்திரிகை அடிச்சிருக்காங்க. அதுல பரமு மாப்ள பேரப் போடவே இல்ல. மைனியோட ஒண்ணுவிட்ட மாமன், அண்ணன்னு ஊர்ல இருக்க எல்லார் பேரும் போட்டிருந்ததாமா. பரமு வருத்தப்பட்டிச்சு. இருந்தாலும் பரமு புருசன் ரொம்ப நல்லவரு. விட்டுக்கொடுக்கக்கூடாதுனு ஒரு பட்டுச்சேலை எடுத்துட்டு போய் பிள்ளையப் பாத்துட்டு வான்னு சடங்கு அன்னிக்கு பரமுவ அனுப்பிச்சி வச்சிருக்காரு. போன எடத்துல ஒருக்க வாங்கன்னு சொல்லிட்டுப் போன மைனிய திரும்ப பாக்கவே முடியலயாம். மைனியோட அக்கா ஜாடையா பேசிச்சான். இது சடங்கு வீடு எதுக்கு பரிசம் போடுதது கணக்கா சேலை எடுத்துட்டு வந்திருக்க. பாத்திரம் பண்டத்தச் சீரா கொண்டு வந்திருக்கலாம்லன்னு.

கொஞ்ச நேரங்கழிச்சு பரமு அண்ணன் வந்து சொல்லிச்சான். அவ தம்பி பாம்பேல இன்ஜினியரிங் படிக்கறானில்ல. என்னமோ இப்பவே சம்பாதிச்சுக் கொட்டப் போறாங்கற நெனைப்புல ஆடறா. உம் புள்ளைக்குக் காலேஜ் படிப்பு முடிஞ்சவொடனே அவனோட விருப்பப்படி சிவில் சர்வீஸ்ல கெடைக்கட்டும். அப்பகண்டா உம் பின்னால வருவாளோ என்னவோ. எனக்கு உன்னோட பிள்ளையும் ஒண்ணுதான். அவ தம்பியும் ஒண்ணுதான். எம் பொண்ணு சின்னவ. அவளுக்குச் சொந்தத்துல அதுவும் நெறைய வயசு வித்தியாசத்தோட...

கல்யாணம் முடிக்கறதுல எனக்கு விருப்பம் கெடையாது. நேரம் வரும்போது சொல்லுவேன். இப்ப முடிஞ்ச மட்டும் அவ ஆடிக்கட்டும். நீ ஒண்ணும் மனசுல வச்சிக்காதன்னு.

அவுங்க கூட்டத்தார் எழுதின மொய்யெல்லாம் மைக் போட்டு சொல்லச் சொல்லிச்சாம் அவ மைனி. அதற்குப் பிறகு நந்தினி ரகசியக்குரலில் பேசியதால் ஒன்றும் சரியாகக் கேட்கவில்லை.

நான் யோசித்தேன் எப்படிச் சொல்லியிருப்பார்கள். மைக்கில் பேசும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு என்பது கிராமப் புற மக்களின் நம்பிக்கை.

வாங்கப்பா. வாங்கப்பா. மொய் வைக்கறவங்கல்லாம் வரிசையில வாங்க. பிள்ளைக்கு திருநீறு பூசிட்டீங்களா. இந்தப் பக்கமா வந்து ஒங்க உறவுமுறை, சமஞ்ச பிள்ளைக்கு நீங்க என்ன சீர் செய்யறீங்க சொல்லிட்டுப் போங்க. இப்பம் நம்ம செல்வி சுகி யோட பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு கூடியிருக்கோம். அவ மாமன் காடுப்பட்டி நல்லமுத்து ஐயா பிள்ளைய ஆசிர்வதிச்சுப் பெரிய பித்தாளக் குத்தடுக்க சீராக் கொடுக்காரு.

ம்... அடுத்தடுத்து வரட்டு. நாடம்பட்டி ஒண்ணுவிட்ட மாமன். பித்தாளத் தவலை. இசக்கித்தாயி சின்ன அறுக்கஞ்சட்டி. பிச்சத்தாயி சித்தி முறை குத்துப்போணி. வேலம்மாள் அத்தை டப்பா. சொல்லுதேம்மா பொறுங்க. மொத சொன்னது தப்பு. வேலம்மாள் அத்தை பாம்பே சம்படம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு போட்டு மூணு. சரியா சொல்லிட்டேனாமா. சந்தோசமா போயிட்டு வாங்க.

யம்மா... இட்லி கொப்பற. உங்க பேரையும், உறவையும் சொல்லாமப் போனா எப்படி. வரவு வைக்கணும்ல. சரியாச் சொல்லுங்கம்மா. நாள முன்னயும் உங்க வீட்டு விசேசத்துக்கு திரும்பச் செய்யத் தெரியணுமில்ல.

இப்படித்தான் இருக்க வேண்டும். இது யூகம் தான். அப்பாடா எனக்கு கதைக்கரு கிடைத்து விட்டது... சடங்கு வீடு...

வெளியில் கூட்டம் கலைந்து அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

வாஷ்ரூம் போயிட்டு வந்து எழுதிவிட வேண்டியதுதான்.

அக்கா ஒரு கரண்டி தயிர் குடுங்களேன். பால ஒரைக்கணும்.

உள்ளே நுழைந்த நந்தினி மேசை மேலிருந்த காகிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். சுந்தரி இங்க வாயேன். அண்ணாச்சி இம்புட்டு நேரம் நான் பேசினதையே எழுதி வச்சிருக்காக. திரும்பி வந்த நான் சுந்தரியின் முறைப்பையும் மீறி அசடு வழிந்தேன்.

இது ஒண்ணுமில்ல கதைக்கரு தான். இதுக்கு இன்னும் வடிவம் கொடுத்துப் பெரிசாக்கிக் கதையா ஆக்கணும். நான் பேசியதைப் பொருட்படுத்தாமல் சுந்தரி கொண்டு வந்த தயிரை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். அநேகமாக நாளைக்குத் திண்ணைக் கூட்டத்தின் டாபிக் நான் தான் போல.

வாசல் வரை சென்ற சுந்தரியிடம் நந்தினி, என்னமோபோ அண்ணாச்சி கொழந்த பெக்கற மாதிரி, இது கதைக் கருங்கறாரு. இதுக்கப்புறம் அதுக்கு முகம், கை, கால் எல்லாம் வளத்துவிட்டு பிள்ளையா பெத்துப் போடுத மாதிரிதான். சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

திரும்பி வந்த சுந்தரி பேசியது எதுவும் என் காதில் விழவில்லை... ஊமைப் படம் பார்ப்பது போல் அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கினேன் நந்தினி சொன்னதை...

ஒவ்வொரு கதையெனும் குழந்தை பெறுவதற்கு முன்னும் கதாசிரியன் கருவை உருவாக்கி அதற்கு வடிவம் கொடுத்து உணர்ச்சிகளை ஊட்டி, பின் அழகுபடுத்திப் பிள்ளையாக முழுமைப்படுத்தி உலகில் உலவ விடுகிறான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p288.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License