Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சிறுகதை

ராஜவாழ்க்கை

இந்திரா அரசு


ஊர்சாட்டுக்காரன் பொங்கல் வைப்பதற்கான நேரத்தைச் சொல்லிக்கொண்டு போனான், 'இதனால் ஊர்மக்களுக்கு சொல்றது என்னென்னா காலையில ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிக்குள்ள பொங்கவச்சு சாமி கும்புட்டுக்கலாம்' ஆடி மாதம் பௌர்ணமிக்கு பிறகொரு நாளில் கோனூரில் பொங்க வச்சு அவுங்கவுங்க வீட்டுல வீட்டு சாமி பால் பள்ளியம் போட்டு சாமி கும்புடுவாக, காத்தும் மழையுமா அடுச்சுப் பேஞ்சு கொல்லக் காடெல்லாம் மழ மணந்து நெறையனும் அப்பதான் ஆடி மாதம் உழுது பொரட்டி மண்ண கருவாக்க முடியும். அப்பதான் வெளச்சல் அமோகமா இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அதற்காகத்தான் பொங்க வைக்கிறத ஊர் மொறப்படிச் சொல்லிப் போனான் ஊர்சேதி சொல்லும் மோகன். மோகனுக்குப் பொறவு பறையடித்து சேதியச் சொல்லறதுக்கெல்லாம் ஆளில்ல இனி என்பது கொஞ்சம் மகிழ்ச்சிதான். கல்வி சடங்குத்தனமான செயல்களைக் கரைத்துக் கொண்டு வருவது அழகாகவே இருக்கிறது.

இதைக்கூட ஊர்க்கூட்டதுல 'இந்த மாதிரி சேதியச் சொல்லறதெல்லாம் மோகனோட முடுஞ்சுப் போயிரும். 'ம்... எவ்வளவோ மாறிருச்சு அதில் இதுவும் ஒன்னு' என்று ஊர் பெருசுகள் இருவர் பேசிக் கொண்டு போனார்கள். கல்வி நல்ல மாற்றத்த பண்றத சிலரால் அவ்வளவு எளிதில் இன்றளவும் ஏத்துக்க முடியல. பத்து பேரு நாட்டாம பண்ணிக்கிட்டு நூறு பேர அடிமையா வச்சுக்கனுமின்னுதான் பலருக்கு நெனப்புருக்கு என்று முணுமுணுத்தவாறு தண்ணீரைச் செடிகளுக்கு ஊத்திகிட்டு நின்னான் சுகதேவ்.

'ஏ.. சுகதேவ் அக்காவ எழுப்பு பொழுது விடுஞ்சு எவ்வளவு நேரமாச்சு பொங்க சாமான எடுத்து வைக்கனும்' என்று சொல்லிக் கொண்டு வைரம் அரிசியை முறத்தில் போட்டுப் புடைத்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு மனசு பூர மகிழ்ச்சி. ரொம்ப வருசத்துக்கு பொறவு இந்த வருசம் கோடையில மூலத்தெரு வேலன் போர்செட்டு கொல்லையில, அவரு நட்டது போக மீதமிருந்த நாத்த அள்ளிப்போட்டு இவளோட வயலுல நட்டுருந்தா. அதுல வெளுஞ்சு போச்சு நெல்லு. அந்த நெல்லில் பொங்க வைக்க பச்ச எடுத்து பத்திரமா வைத்திருந்தாள். அத நேத்துதான் பொங்க வைக்கிறத்துக்காக அரச்சு வந்துருந்தா. 'சுகதேவ் அக்காஎழுந்துச்சா இல்லையா எழுப்பு' என்று மறுமுறையும் அவனுக்கு நினைவுபடுத்திவிட்டு அரைத்து வந்திருந்த எல்லா அரிசியையும் மொறத்தில் போட்டுத் தட்டிப்புடைத்து, அரிசி வைக்கும் பெரிய குவளையில் கொட்டிக் கொண்டிருந்தாள். அதற்குள் காவியா எழுந்து வந்தாள்...’


காவியா காலங்காத்தால எழுந்துருச்சாதானே வேல பாக்க முடியும்’ என்றபடி பரபரப்பாக அடுத்தடுத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் வைரம். பதினொரு மணிக்கெல்லாம் சாமி கும்புட்டாவனும் கொஞ்சம் வறக்காப்பி போட்டு கொண்டா. பால் சாமி கும்புட வேணும். கிண்ணத்துல இருக்க பால எடுக்காத, கொஞ்சம் வற தண்ணியப் போட்டு்க் கொடுத்துட்டுப் போயி குளி. குளுச்சுட்டு வந்து பொங்க சாமா பானையெல்லாம் எடுத்து வை என்றாள்.' ‘ஒம்பது மணிக்குதானேம்மா பொங்க வைக்கனும் அதுக்கு ஏம்மா இப்படிச் சத்தம் போடுற' என்றபடி கொல்லப்பக்கம் போனா காவியா. அப்பொழுது அடுப்பு மேடைக்கு அருகில் இருந்த அலைபேசி கண்ணானக் கண்ணே... கண்ணானக்கண்ணே... உன் மீது சாயவா..' என்ற பாடலோடு யாருடைய அழைப்பையோ அறிவித்தது.

ஏ.. காவியா அந்த போன எடு ' இப்ப நான் வறதண்ணி போடவா, குளிக்கவா ‘போனஎடுக்கவா’ ‘பொங்க வேலையைப் பாக்கவா' என்று சலித்துக் கொண்டாள் காவியா. ’ஆமா என்னுக்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு நின்னு போன எடுத்தாம்மா' என்ற வைரத்திடம் இந்தாங்க என்றபடி போனை எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போனாள் அடுத்த வேலையைப் பார்க்க. 'யாரு ஓ! 'தம்பியா சொல்லுங்கப்பா நல்லாரிக்கியலா புள்ளையுவோ நல்லாருகா. சந்தோசம்பா இங்கதானே நாங்களும் நல்லாருக்கோம். அப்புறம் என்ன சேதி சொல்லுங்கத் தம்பி. அப்புடியா ரொம்ப சந்தோசம். காவியாதானே ஒரு வாரம் லீவு அதுக்கு. இங்கதான் இருக்கும்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வைரம்.

காவியாவிற்கு யாராக இருக்குமென்று ஓரளவு யூகிக்க முடிந்தது. அம்மா பேசி முடிப்பதற்குள் வறகாப்பி போட்டு எடுத்துக்கொண்டு அருகில் வந்தாள். பக்கத்துல காவியா வரவும் அவள் பேசிகொண்டிருந்தப் பேச்சு முடியவும் சரியாக இருந்தது. வறகாப்பியை காவியா ஆத்திக் கொண்டே 'அம்மா ஆடிப்பொங்கலுக்காவது அப்பா வந்துடுமுன்னு நெனச்சம்மா ' யாருஙொப்பனா? ஆறு வருசமாச்சு எங்கப் போனா என்ன பண்றாண்ணு யாருக்குத் தெரியும். எதோ இரண்டு புள்ளையொலா ஆச்சு. ஊரு பழிக்காம குடும்பம் பண்ணி வரனுமுன்னு வரேன் என்றாள் வருத்தம் தொண்டைய அடைக்க. காவியா விடாம 'யம்மா அப்பா உயிரோடஇருக்குமில்ல' பின்னே ஙொப்பனா சாவான். வேலைக்கு பயந்தபய. அவன் பலபேரச் சாவடிப்பான்.போயி வேலையப் பாரு. நல்லநாளும் பெரியநாளும் அவன் நெனப்பக் கெளறாம. வாயை மூடிக்கொண்டாள் காவியா.வேலைகளைப் பார்த்துக்கொண்டே மனதில் கிடந்ததைக் கொட்டினாள் வைரம்.

காவியாவுக்கு பலவான நினைவுகள் ஓடின. அவளது கண்கள் செம்பட்டை கலந்த நீல நிறக்கண்கள். மஞ்சள் நிற முகம் இவை பளிச்செனறு அவள் அழகை கூட்டிக் காண்பித்தன. அதிலும் ஒரு கண் லேசானா மாறு கண்ணாக மாறிக் கொண்டு வந்தது. இதைப் பார்த்தவர்கள் மாறு கண்காரியா ஏ… காவியா மாப்புளை வருசையில நிப்பாம் பாரு. ஏ… ஆத்தா வைரம் மருமகன் ராசல்ல வரப் போறான். என்பார்கள். அப்பவெல்லம் அம்மா மகிழ்சியில் குளிர்ந்து போவாள். இதெல்லம் நினைக்கையில் சிரிப்பும் வேதனையும் மனதை ஏதோ செய்தது. கலம் ஓடையில் கடைசியா அப்பா குடும்பத்த விட்டுட்டுப் போனதுதான் மிச்சம்.

ஒத்தையா ரெண்டு புள்ளையல வச்சுக்கிட்டு வெளியில் சொல்ல முடியாது சங்கடப்படுகிறாள். என்ன பண்ணுறது வாங்கி வந்த வரம் அப்படியென மூக்கைச் சிந்திக்கொள்கிறாள். வந்தநாள் முதலாகத் தின்னச் சோறுகூட இல்லாமக் கஷ்டபட்டதுதான் மிச்சம். உள்ள நொழஞ்சுப் பொழங்குனப் பொறவுதான் தெருஞ்சுது அடுப்படி வரையும் சொசையிட்டில அடமானம் கெடக்குதுன்னு.வெளியச் சொன்னா மானக்கேடுன்னு ஒழச்சு ஓடாதேஞ்சு அத மூட்டு அதுக்கு எடையில புள்ளையெலா ஆகிப்போன காவியாவையும் சுகதேவையும் ஆளாக்கி அவள் பட்டபாடு கடவுளுக்குத்தான் வெளுச்சம். இத நெனச்சவுடன் ஏன்டா அப்பாவைப் பற்றி அம்மாவிடம் கேட்டோம் என்றானாள் காவியா. வைரமோ மனம் ஆசுவாசப்பட்டு அவளாக ஓய்ந்து குளித்துக் கொண்டிருந்தாள். பலவான யோசனையில் பொங்கல் வைப்பதற்கு அனைத்தையும் திரட்டி அழகாய் முடித்து வைத்தாள் காவியா.

மூவரும் வந்து பொங்கவச்சு சாமி கும்பிட்டு திண்ணையில் பேசிக் கொண்டிருக்கையில் வைரம்ஆரம்பித்தாள். 'காவியா காலையில புரோக்கர் ராசாதான் போனு பண்ணுனது'...' ஒரு மாப்புள சொல்லுது எனக்கும் நல்ல எடமாத்தான் தெரியுது.’ நாளைக்கு சாயங்காலம் ஒன்ன அழச்சுக்கிட்டு மாரியம்மன் கோவிலுக்கு வரச் சொல்லுது' என்றாள். 'மாரியங்கோயிலா என்றபடி' மாட்டேன்னு சொன்னா விடவாப் போவுது அம்மா என மனதிற்குள் நினைத்தவள் சரிம்மா என்றாள்.

ஏதாவது சொன்னா மறுபடியும் அம்மா பாட்டுக்கும் கத்தி பொலம்ப ஆரமுச்சுடும் எதற்கு வம்பென்று ஒத்துக்கொண்டு விட்டாள். அப்பா பொறுப்பில்லாமப் போனதுல அவள் அம்மாபாடு கஷ்டம்தான். காவியா நீ படுச்சது போதுமுன்னு ஒருநாள் வாய்விட்டேக் கத்திவிட்டாள். ஏதாவதுவொரு வேலைக்குப் போயிரும்மா, இருக்கிற அஞ்சுமா நெலத்துலையும் மூனுமாநெலம் அடவு கெடக்கு அதுவும் வெளையிற வயக்காடு அய்யாயிரம் பத்தாயிரம் கொடுத்தியென்னாக் கூட கொஞ்சம்கொஞ்சமாச் சேத்துத் திருப்பிப்புடுவேன். ஒரு ரெண்டுவருசம் பயிரு செஞ்சா வச்சுருக்கப் பவுனோடு இன்னும் கொங்சம் பவுனு வாங்கிப்புடுவேன் அது காவியாவின் கல்யாணத்துக்கு ஒத்தாசையா இருக்குமென்றாள்.

அது மாதிரியே எம்.ஏ.,பி.,எட். முடித்திருந்த காவியா அதோடு படிப்பை முடித்துக் கொண்டாள். அஞ்சாறுமாசம் வேலைதேடினாள். பின்னர் கோயம்புத்தூர் 'ஜான்பிரிட்டோ' பள்ளியில் வேலை கிடைத்தது. கிட்டத்தட்ட ஏழு வருசமாச்சு வேலைக்கு அவள் செல்லத்தொடங்கி. ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது இருவதாயிரம் கொடுக்கிறார்கள். மலை போன்ற உதவியாக இந்தப் பணம் இருப்பதாக அவள்அம்மா வாய்நிறையச் சொல்லி வருகிறாள்.

மகள் சம்பாதிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் வயது முப்பதைத் தொடப்போகும் காவியாவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். நிம்மதி மூச்சு விடவேண்டுமென்று அஞ்சு வருசமா வைரம் படாதபாடு படுகிறாள். அவளுக்கான பாடுதான் கூடுது. மாப்புள்ள முடுஞ்சபாடுல்ல இதோ அதன் தொடர்ச்சியாத்தான் இப்பவும். நாளைக்கு மாரியம்மன் கோவிலுக்குப் போகனும் என்று சொல்கிறாள். அஞ்சு வருசமா கோவில்தான் மாறுது. மாப்பிள்ளையும் மாத்திமாத்திப் பாக்க வறாங்க முடிந்தபாடுதான் இல்லை.

கிராமத்துல வீட்டுல வச்சு மாப்பிள்ளை, பொண்ணைப் பாக்க வந்தா அந்த எடம் ஒடனே முடியனும். இல்லாட்டி அக்கம்பக்கம் இருப்பவர்கள் கண்ணு காது, மூக்கு வச்சுப்பேச ஆரமுச்சுடுவாக ஏற்கனவே இருக்கிற கஷ்டம் பத்தாதான்னு அம்மா மாப்புள பாக்குறத கோவிலில் வச்சுகலாமுன்னு புரோக்கரிடம் சொல்லி விடுவாள். ஒவ்வொரு முறையும் சரிதான் போன்னு அம்மாவிற்காக மனதைக் கல்லாக்கிக் கொள்வாள்.

காவியாவப் பொண்ணுப் பாக்குறது பொண்ணுப் பாக்குறப் படலத்தோட முடுஞ்சு போறதும் வாடிக்கையாத்தான் தொடருது. டிசிட்டல் மயமான வாழ்வியலில் உலகில் உலகம் பயணித்தாலும் கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் சிலவான விடயங்கள் மாறாமல்தான் கிடக்கின்றன. அதிலும் அடுத்தவீட்டு பேச்சென்றால் அதற்குப் பல உருவங்கள் கொடுத்துப் பேசிவிடுவார்கள். அதனாலேயே, காவியாவிற்கு மாப்பிள்ளைப் பாக்குற விசயத்தில் கவனமாய் இருந்தாள் வைரம்.

மாப்பிள்ளை தேடும் படலமும் பெண் பாக்க வருகிற படலத்தையும் நினைக்கையில் உயிரில் ரெத்தம் வடிவதாக உணர்வாள் காவியா. சில சமயம், ஏன்டா இந்த பொறப்பு என்று கூட அவளுக்குத் தோனும். அவள் சங்கடபடுறது அம்மாவுக்கு தெருஞ்சா ஏக்கனவே அப்பா பண்ணிட்டுபோன வேதனையே அம்மாவிற்கு ஆறாத காயமாக் கெடக்கு நம்ம சங்கடமும் ஒட்டிக்கிச்சுன்னா ரொம்ப சங்கடப்படும் அம்மான்னு மாப்பிள்ளை வீட்டார் முன்பு சந்தப்பொருள் மாதிரி கெடந்துதான் திரும்புவாள். இப்போ இதோ அடுத்த கோவிலை மாற்றிவிட்டாள். மாறுகண்ணு மாறுகண்ணாதான் இருக்கு. ஆனா காவியாவப் பாக்க வர மாப்பிள்ளை எல்லாம் பாக்குற படலத்தோட முடிந்து போனது.

உறவினர்களும் அவளை மணம் முடிக்க ரொம்ப யோசித்தார்கள். அப்பா ஓடுகாலி. உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியல. அதனால் இந்தம்மா விதவையா சுமங்கலியான்னு ஒரு கேள்வி. இவளின் அம்மா பொறந்த எடமோ அம்மாவோட அண்ணன் பொண்டாட்டி ராச்சியம். மாமா குடும்பத்தோட ஒட்டுனா இவுங்களச் சுமக்க வேண்டும் என்று அவர்களும் தூரமாகவே விலகிக் கிடந்தார்கள். அவளின் ஒத்தத் தம்பியும் நெலத்தக் கொத்திக்கிட்டுக் கெடக்கான்.

இந்தப் பொண்ணக் கட்டுனா பொண்ண மட்டும் கட்டிக்கூட்டிப் போகமுடியாது இவுக குடும்பத்தையும் பாக்கனும். அப்பன் எங்கென்னுக் கேட்டாப் பதில் சொல்லனும். இவ்வளவு இருக்கு என்று நினைத்துதான் விலகிப் போகிறார்களோ? என்று அவளின் அம்மாவும் எல்லாத்தையும் உணர்ந்திருந்தாலும் மனசுகுள்ள போட்டு அமுக்கிக்கிட்டுப் பொம்பளப்புள்ளையக் காலத்திலேயே ஒருத்தங்கிட்ட புடுச்சுக் கொடுத்துடனும் என்பதில் தீவிரமாய் இருந்தாள். இதுநாள் வரைக்கும் காவியாவிற்குக் காதல் கல்யாணமுங்குறப் பேச்சுக்கும் இடமில்லாமதான் இருந்துச்சு.

ஊரிலும் சரி, இப்ப வேல பாக்கும் இடத்திலும் சரி யாரும் காதலச் சொல்லிக்கொண்டு கிட்டக்கூட வந்ததில்லை என்பதைவிட எதையாவது காரணம்காட்டி காதல் அவளுள் நுழைந்துவிடாபடி கவனமா இருந்தான்னுதான் சொல்லனும். ஒருமுறை அவள் அம்மா 'காவியா' காதலு அதுஇதுன்னு கல்யாணம் பண்ணப் போவையில சொல்லிப்புடாத' .. ஏக்கனவே ஙொப்பன் தேடிவச்ச அவமானம் கரையல... நீ எதாவது பண்ணிட்டு வந்து நின்னின்னா பாலுடாலக் குடுச்சுட்டு நா சாவத்தான்வேணும்’. இத அம்மா சொன்னதாலேயே காவியா காதலப் பத்தி யோசுச்சதுக் கூடக் கிடையாது. அதனால் காதல் கல்யாணம் என்கிற சாத்தியம் இல்லாதுப் போச்சு. இனியும் வாய்ப்பு இல்லேங்குறதுதான் உம்மையாகவும் இருந்துச்சு. ஒருவேள மாப்புள தேடி கஷ்டப்படையில அம்மா உள்ளுக்குள் நினைக்கிறாளோ என்னவோ தெரியவில்லை. பேசாமப்புள்ள காதலுச்சுருந்தாக் கூடக் கட்டிக் கொடுத்திருக்கலாம் என்று. ஏன்னா மாப்பிள்ளைத் தேடிப்பாடுகளில் கரைகிறாள்.

ஒருமுறை இப்படித்தான் சிங்கப்பூரில் மாப்பிள்ளை வேலை செய்கிறார் பி.ஆர் வைத்துள்ளார், அருமையானப் பையன் என்று சொல்லி இதே புரோக்கர்தான் அழைத்து வந்தார். தஞ்சை பெரியகோவில் வைத்துதான் அவளைப் பெண் பார்த்தார்கள். மாப்பிள்ளை பெண்ணை உறுதி செய்துவிட்டால் வந்துவிடுவதாகச் சொல்லியுள்ளார் என்று போட்டோவைக் காட்டி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு ஐந்து பேர் பூ பழத்தோட வந்து பொட்டு வைத்துவிட்டுப் போனார்கள்.

காவியாவின் அம்மா குளிர்ந்துதான் போனாள். ஆனாலும் அது நீடிக்கவில்லை. போனவர்கள் போனவர்கள்தான் எந்தப் பதிலுமில்ல. இதுவரையுமில்லை. இதுநாள் வரை இல்லையாகவே இருக்கிறது. நாம எந்தத் தப்பும் செய்யலையே நமக்கு ஏன் இப்படி. இந்த அம்மாவும் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் விடமாட்டேங்குது. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்க்கும் போது அவமானம் தன் மானத்த புடிங்கித் திங்கிறதைச் செரிக்க முடியவில்லை. கடவுளே, எனக்கு மரணத்தையாவது கொடேன். என்னலா முடியவில்லை என்று கடவுளை யாருக்கும் தெரியாமல் பலமுறை கையெடுத்து வணங்கினாள் என்பதுதான் உண்மை. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இறையும் ஒரு மயக்கப்புள்ளிதானே.

பல மாப்பிள்ளைக் காட்டப் புரோக்கர் தவறவும் இல்லை, விடவில்லை. அம்மாவும் விடவில்லை. இப்போ நாளைக்கு மாரியம்மன் கோவிலுக்கு மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து பார்க்க வருவதாகச் சொல்கிறாள். நாளைக்கு என்ன நடக்கப் போவுதோ அய்யனாரே என்ன இப்படி படுத்துறியே என்று வருத்தம் கொண்டாள். அம்மாவும் பாவம்தான் என்ன ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க ஓயாது ஓடுகிறாள். அவளுக்கும் வருத்தமில்லாமலா இருக்கும். அம்மாவைப் பொறுத்தவரைக்கும் சந்தோசம் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமே என்று தனக்குத்தானேச் சொல்லி வெப்பத்தில் குளித்தாள் காவியா. இப்படி வலிகள் பல பகலையும் இரவையும் நிறைத்த நெருப்புக்குழிக்குள் அவளை இறக்கிக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பொழுது பளபளவென விடிந்தது, 'காவியா எழுந்துரு பொழுது விடுஞ்சுட்டுது' என்றாள். விடியும்வரை அம்மாவும் தூங்கவில்லை என்பது அவளின் குரலே காவியாவிற்குச் சொல்லியது. 'சரிம்மா இதோ' என்று சொல்லிக் கொண்டு எழுந்து காலை வேலைகளைப் பார்த்தாள். அம்மா சொன்னாள் ஒரு மணி பஸ்சுக்கு போனாதாம்மா சரியா இருக்கும். போன தடவ வந்தப்போ ஊதாகலரு சேலை எடுத்தாந்தேல்ல அதக்கட்டு என்றாள். என்னவோ இதுவரைக்கும் அமையாது போன மாப்பிள்ளையெல்லாம் சேலை சரியில்லாமதா பிடிக்கலேன்னு போன மாதிரி என்று நினைத்தாலும் வெளியில் சொல்லாது 'சரிம்மா' என்றாள். ஒரு மணிக்கெல்லாம் கெளம்பிப் பஸ்சைப் பிடிக்க ஆலமர பஸ்டாப்புக்கு தம்பி, அம்மா, இவ மூவரும்வந்தனர். பஸ்சும் நேரத்துக்கு வந்ததால் தஞ்சாவூர் இரயிலடியில் இறங்கி அந்தப் பக்கமாக வரும் மாரியம்மன் கோவில் பஸ்சைப் பிடித்து நாலு மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போனார்கள். புரோக்கர் முன்னமேக் கோவில் வாசலில் நின்றிருந்தார்.

‘வாங்க நாங்க முன்னமே வந்துட்டோம் மாப்புளையும் அவுங்க அக்காவும்தான் வந்துருக்காங்க.’ அப்படியா? தம்பி. நமக்கு ஒரு மணிக்குதானே பஸ்சு அதபுடுச்சுதான் வந்தோம், அதான் நேரமாச்சு’என்றாள் வைரம். காவியா பின்னால் வர நாலு பேரும் கோயிவிலின் உள்ளே போனார்கள். நேராக இருந்த புள்ளையாரக் கும்பிட்டுத் திருநீரைத் தொட்டு வைத்தவள் புள்ளையாரப்பா எம்புள்ளைக்கு கன்னிப்பூ மலரனுமுடா. புள்ளையாரப்பா நல்ல வழி காட்டு என்று திருநீரை இட்டுக் கொண்டு, பிள்ளைகள் நெற்றியிலும் திருநீரை வைத்துவிட்டு மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனாள்.

புரோக்கரோ மாப்பிள்ளையும் அவரது அக்காவும் கோவிலின் உள்ளே பின்புறம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அழைக்கப் போயிருந்தார். மகமாயியைக் கும்பிட்டு வருவோம் வாங்க என்று பிள்ளைகள் இருவரையும் அழைத்துப் போனாள் வைரம். காவியாவும் அவள் தம்பியும் எதுவும் சொல்லாது, பின்னாலேயேப் போனார்கள். காவிய மாப்புள திருச்சி ஏர்போட்டுல வேல பாக்குறாப்புல, நல்ல எடம் முடுஞ்சுறனுமுன்னு நல்லா வேண்டிக்கம்மா. வைரமும் தாலிக்கட்டி மொதல்ல ஒன்னொட வாசலுக்குக் கூட்டி வாரேன்டி முடுச்சுவச்சுருடி ஆயி மகமாயி என்று மனமுருகி வேண்டி நின்றாள்.

காவியாவிற்கு மனம் பலமுறை உடைந்து கிடந்ததில் அவளுக்கு எல்லாம் சடங்கு போலவே இருந்தாலும், ஊசியென ஒரு வலி உள்ளுக்குள் இருக்கவே செய்தது. 'காவியா கொடிமரத்துக்கு வலதுகை பக்கம் பேச்சியம்மன் சன்னதி இருக்கு. அங்க போம்மா' என்றாள் வைரம். நீயும் வாம்மா' என்றாள் காவியா. 'போங்க பின்னாடி வாரேன் ' சரியென்னு சொல்லிக் கொண்டே தம்பியும் அவளும் பேச்சியம்மன் சன்னதி வந்தார்கள். அங்கு நின்ற அய்யர் விபூதித் தட்டை நீட்டத் திருநீரை எடுத்து பூசிக்கொண்டு மெல்ல நகர்ந்தாள். அப்பொழுது இளஞ்சிவப்பு சேலை கட்டிய முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்கப் பெண்ணொருத்தி அருகில் வந்து உதடு லேசா விலக சிரித்து நின்றாள்.

தூரத்தில் புரோக்கர் வருவதைப் பார்த்தவுடன், இவள்தான் மாப்பிள்ளையோட அக்காவோ என நினைக்கையில் ‘நீங்கதான் காவியாவா’ ‘ஆமா ' நீங்க ' புரோக்கர் ராசா அழச்சு வந்தாரு ஒரு வேலையாத் தஞ்சாவூரு வந்தோம். ஒரு பொண்ணுருக்கு ஒங்கத்தம்பி ஞானவேலுக்கு சரியா வருமான்னு வந்து பாருங்கன்னு சொன்னார். அதான் சும்மா அப்படியேப் பாத்துட்டு போவலாமுன்னு வந்தோம்' மனசுக்குள் திக்கென்று தீ பிடிப்பது போல் இருந்தது காவியாவிற்கு. 'சும்மா' என்று அவள் சொன்ன வார்த்தை காவியாவை ஏதோ செய்தது. சேலைக் கடையில் கூட சேலையைப் பாத்துட்டு இந்தக் காலாத்துல சும்மா வரமுடியாது. சேலையை விரித்துக் காட்டிக் கொண்டிருப்பவன் ஒரு கட்டத்தில் 'எம்மா 'நீ சேலை எடுக்க வந்த ஆளு மாதிரி தெரியலையே நகரு மொதல்ல என்று முகத்தில் அடித்தார் போல் பேசி, ஏற இறங்கக் கேவலமா ஒரு பார்வப் பாத்து, அய்யே நகரு மொதல்ல ஆளையும் மூஞ்சயும் பாரு தருத்திரம்’ என்று திட்டி அனுப்பிடுவான்.

இவங்க என்னான்னா அதுவும் ஒரு படுச்சவனுக்குப் படுச்சப் பொண்ணப் பாக்க வந்துட்டு சும்மா வந்தேங்கிறாங்க. இரவு பகலா ஏதேதோ நினைவு கோட்டக்கட்டி ஒருநா ராத்திரி பூர அம்மா தூங்காமாக் கெடந்து ஊருலருந்து இங்க வந்து வேண்டாத சாமியெல்லாம் வேண்டிக்கிட்டுக் கெடந்தா. இவுங்க என்னென்னா சும்மா என்று கதைச்சு நிக்கிறாங்க என்று யோசிக்கையில் காவியாவின் கால்கள் பின்னிக்கொண்டன. நாவு வறண்டது. சும்மாப் பாக்க வந்தோம்கிற வார்த்தையைக் காவியாவால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதுவுமே பேசமுடியாது காற்றில்லா தேசத்தில் நிற்பது போல் நின்றாள். தூரமா நீலநிறச் சட்டையும் அதற்குப் பொருத்தமான வண்ணத்தில் பேண்டும் அணிந்த ஒரு இளைஞன் அவளுக்கு நேராக வந்து கொண்டிருந்தான். அம்மாவும் தம்பியும் சற்று தள்ளி தூணிற்கு அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அதற்குள் மாப்பிள்ளையின் அக்கா காவியாவைப் பார்த்து மீண்டும் பேச்சைத் தொடர்ந்தவள் 'ஆமா நீங்க என்ன படுச்சுருக்கிங்க' என்றாள். 'நான் எம்.ஏ.,பி .எட்.,தமிழ்’ என்றாள். இதைக் கேட்டதும், ஏதோ அசிங்கத்தில் கால்பட்டது போல் முகம் ஏழு கோணலாகி என்னது ‘தமிழா?’ என்று உதட்டைப் பிதுக்கி இழுத்தபடி இந்தக்காலத்துல இதுவொரு படிப்பா? என் தம்பி டி.எம்.இ. படுச்சுருக்கான். திருச்சி ஏர்போட்டுல வேலை. பொண்ணு இங்லீசுன்னுல்ல புரோக்கர் சொன்னாரு. அதான் பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தோம் என்றவள் தொடர்ந்து என்னங்க நீங்க அதுவும் இந்தக் காலத்துலப் போயி தமிழ்ப் படுச்சுருக்கிங்க என்றதுதான் தாமதம். ஹலோ தாய்மொழிக் குறித்தப் புரிதல் இல்லாதக் குடும்பம் ஒரு குடும்பமா என்று மாப்பிளையின் அக்காவைக் கேட்டுவிட்டு வேகமாக வெளியில் வந்தாள். அருகில் வந்த புரோக்கர் ஏதேதோ அவர்களிடம் உளறிக் கொண்டிருந்தார். வாங்கியக் காசிற்கு அம்மாவிடமும் ஏதோ பேசினார். வேறு வேலையாகத் தஞ்சாவூர் வந்தவர்களை இவர்தான் நம்ம லட்சனத்தப் பாத்துட்டு பணம் பறிக்க அழைத்து வந்திருப்பாரோ என்று பலபட யோசித்தார்கள்.

நம்மல சும்மாப் பாத்துட்டுப் போகலாமென்று வந்தேன் என்று சொல்லும், இவுங்களுக்கு எவ்வளவு நெஞ்சு திமிரு இருக்கும். அத்துடன் முடிக்காது படுச்சது தமிழ் என்றதும் இருவத்தேழு கோணலா நெழியிறாங்க அவுங்களுக்குள் பேசி நக்கலா நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாங்க அவ்வளவு கேவலமா நாம? என்று நினைத்தவளுக்கு வலியும் வருத்தமும் ஒரு கோட்டில் பயணிக்க மனதை ஏதோ செய்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் ஏதோ சொல்லியபடி நகர்ந்தார்கள். புரோக்கர் பல்லைக்காட்டி விடை தந்துவிட்டு அம்மாவிடம் வந்தார். எல்லாம் சரி பொண்ணு தமிழ் படுச்சுருக்கு மாப்பிள்ளைத் தம்பி வெளியில் சொல்லிக்க முடியாதப் படிப்பால்ல இருக்கு என்கிறார்கள் என்று புரோக்கர் வாயைத் திறக்கையில் தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடுவென வந்தாள் காவியா.

ஏற்கனவேத் தயாராய் நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறினாள். புரோக்கரிடம் நின்னு பாதி நிக்காது பாதியா பேசிட்டு அம்மாவும் இவள் மனசைப் புரிந்து கொண்டவளாய் ஓடி வந்து பஸ்ஸின் பின்னால் ஏறினாள். தஞ்சாவூர் வந்து, அடுத்த பஸ் பிடித்து ஊர்வந்து சேர்ந்தார்கள். இரவு சாப்பிடப் பிடிக்கவில்லை காவியாவிற்கு. உயிர்வரை வாதை ஏதோ செய்தது. இவள் உணர்வை புரிந்து கொண்டவளாக இப்ப என்ன? உலகத்திலேயே இவன் ஒருத்தந்தான் மாப்பிளையா என்ன? என்று தனக்குத்தானேப் பேசிக் கொண்டு வேதனையைப் பிள்ளைகள் அறிந்து விடக்கூடாதென சொற்களில் கரைந்தாள் வைரம். மாறு கண்ணூ புள்ளன்னு ஊரே கண்ணு வச்சுது. இப்பப்பாரு என்று கலங்கினாள் உள்ளுக்குள்.


சரிவிடும்மா நீ வேறயாம்மா விளக்கம் கொடுத்துக்கிட்டிருக்க என்றான் மகன். மூவருக்குமாக அந்த இரவு கைநிறைய வலியைத் தந்து மெல்ல காலைப்பொழுதை சூட்டிக்கொண்டது. காவியாஅடுத்த நாள் விடியலிலேயே சாயங்காலம் ட்ரையின் சதாப்தியில் நான் கோயம்புத்தூர் போரேன் என்றபடி துணிகளையும் மற்றப் பொருள்களையும் பையில் எடுத்து வைத்தாள். ஒரு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பினாள். அவள் தம்பியும் தஞ்சாவூர் வரை வழியனுப்ப வந்தான். அக்கா எதுவும் நெனைக்காம போக்கா நமக்குன்னு ஒரு காலம் வராமலாப் போகும்என்றவனின் கையைப் பிடித்தாள் காவியா. தம்பியிடம் நிறைய பேசிக்கொண்டே அவன் முன் அழுது விடக்கூடாதெனக் கவனமாய் இருந்தாள். பிறகு அவளே நாம எதுக்கு அழுவனும்? என்ன தப்பு நாம பண்ணினோம் என்று நினைக்கையில் ஓசையை எழுப்பியபடி இரயில் வந்து ஒன்னாவது பிளாட்பாரத்தில் நின்றது.

தம்பிக்கு விடைகொடுத்து ஏறிக்கொண்டாள். பத்தரமா வீட்டுக்குப் போ', ‘அம்மாவப் பாத்துக்கோ' 'போயி நா போன் பண்றேன்' இரயில் மெல்ல வேகமெடுத்து ஒடியது. சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு அருகில் இருந்தப் பெண் ஒங்கக் கண் அழகா இருக்கு ராச வாழ்க்க அமையும் பாருங்க... என்றாள். பல வருடமாக மருத்துவர் பரிந்துரைத்தும் போடாது இருந்த கண்ணாடியை எடுத்தாள் கண்களில் அணிந்தாள். இரயில் மேலும் வேகமெடுத்து ஓடத் துவங்கியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p314.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License