இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பீட்சா வேணுமா பாப்பா?

"இளவல்" ஹரிஹரன்


நந்தகுமாருக்கு காலாற சற்று நடந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார். எவ்வளவு நேரம் தான் அந்தச் சிமிண்டுப் பலகையில் உட்கார்ந்திருப்பது... உட்காரவும் சலிப்பாக இருந்தது.

சுந்தரேசன் வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். இன்னும் வரவில்லை. இந்த வயதில் காத்திருத்தல் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவார் நந்தகுமார்.

பாவம்.. .சுந்தரேசனுக்கு என்ன கஷ்டமோ... இல்லை வரும் வழியில் வேறு யாராவது பார்த்துப் பேச ஆரம்பித்துவிட்டார்களோ... இல்லை தடுக்கி விழுந்து காயம்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாரோ என்னவோ...

'நாமே ஏதேதோ கற்பனை ஏன் செய்து கொள்ள வேண்டும்... வரும் போது வரட்டும். ரொம்ப நல்ல மனுசன்... அட... இந்த செல்போனிலேயாவது ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே...' என்று நினைத்த நந்தகுமார் தம் செல்போனை எடுக்கப் பையில் கை விட்டார்.

செல்போன் இல்லை. வீட்டிலேயே வைத்து விட்டேன் போலும் எனத் தம்மை நொந்து கொண்டார்.

அந்தப் பூங்காவைச் சுற்றி நடக்கலாம் என்று எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். மரங்களும் பூச்செடிகளுமாய் ஒரு அழகை அந்தச் சூழலுக்குக் கொடுத்திருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் நடை பயின்று கொண்டிருந்தார்கள்.

செய்ய வேண்டியதை செய்யவேண்டிய காலத்தில் செய்யாததால் வந்த செய்வினை இது என ஒரு வாக்கியம் மனதில் ஓடியது.

பரவாயில்லையே... ஓர் அழகான வாக்கியம் எதுகை மோனையுடன் அழகாய்த் தோன்றுகிறதே... கவிதை எழுதலாம் போலிருக்கிறதே என்று தம்மைத் தாமே மெச்சிக் கொண்டார்.

இதற்குள் ஒரு சுற்று பூங்காவைச் சுற்றி முடித்திருந்தார். இன்னும் சுந்தரேசன் தான் வரவில்லை. சரி... இரண்டாவது சுற்றும் போகலாம் என அடி எடுத்து வைத்தார்.

அப்போது அடர்ந்த கொஞ்சம் இருளான பகுதியில் இருந்து ஏதோ முனகும் பெண் குரல் கேட்டது. அதோடு கடுமையான கரகரத்த ஆண் குரலும் கேட்டது.

அந்தப் பகுதியில் மட்டும் சிறிது நடமாட்டம் குறைவாக இருந்தது. பொது இடம் தானே... இந்த மாதிரி இடங்களுக்கு உல்லாசம் தேடி வருபவர்களும் உண்டு. இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்வதும் உண்டு. இந்தக் கருமங்களையெல்லாம் கண்டும் காணாமல் போவது மக்களின் பழக்கமாகி விட்டது. அதனால் தான் இந்த மாதிரியான ஆட்களுக்குத் தோதாக இப்படி இடங்கள் அமைந்து விடுகின்றன.


சரி... இதெல்லாம் நமக்குத் தேவை இல்லை, கடந்து போவோம் என்று நடை போட்டார்.

ஆனால் அவரைத் தடுத்து நிறுத்தியது அந்தக் குரல். அது பெண் அல்ல, ஒரு சிறுமியின் குரலாகக் கேட்டது.

ஏதோ தப்பு நடக்கிறதோ... எதற்கு நமக்கு வம்பு என எண்ணினாலும் நந்தகுமாருக்கு அங்கு நடப்பது என்ன என்று தெரிந்துகொள்ள ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. இருந்தும் இந்த வயதில் எதற்கு ரிஸ்க். அக்கம் பக்கம் பார்த்தார், ஒரு நடுவயது இளைஞன் வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை... 'தம்பி.....கொஞ்சம் என்னோட வர்றீகளா... அந்த இடத்திலே ஏதோ தப்பு நடக்கற மாதிரி தெரியுது... நீங்க வந்தீங்கன்னா என்ன ஏதுன்னு பார்த்திடலாம்... வாங்க தம்பி...'

அந்த இளைஞன் நந்தகுமாரை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஏதோ ஒரு அருவருக்கத்தக்க பூச்சியைப் பார்ப்பது போல, "சார்.... உங்களுக்கு எதுக்கு சார் வீண்வேலை... எங்கேயோ ஏதோ ஒன்னு நடக்குதுன்னா நாம ஏன் சார் நம்ம மூக்கை நுழைக்கணும்... இவ்வளவு வயசாகுது... நீங்க எதுக்கு அவங்க அந்தரங்கத்திலே தலையிடனும்... உங்க வேலையைப் பார்த்துட்டுப் போய்க்கிட்டே இருங்க சார்..." என்று முறைத்தவாறு சொல்லி நகன்றான்.

நந்தகுமாருக்கு ஏன்டா அந்த இளைஞனை அழைத்தோம் என்றாகி விட்டது. ச்சேய் என்று தம்மையே நொந்து கொண்டார். வேறு யாரையாவது அழைக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. ஆனால் சுற்றிலும் இங்குமங்கும் செல்பவர்கள் அவரவர் வேலையில கவனம் கொண்டு இருந்தனர். யாரையாவது அழைக்கப் போய் அந்த இளைஞனைப் போலப் பேசிவிட்டால என்ன செய்வது!

இப்போது அந்தச் சிறுமியின் முனகும் குரல் சற்று உரக்கக் கேட்டது.

நந்தகுமார் சற்று துணிந்து அந்தச் செடியருகே சென்று, 'டேய் யார்றா அங்கே... என்ன நடக்குது!' என்றவாறே எட்டிப் பார்த்தார்.

அங்கே நடப்பது கண்டு அதிர்ச்சியானார்.

ஐம்பது வயதுக்கு மேலே மதிப்பிடத்தக்க ஒரு மனிதன் தன் மடியில் ஒரு சிறுமியை அமர்த்தி வைத்து இறுக அணைத்துக் கொண்டிருந்தான். படக்கூடாத இடங்களில் எல்லாம் அந்தச் சிறுமியின் மேனியில் அவனது கரங்கள் தடவிக் கொண்டிருந்தன.


வயதுக்கு மீறிய வளர்ச்சி அந்தச் சிறுமியின் மேனியில் தெரிந்தது. எல்லாம் ஜங்க் புட்டின் கைங்கர்யம். அவனது அருவருப்பான செய்கை கண்டு நந்தகுமாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

'அடப்பாவி... பச்ச மண்ணைப் போயி இப்படி நாசம் பண்றியே... உன் வீட்டிலே பொம்பளப் பிள்ளைகளே இல்லியாடா... உன் பேத்தி வயசிருக்கும் அதப் போயி... ச்சே..." என்று கத்திக் கொண்டே, கையில் கிடைத்த கல்லை அவன் மீது எறிந்தார்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்தக் கயவன் மண்ணை அள்ளி நந்தகுமார் மீது வீசி எறிந்தான். சிறுமியை விடுவித்தபடி, நந்தகுமாரை நோக்கி ஓடிவந்தான்.

"ஏய்... கிழவா... உனக்கென்னடா ஆச்சு... நான் ஏதாச்சும் பண்றேன்... உனக்கென்ன உன் வேலையைப் பார்த்துட்டுப் போவியா... ஏதாச்சும் சவுண்டு விட்டே அவ்வளவுதான்... கழுத்தை அறுத்துருவேன்..."

கத்தியைக் காட்டி மிரட்டினான்...

அதற்குள் அந்தச்சிறுமி ஓடி வந்து நந்தகுமாரின் பின்னே ஒட்டிக்கொண்டது.

"ஏய்... இங்கே வா... அந்த ஆளுகிட்டே ஏன் போறே... என்கிட்டே வந்துரு..."

"போ... வரமாட்டேன் போ... பீட்சா வாங்கித் தர்றேன்னு கூட்டிட்டு வந்து இங்கே மடியிலே உட்கார வச்சித் தப்புத்தப்பாக் கைய வக்கிறே.....முத்தங் கொடுக்கறே... ச்சே... த்தூய்..." என்று துப்பினாள் அந்தச் சிறுமி.

இதற்குள் அந்தத் தடியன் சிறுமியைப் பிடிப்பதற்காக, நந்தகுமார் மீது பாய்ந்தான்.

நந்தகுமார் பலங்கொண்ட மட்டும், 'போலீஸ்... போலீஸ்...' என்று கத்தியவாறு தம்மைத் தாக்க வந்த தடியனைத் தடுத்து தம் இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

"ஹெல்ப்... ஹெல்ப்... போலீஸ்... போலீஸ்..." என்று கத்த, அந்தச் சத்தம் கேட்டுச் சிலர் ஓடி வந்தனர்.

ஆட்கள் வருவது கண்டு நந்தகுமாரின் பிடியில் இருந்தவன் திமிறிக் கொண்டு அவரைக் கீழே தள்ளி விட்டு ஓடி விட்டான்.

கீழே விழுந்ததில் நந்தகுமாருக்குத் தலையில் அடிபட்டு நினைவிழந்தபடி மயங்கிப் போனார்.

எமதூதர்கள் இருவர் நந்தகுமாரை இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். முன்னால் தர்மராஜன் பாசக்கயிற்றில் நந்தகுமாருடைய உயிரைச் சுற்றிக் கொண்டு பம்பரம் சுற்றி விளையாடுவது போல விளையாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் எமகிங்கரர்கள் சூழ நந்தகுமார் பயந்து நடுங்கியபடி இருந்தார்.

"ஹேய்... நந்தகுமார்... ஒன்னுமில்லே... சின்னக்காயம் தான்... துணிச்சலான ஆளுவே நீரு... ஒரு சின்னப்பொண்ணு சீரழியுறதிலே இருந்து காப்பாத்திட்டீரு ஓய்..."

'அட... எம கிங்கரர்களைக் காணோமே... யாரு அது டாக்டர் ஸ்டெத்தைச் சுழற்றியவாறு சென்று கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு குரல்... அது யாரது...ஓ...'

சுந்தரேசன் குரல் போலக் கேட்டது. நந்தகுமார் மெல்லக் கண்விழித்தார்... மருந்து நெடி வீசுகிறது...

இதென்ன தலையிலே கட்டு... ஓ... பாண்டேஜ் போட்ருக்காங்க போல... எனக்கு என்ன நடந்தது...

அந்தச் சிறுமி எங்கே... அந்தத் தடியனக் காணோமே... அவன் எங்கே... நந்தகுமார் படுக்கையை விட்டு எழுந்தார். எதிரில் சுந்தரேசன் நின்றிருந்தார்.

"ரிலாக்ஸ்... நந்தகுமார்... ரிலாக்ஸ்... டாக்டர் மருந்து போட்டு கட்டியிருக்காங்க....அந்தத் தடியன போலீசிலே பிடிச்சுக் கொடுத்தாச்சு... போக்சோ சட்டத்திலே கேஸ் பைல் பண்ணியிருக்காங்க... நல்லவேளை, சம்பவம் நடந்துகிட்ருக்கும் போது நான் வந்தேன்... நடக்கறத அனுமானிச்சு உடனே போலீசுக்குப் போன் போட்டேன்... பொதுமக்கள் அந்தத் தடியன தப்பவிடாம போலீசு கிட்டே ஒப்படைச்சிட்டாங்க...

"... அப்ப... அந்தக் குழந்த... சிறுமி எங்கே...?"

"அவளுக்கும் இப்ப சிகிச்சை பண்ணிகிட்ருக்காங்க... பாத்தா... அந்தக் குழந்தை எங்க வேலைக்காரியோட குழந்தையா இருக்கு... உடனே அவளையும வரவழைச்சி சிறுமிய அவகிட்டெ ஒப்படைச்சிட்டேன்... இப்ப உங்கள டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிக்கிட்டுப் போகலாம்னுட்டாங்க... உங்க வீட்டுக்கும் போன் பண்ணி உங்க பையன்கிட்டெ தகவல் சொல்லிட்டேன்..."

சுந்தரேசன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு காவலர் வந்து, "சார்... ஸ்டேசன் வரைக்கும் வந்து ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்திடுங்க சார்... மத்தத நாங்க பாத்துக்கறோம்..." என்றார்.

இதற்குள் நந்தகுமாரின் பையன் ஓடி வந்தான். "அப்பா.....என்னாச்சிப்பா.... உங்களுக்கு... எதுக்குப்பா இந்த வீண் வேலை... இப்பப் பாருங்க மண்டையிலேயும் அடிபட்டு, போலீசுக்கும் அலைய வேண்டியிருக்குமே... எவன் எக்கேடு கெட்டா... நமக்கென்னப்பா..." என்று கேட்க,

சுந்தரேசன்தான் அவனை ஆசுவாசப்படுத்தினார்.

"தம்பி... பதறாதிங்க... நாட்டிலெ நாம இந்த மனநிலையிலே இருக்கறதாலே தான் இங்கே எல்லா அநியாயமும் தடையில்லாம நடக்குது. உங்கப்பா... இந்த வயசிலேயும் இங்கே நடக்கற அநீதிய, கொடுமையக் கண்ண மூடிப் பாக்காம போயிருந்தா... ஒரு பெண் பிள்ளையோட எதிர்காலமே பாழாப் போயிருக்குமில்லியா... உங்கப்பா... அப்படியில்லே... தைரியமா தட்டிக் கேட்கப் போயி தான் இந்த அநியாயத்தத் தடுத்திருக்காரு... அந்தப் புள்ளையத் தன் பேத்தியா நினச்சிக் காப்பாத்தி இருக்காரு. உன்ன மாதிரி இளைஞர்கள் இப்படிப் பாராமுகமாப் போறதாலத் தான் நாடு சீர்குலையுது... நடக்கற அநீதிய நம்மால முடிஞ்சமட்டும் எதுத்துட்டாப் போதும்... அப்றம் அந்த நீதியே தன்னையும் தன்னைச் சார்ந்தவங்களையும் காப்பாத்திரும்..."

"தாத்தா.... தாத்தா..." என்றவாறே நந்தகுமாரை நோக்கி அந்தச் சிறுமி ஓடி வந்தது. கூடவே அவளது தாயும்.

"வாம்மா... அஞ்சல... குழந்தைக்கு இப்பப் பரவாயில்லையா..." சுந்தரேசன் கேட்க, அஞ்சலையோ நந்தகுமாரின் காலைப் பிடித்தபடி கண்ணீர் சிந்தினாள்.

"அய்யா... உங்களாலே தான் எம் பொண்ணு உசிரு பொழச்சது... இல்லே அந்தப்பாவி இவளைச் சீரழிச்சிருப்பான்... எல்லாம் இவளாலே தான்... அந்தப் பீட்சா ஆசையிலே தான் இவள ஏமாத்திக் கூட்டிட்டுப் போயிருக்கான்... தடிப்பய... எங்க தெருவிலே சுத்திக்கிட்டிருப்பான்... அப்பப்ப இவளுக்கு மிட்டாயி, பழம்னு ஏதாவது வாங்கிக் கொடுப்பான்... அப்பவும் நான் சொல்லியிருக்கேன்... இந்த மாதிரி கண்டவங்க கொடுக்கறத வாங்கக் கூடாதுன்னு... ஆனாலும் நான் ஏமாந்துட்டேன் அய்யா... நீங்க தான் தெய்வம் மாதிரி வந்து காப்பாத்திட்டீங்க உங்க பேத்தியக் காப்பாத்துற மாதிரி... இந்த சென்மத்துக்கும் மறக்க மாட்டேன் அய்யா..."

"அப்ப... அடுத்த சென்மத்துக்கு மறந்துருவியாக்கும்..." என நந்தகுமார் சிரித்தார்.

நந்தகுமாரின் பையனும் அது கேட்டுச் சிரிக்க, சுந்தரேசன் அவனோடு சேர்ந்து சிரித்தார்.

அஞ்சலையும் அவள் மகளும் வெட்கப்பட்டு ஒன்றும் புரியாது நின்றபடி சிரித்தனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p315.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License