இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

நம்ம ஊரு இருக்குன்னு...

இந்திரா அரசு


சன்னல் வழியே உள்நுழைந்த ஒளி விடியலை உணர்த்தியது. பறவைகளின் ஒலி வெளியை நிறைத்துக் கொண்டிருந்தது. உறக்கம் கலைந்து விழியைத் திறக்கையில் ஒலியெழுப்பிய அலைபேசியை எடுத்தான் உதயன். அலைபேசியின் திரையானது 'மாமா சேது' எனக் காட்டியது. அதிகாலை... அதுவும் உறவுகளின் அழைப்பு என்றாலே பதட்டம் ஒட்டிக்கொள்ளவேச் செய்யும். உதயனையும் அது விட்டுவைக்கவில்லை, கட்டியிருந்த கைலியை சரிசெய்தபடி 'சொல்லு மாமா 'என்றான். அவன் பதட்டம் பொய்யாகவில்லை.

‘எப்படி மாமா’ ஓ !அப்படியா? நல்லாதானே இருந்துச்சு. முந்தாநாள் ஊருக்குப் போயிருந்தேன். பாத்துட்டுதானே வந்தேன். என்ன இப்படி ஆயிபோச்சு என்று வருந்தியவன் சரி மாமா வந்துவிடுகிறேன் என்று உதயன் பேச்சை தனது மாமாவுடன் முடிக்கையில் மனைவி கண்மணி 'யாரு’ என்ன என்றாள். சிந்தாமணி சின்னம்மா செல்லம்பட்டியில இருந்துச்சுல்ல அது தவறிப் போச்சாம்'

'நல்லாதானேங்க இருந்துச்சு 'அதுவாத்தான் ஆஸ்பத்ரிக்கு நேத்து போச்சாம் ராத்திரி கூட நல்லாத்தான் இருந்துச்சாம். ஒரு ரெண்டு மணி வாக்கில் நெஞ்சுவலின்னு சத்தம் போட்டுருக்கும் போலருக்கு... பக்கத்துல இருக்குறவுங்க ஓடியாந்துப் பாக்குறத்துக்குள்ள நின்னு போச்சு போலருக்கு'என்றவனிடம் மனைவி கண்மணி கேட்டாள்.

‘ஏங்க அவுங்களுக்கு மூனும் பசங்கதானே' மூனும் பெயலுகத்தான் ஒருத்தரும் அதப்பாக்கல. கல்யாணம் பண்ணிகிட்டு அவனவன் தனியாப் போயிட்டான்.

எங்க சித்தப்பா இருக்க வரைக்கும் சிந்தாமணி சின்னம்மா சின்னராணி மாதிரிதான். அவரு போனப் பொறவு அது வாழ்வு... அத எப்படிச் சொல்லறது ,ரொம்ப சங்கடம் என்று வேதனைப்பட்டான். உதயன் பள்ளி கொடம்விட்டோன்ன சாப்பாட்டுக்குச் சாயந்திரம் அங்கதான் ஓடுவான். அவன் சித்தப்பா மாட்டு வியாபாரி. கூடவே விவசாயம் நல்ல சில்லற. சுடச்சுட சாப்பாடு அதுவும் தினம் முட்ட வறுவல், கருவாட்டு வறுவலுன்னு சுவை நாவில் ஒட்டரசுச்சுருசுச்சு தினம் சாப்புடுவான். அவன் சின்னம்மாளும் அப்டி அருமையாச் சமைப்பாள். அவனுக்குச் சாப்பாடு போட ஒருநா கூட மொகத்தக் காட்டியது இல்லையவள். அவன் அம்மா கூடச் சொல்லுவா, ஏன்டாஅவளத் தெனம் போயி தொந்தரவுப் பண்ணுறேன்னு. அதுக்கு அவன் சின்னம்மா கூட ஒரு தரம் திட்டிபுட்டா. புள்ள கைசோறுதான் சாப்புடுறான். அதுலயா நான் கடங்காரியா போயிடுவேன் விடுக்கா என்று அவன் அம்மாவைப் பலமுறை கடிந்து கொண்டதுண்டு அவள். உதயனின் அம்மா, இப்ப செத்துப் போன சிந்தாமணி சின்னம்மா, இன்னொரு சின்னம்மா சீத மூவரும் ஒரே ஊரில்தான் அடுத்தடுத்த தெருவில் வாக்கப்பட்டிருந்தார்கள். அதனால் மூவரும் அருகருகில் ஒன்றாகவே இருந்தார்கள்.

உதயனின் அம்மா இரண்டு வருசத்துக்கு முன்னாடிதான் தவறியிருந்தாள். இப்போ பாசத்தக் கொட்டும் சிந்தாமணி சின்னம்மாவும் போச்சு. இப்படி சின்னம்மா இறப்பு, அம்மாவின் இறப்பென யாவும் ஒன்னாக வந்து அவன் மனதை இறுக்கிப் புடிக்க, உதயனின் கண்கள் கலங்கியது. அதற்குள் அடுக்களையில் நின்றிருந்த கண்மணி, ‘ஏங்க எத்தன மணிக்கு போவோமுன்னு கேட்டேனே காதுல விழலயா'


'போக வேண்டியதுதான் புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு' அதன்படியே சாப்பாடெல்லாம் ரெடி பண்ணி அனுப்பிட் டுஅங்கு போவதற்கு மணி ஒன்பதாயிருந்தது.

போனவுடன் அவனின் இன்னொரு சின்னம்மா சீத அடித்துக் கொண்டு கத்தினாள். அந்தச் சின்னம்மாவைப் பொறுத்தவரைக்கும் இரண்டு அக்காக்களும் போயிட்டாங்களேங்ற ஆதங்கம். அவன் மாமாக்கள் இருவரும் முன்னமே அங்கு வந்திருந்தனர்.கோனூர்நாட்டில் ஒரு ஊருதான் செல்லம்பட்டி. கோனூரு பதினெட்டுக் கிராமங்களைக் கொண்டது. நல்லதோ கெட்டதோ கூட்டம் தாங்காது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு முறையில் உறவுக்காரர்களாக இருப்பார்கள். ஆரம்பத்தில் நாட்டுக்குள்ளேதான் பெண் எடுப்பார்கள், பெண் கொடுப்பார்கள். நாளடைவில் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக உயர்வு அடிப்படையில் வெளியில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் புழக்கத்திற்கு வந்தது. உதயன் மனைவி கூட அப்படித்தான் கோனூரில் பிறக்காதவள். அதிகப்படியான உறவுகள் அனைவரும் உள்ளூர் என்பதால் நிறையபேர் துக்கம் விசாரிக்க வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தனர்.

இதற்கிடையில் மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்மணியின் அம்மா, அப்பா உஅறவுக்காரர்களென நிறைய பேர் வந்திருந்தனர். வரும் போதே அவர்கள் ஒரு பெரிய கேன் நிறைய வரும் வழியில் டீ வாங்கி வந்திருந்தனர். அவர்கள் சம்மந்திமுறை என்பதால் அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டு வந்தனர். உதயன் அருகில் இருந்த அடர்ந்த மாமர நிழிலில் அமரலாமெனப் போனான். உடன் அவனின் இன்னொரு சின்னம்மா சீதையும் எழுந்து வந்தாள். போகும் போதே எப்பா அடிக்கிற தப்பையும், கிட்டியையும் கொஞ்சம் நிறுத்தி அடிங்க என்றபடி போய்க் கொண்டிருந்தாள். அதற்குள் துக்கம் விசாரித்துவிட்டுப் போகும் பெண்களில் ஒருத்தி ஆமாஙொக்கா மருமகளுக அந்தாயி இருக்கையில ஒருவா சோறு போடலனுட்டாளுக இப்ப செத்தவ சூத்துல எதையோ வச்சு ஊதுனக்கணக்கா ஆளுக்காளு பெரும பாராட்டிக்கதப்பு, கிட்டியடி, ஒப்பாரின்னு நெறுதுளியாவுது என்று சொல்லிக் கொண்டே த்தூ….. எனத் துப்பிவிட்டுப் போனாள். இவளுக்கு மனசு சங்கடமாக இருந்தாலும் அதுதான் உண்மை. இவள் பக்கத்தில் இருந்ததால் அவள் அக்காவைப் பார்த்துக் கொண்டாள். மூனு மருமவ பேரும் நீ பாரு நா பாருன்னு ஒருத்தரும் பாக்க மாட்டேனுட்டாளுவ. போறவுங்க சொல்றது மாதிரி இப்ப பொறந்த வீட்டு பெருமையக் காட்டவட்டங்கட்டி அடிக்கிறாளுவ என்று புலம்பியவளை' 'சரிவிடு' கொஞ்சம் உக்காரென அவளை உதயன் அருகில் ஒக்கார வைத்து ஒரு டம்ளரில் டீயையும் கொடுத்தான். டீயை வாங்கியவள் காலையிலேயே தலவலி வந்துடுச்சுப்பா, இவனுவ தப்படிக்கிற அடியில என்றபடி தலையில் சூடான டீ டம்ளரால் ஒத்தடம் வைத்தாள்.

அப்பொழுது, 'ஏய் உதயா எப்படிடா இருக்கே' என்று பால்யகால நண்பன் பரமன் கேட்டபடி அருகில் வந்தான் .'ம் நல்லாருக்கேன்' நீடா, 'நல்லாருக்கேன் ' சின்னம்மா நீ' என்று கேட்ட பரமனிடம். நீதான் ஊரவிட்டுப் போயிட்டே... காசு பணம் கூடிப் போச்சுகண்ணு தெரியுமா உனக்கு என்று கூறிக்கொண்டே 'ஆமா எப்ப வந்தே' என்றவளிடம் பத்துமணியிருக்கும் என்று கூறிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த தலவலி தைலத்தை அவளிடம் கொடுத்து இத தேயி சரியாப் போயிடும் என்றவனைப் பார்த்து உதயன் கேட்டான் 'ஏன்டா பரமா உன் புள்ளைங்க பெரியபசங்களா இருப்பானுவளே '

'ஆமாடா பொண்ணு பாத்துகிட்டு இருக்கேன்' இரண்டு பெயலுகதானே ஒனக்கு என்றவனிடம் 'ஆமா' ஒருத்தன் சிவில் படுச்சான். இன்னொருத்தன் மெக்கானிக் படுச்சான். பெரியவன் ஸ்டார் புரோமோட்டர்ஸ் என்ற பெரிய கம்பனியில் எம்.டி. சின்னவனும் நல்ல சம்பளத்துக்குப் பெரிய கம்பனியில வேல பாக்குறான். சென்னையில் ரெண்டு வீடு வாங்கிருக்கேன். கார் வச்சிருக்கேன். நல்ல சௌரியமா இருக்கேன் என்று இயல்பாய் பலவற்றைப் பேசினான்.

உதயனும் தஞ்சாவூரில் உள்ள வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறான். தஞ்சாவூர் அருளானந்தம் அம்மாள் நகரில் அவனது வீடு. மனைவி கண்மணி திருக்காட்டுப்பள்ளியில் பிறந்தவள். இவர்களுக்கு ரெண்டு பிள்ளைகளெனக் கச்சிதமானக் குடும்பம்.

பரமனோ நிறைய படித்தவன் இல்லை. ஊரில் கொஞ்சம் வறுமையான சூழல் நிலவிய போது மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை போனவன். எப்படியும் சென்னை போய் முப்பது வருடங்கள் இருக்கும். ஒரு சவுளிக்கடையில் வாட்சுமேன் வேலை பார்த்தான். தேவை, திருநாள் என்றால் ஊருக்கு அவ்வப்போது வந்து போவான். இப்பவும் ஒரு சோலியாத்தான் ஊருக்கு வந்திருந்தான். பல வருடம் ஆச்சு அவன் ஊரு பக்கம் வந்து .அப்படியே துக்கம் என்றவுடன் உதயனைப் பார்க்க நேர்ந்தது பரமனுக்கு. அதற்குள் உதயனின் சின்னம்மா 'ஏ பரமா ' 'பெயலுக நல்லா சம்பாதிக்கிறானுவங்கிற நம் ஊரு பக்கமே பொண்ணு எடு' என்றாள்.

யாரு எம் பயலுகளுக்கா இங்க பாரு எம் பசங்கள என்று அலைபேசியில் இருந்த பசங்க போட்டோவைக் காட்டி இளவயசுல கமலகாசன் இருந்தது மாதிரி இல்ல என்றான். பார்ப்பவர்கள் இல்லை என்று சொல்லாத அளவுக்கு அழகாய்த்தான் இருந்தார்கள் இரண்டு பையன்களும்.

இருக்கட்டும், நம்ம ஊருகளிலும் நல்ல பொண்ணுங்க இருக்குப்பா. அதுகளுக்கும் நல்ல வாழ்க்கை கொடுத்ததா இருக்கும். நாமும் ஒட்டுவொறவுன்னு நல்லது கெட்டதுன்னு ஒன்னு மண்ணுமா இருக்கலாம்' என்றவளிடம் 'அட நீ வேற. அவனுங்க நாம கிராமத்தை சேந்தவிங்கன்னு சொல்லாதப்பா ஊருஊருன்னு பொழுதெனைக்கும் பினாத்தாத இங்கே செட்டிலாகி இருக்க குடும்பமாப் பாத்து பொண்ணு பாக்கலாம். கிராமத்து நாட்டுக்கட்டையெல்லாம் வேண்டாம். மொதல்ல கொஞ்சம் கெடக்கிற நெலத்தையும், கட்டுமனையும் வித்துட்டு இனி ஊருக்கு போறத மறத்துடுன்னுதான் அனுப்பி வச்சாங்கே என்றான் பரமன்.

இப்படிச் சொன்ன பரமனிடம் நீ பாட்டுக்கும் அங்க இரு. பெயலுகதான் சம்பாதிக்கிறாங்கே காசு தேவல்ல பிறகெதுக்கு வித்துக்கிட்டு என்றவளிடம் அவனுங்கதான் ஊரு நாத்தமே வேண்டாங்கிறாங்க நானும் யோசிச்சேன் 'கெட்டாலும் பட்டணத்துக்கு ஈடான்னு 'அங்கேயே இருக்க வேண்டியதுதான் .பெயலுக இருக்க இருக்க இன்னும் மேலத்தான் போவானுக இப்பவே பொண்ணுக பெரிய பெரிய எடுத்துலேர்ந்து வருது அதுல நமக்கு ஏத்ததாப் பாத்து, பொண்ணு கட்ட வேண்டியதுதான் என்று நகரத்தின் பல அனுபவங்களை பேசிச் சிரித்தான்.

ஒருத்தனுடைய உண்மையான வளர்ச்சிங்கிறது அவனின் பிள்ளைகளின் திறனும் செயலும்தான். பிள்ளைகள் நல்லபடியா புத்திக் கூர்மையா வளந்துட்டா அவனுக்கு எல்லாச் செல்வமும் ஒன்னா வந்து சேருங்கிறது எத்தனை உண்மையாயிற்று பரமனின் வாழ்வில் என்பதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்த உதயன். 'நல்லாருடா நல்லாரு' என்று பரமனின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

இதோ இந்தக் காரு கூட இப்பத்தான் வாங்குனேன். ஏற்கனவே இருந்த பழைய கார மாத்திட்டு என்றான் பெருமை தாங்காது. இதைப் பெருமைக்கா சொல்லலடா உதயா எனக்கு இனி எந்தப் பஞ்சமும் இல்லேப்பா என்றவனிடம் உதயனின் சின்னம்மா காலம் ஒன்னு போல இருக்காதுப்பா என்றாள்.

'அட போ சின்னம்மா நீ 'காலம் பெரிய பொல்லாத காலம். பணம் இருந்தால் ஆகாயம் கூட நம்ம கையிலதான் '. ம் இருக்கப்பட்டவன் பேசுற கேக்கத்தானே வேணும் என்றவளிடம், இல்ல சின்னம்மா ஒலகம் அப்படித்தானே போயிட்டுருக்கு. ‘பரமாபணத்தால எல்லாத்தையும் வாங்கிற முடியாது’. ‘படுத்தா விழுந்தா ஒறவுன்னு வேணும்’. ‘அட அப்படியெல்லாம் ஒன்னுமில்ல’ பணத்த வீசுனா எல்லாம் தானா வரும் என்றான் அவர்களைப் பேசவிடாது. ஏ யப்பா பணம் நல்லாவேப் பேசுதுடா என்றாள்.

அதற்குள் இறப்பு வீட்டில் வருவோர் கூடிப் போனதால் எழுந்து சவம் கிடக்கும் இடத்திற்குக் கிளம்பினாள் உதயனின் சின்னம்மா. கிளம்பியவளை கொஞ்சம் இரு போவலாம் ராத்திரிலேர்ந்து அழுது மூஞ்சி வீங்கிக் கெடக்கு தலவலி வேறேங்கிற ஒக்காரு என்று கையை இழுத்து ஒக்கார வைத்தான் பரமன். அதற்குள் பெண்கள் கூட்டம் இலவு வீட்டில் நிறைந்தது.

பெண்களுக்கு துக்கவீடுதான் இப்பவரைக்கும் அவரவர் சுமைகளை இறக்கி வைக்கும் இடங்களாக இருக்கின்றன. கல்யாணம் காதுகுத்துக்குக் கூட ஒதுங்கிக் கொள்ளும் பெண்கள் துக்கவீட்டை ஒதுக்குவதில்லை. துக்கத்தை ஒதுக்கக்கூடாது என்ற ஒரு முறை இருந்தாலும், நகை நட்டென்று பெரிய ஆடம்பரத்தை அங்கு யாரும் அள்ளிக் கொண்டு வருவதில்லை. கட்டுனது கட்டுனபடியே போட்டது போட்டபடியேதான் ஓடி வருவார்கள். அதனால் பெண்கள் பெரிதாக தனது ஏழ்மையையோ வசதியையோ அவ்வளவாக அங்கே முன் வைப்பதில்லை. அலங்காரம் அவ்வளவாக இல்லாது கலந்து கொள்ளும் இடமாக இறப்பு வீடு இருக்கிறது. கண்ணீரால் அவரவர் துயரங்களுக்கு ஒரு வடிகால். சொந்தம் பந்தமுன்னு ஒன்னாச் சேந்துக்குற எடமும் அதுவாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் சொல்லனுமுன்னா சுமைகளை இறக்கி வைக்கும் களம்தான் துக்க வீடு பாதிக்கு மேலான பெண்களுக்கு.

துக்க வீட்டில் நின்னுகிட்டிருந்த பெண்ணொருத்தி 'அந்த அத்த என்னா பண்ணுது மரத்தடியில கொஞ்சம் வாங்க இங்கே நெறநாழி வாங்கனுமா அதுக்கு வெளக்கு படியெல்லாம் எடுக்கனும். கொஞ்சம் வாங்க எழுந்துதுருச்சு' என்றதும் 'ஏ ஆயா இதோ வர்றேன்... இவ போடுற சத்தத்துல இவ எனக்கு மாமியாளா இல்ல நானா இவளுக்கு மாமியாளான்னு தெரியல' அது அப்புற வச்சுக்குவோம்' வாங்க நீங்க என்றாள். நிறைநாழி வாங்குதல் என்பது இறப்பு வீட்டில் நடக்கும் ஒரு சடங்கு. இறந்தவர்களின் மூத்த மகனும், அவனது மனைவியும், இல்லையேல் இறந்த வீட்டில் அவர்களின் மகன்களில் எந்த மகன் எந்த வீட்டில் வசிக்கிறாரோ அவரும் அவரது மனைவியும் குளித்துவிட்டு ஈர உடையுடன் வருவர். நிறை நாழியை இறந்து போனவரின் கையில் கொடுத்து கணவன் மனைவி கைகளைப் பின்புறமாக விரிக்கச் சொல்லி அவர்களின் கைகளில் நிறைநாழி எனப்படும் நெல் நிரம்பியப் படியையும் அதன் மேலே விளக்கையும் ஏற்றி வைத்துப் பின்புறம் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் கொண்டு போய் நடுவீட்டில் வைக்கச் சொல்வார்கள். இதன் நோக்கம் அந்த வீட்டின் செல்வம் இறந்தவர்களோடு போய்விடாது அதே வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமென்பதேயாகும். இதை ஏற்பாடு செய்யத்தான் அந்தப் பெண் உதயனின் சீத சின்னம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சீதையும் கூப்பிட்டவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே எழுந்தாள். எழுந்தவளின் கையைப் பிடித்த பரமன் ‘சின்னம்மா ஒரு சேதி’ ‘என்னப்பா சொல்லு’என் கட்டுமனையையும், பாலத்துக்கும் கெழக்க ஒரு ஏக்கர் நெலமும் கெடக்குல்ல இரண்டையும் வாங்க ஆளுருந்தா பாத்துவை சின்னம்மா ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் சென்டு வாரேன் என்றான்.

'அதான் நான் சொல்லி கேக்கல. பாப்போம் வாங்கவா ஆளுல்ல வித்துக்கலாம். இந்தா எம்புள்ள உதயனே வாங்கிக்குவான். அக்கம்பக்கம் விக்கிற வெலதானே நீ போயிட்டு வா'அவள் சொன்னது போலவே உதயனே அந்த நிலத்தையும், கட்டுமனையையும் அடுத்து வந்த ஆறுமாதத்தில் வாங்கிக் கொண்டான்.

காலங்கள் ஓடியது. ஓடிய வாழ்க்கையில் இவையெல்லாம் என்னவோ நேற்று நடந்தது மாதிரி இருக்கு என்ற யோசனையில் பின்னோக்கிச் சென்று அனைத்தையும் மீட்டுக் கொண்டிருந்தான் உதயன். கரண்டுதான் இருக்கே என்னடீ . விசத்தத்த காணல என்று கொல்லபுறம் நின்னவள் வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தபடி உதயன் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்தாள் அவன் மனைவி. அமர்ந்திருந்த உதயன் டீ. வி வாலியூமைக் கொறச்சுட்டு அப்படியே மௌமனாய் அமர்ந்திருந்தான் கையில் அலைபேசியுடன்.

டீ .வி. திரையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மனிதர்களால் நிரம்பி வழிந்தது. அருகில் வந்த கண்மணி 'ஏங்க என்ன யாருபோனுல ' மலச்சுப்போயி ஒக்காத்திருந்த உதயனை உலுக்கினாள்.

'ஒன்னுமில்ல எங்க சின்னம்மா செத்து ஒரு ஒன்ற வருசம் இருக்குமா'

'இப்ப எதுக்கு அதக் கேக்குறிங்க. அவுங்க போன ஆகஸ்டுல செத்ததா ஞாபகம் புள்ளைகளுக்கு பஸ்டு மிட்டம் அப்போ. எல்லாஞ் சரி இப்ப அதுக்கு என்ன? உலகமே கொரோனா பயம் புடுச்சுக் கெடக்கு. நம்ம நாட்டையும் அது விட்டு வைக்காது போல... 144 தடையின்னு அரசு அறுவுச்சுருக்கு, மக்கள் சில மாதங்களுக்கு வெளியில் நடமாட முடியாது போலருக்கு, அதது மூட்டையும் பையுமா ஊருக்குப் பஸ் புடிக்க என்னாக் கஷ்டப்படுதுவோ புள்ளை ஒரு பக்கம் பையொரு பக்கமுன்னு இழுத்துக்கிட்டு என்னா சங்கடம் போங்க என்றவள் தொடர்ந்து வாயை மூடாது பேசிக்கொண்டே போனாள். எல்லாரு ஊருக்கு வந்து சேரனுமில்ல. போதுமான பஸ் விட்டாத்தானே அதது ஊருக்குப் போயி சேருங்க. அரசாங்கம் அறிவிச்சுட்டுப் போயாச்சு செனங்க படுறபாட்டே பாருங்க. சமூக இடைவெளிங்கிறாங்க அதெல்லாம் எங்க. ஏங்க இதில் யாருக்காவது கொரோனா இருந்தாலும் ஒட்டிக்கிட்டு வரவேண்டியதுதான் என்று மனசங்கடத்தோடு புலம்பினாள் கண்மணி.

சாப்பாடு கடைகளோ, வேலை செய்யவோ எதுவும் இல்லை. நித்தம் வேல செஞ்சு சாப்புடுறவுங்க ஊருக்குப் போனாப் போதுமுன்னு கெளம்பிட்டாக என்றான் உதயன்.

'ஆமா நீங்க ஏன் இப்படி ஒக்காந்துருக்கிங்க பேயடுச்ச மாதிரி என்றவளிடம், பேயடிக்கல பரமந்தான் அடுச்சான். யாரு நாம எடம் வாங்குனோமே... அவரா என்றவளிடம் 'ஆமா ஆமா 'என் சின்னம்மா செத்தன்னைக்கு 'என்னாப் பேச்சு பேசுனாப்புடி. ஞாபகம் இருக்குல்ல ' நல்லா... ஞாபகம் இல்லாமையா ? ஏயப்போ பணமும் நாகரிகமும் அவுங்க வூட்டுலதான் வெளஞ்ச மாதிரில்ல பேசுனாரு. அது எதுக்கு நமக்கு இப்ப'

கண்மணி ஒனக்கு ஒன்னு சொல்றேன். காலத்துக்கு முன்னாடி எல்லாரும் பெரும் நீரில் அகப்பட்ட துரும்புதான். அது எங்க கொண்டு யார எங்க சேக்குதுன்னு யாருக்குத் தெரியும். 'அட நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க'

அருமையான பசங்க அவன் பசங்கன்னு நெனச்சேன். ‘யாரு பசங்க’’பரமன் பசங்கதான்’ சரி இப்ப என்ன அதுக்கு. பரமனோட பெரிய பையன் ஒரு பெரிய கட்டுமானக் கம்பனியில இருந்தானுல்ல 'ஆமா.' பெரிய கம்பனின்னுதானேச் சொன்னிங்க. முதலாளிக்கு நம்பிக்கையா இருக்கனுமில்ல பெய பணத்துல கைவச்சுட்டாம் போல கம்பனிக்காரன் வேலைவிட்டு அனுப்புனதுமில்லாம எடுத்த பணத்த வச்சுட்டுப் போடானுட்டானுவ போல பரமனுக்குப் பெரிய சிக்கலாகி விட்டதாம். பிற்பாடு அவன்வீடு, நகநட்டுன்னு வித்து கம்பனிக்காரனுக்கு கொடுத்துட்டானாம். கல்யாணம் நல்ல பெரிய எடத்துல முடுச்சதுன்னு ஒரு முறை சொன்னது ஞாபகம் இருப்பதாக உதயனின் பேச்சின்ஊடாக கண்மணி சொல்லி வைத்தாள்.

'ஆமா ஆமா ஏழெட்டு மாசமிருக்கும் கல்யாணமாகி. அந்தப் பொண்ணும் பணத்துல கைய வக்கிறவ பொண்டாட்டிய விக்கவும் துணிவான்னு டைவர்ஸ் வாங்கிக்கிறேன்னு அவுங்க அம்மா வீட்டுக்குப் போச்சாம். 'அய்யோய்யோ என்னாங்க இப்படிச் சொல்றிங்க' இன்னொருத்தனும் யாரோ ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு எங்க போனான் எங்க இருக்கான்னு தெரியலையாம். நாலு மாசமா இவன்தான் முன்னாடி பாத்த பழைய வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கானாம். இதற்கு இடையில் அவன் மனைவிக்கு பராலிஸ் அட்டாக்காகி ஒரு கை சுத்தமா பொழக்கம் இல்லையாம் எல்லாத்தையும் தோத்துட்டானாம். ‘என்னங்க சினிமாவுல வரமாறி சொல்றிங்க’ ‘சினிமா என்ன தனியாவா வருது எங்கோ நடக்கிற வாழ்க்கையைத்தானேப் படமா எடுக்குறாங்க’

‘சரி மிச்சத்த சொல்லுங்க’ என்றாள். ஊரடங்கு அறிவிச்சோன்னே நான் சென்னையில் இருந்துகிட்டு ஒன்னும் பண்ணமுடியாது. வேலைக்குப் போனாதான் காசு. பெரிய பெயலும் அவமானத்துல வெளியில் தல காட்ட முடியாது இருக்கான். இன்னும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியது இருக்கு. அதனாலே சர்டிபிகேட்டெல்லாம் புடுங்கிக்கிட்டானுவோ என்று அழுவாத குறையா பரமன் பேசிய அனைத்தையும் மூச்சுவிடாது சொல்லி முடித்தான் தனது மனைவியிடம் உதயன்.

அதான் ஊருக்கு வாரேங்கிறான் பரமன். போனுல இவ்வளவு நேரமா கதகதையாச் சொல்றான். நம்மகிட்ட வித்த எடத்துல ஓட்டுவீடு போட்டிருக்கமில்ல அதுல கொஞ்சகாலம் தங்கிக்கவாங்கிறான் என்று மனைவிடம் சொன்னான் உதயன். அத ஒட்டுனாப்புல தோட்டத்துல மாடு கட்டி பாலு கறக்குறாங்க அது சரியா வருமா என்றாள் கண்மணி.

உதயன் பரமனிடம் வாங்கிய கட்டுமனையில் சிறியதாக ஒரு ஓட்டு வீடு போட்டிருக்கிறான். மீதமுள்ள இடத்தில் அதேத் தெருவைச் சேர்ந்த சேகர் பத்து மாடுகளை வைத்துப் பால் கறக்கிறான். அதற்கு மாசம் மூவாயிரம் வாடகையும் தருகிறன். எதாவது நல்லது கெட்டதுக்கும் தேவை திருவிழாவிற்கும் ஏன் சென்ற ஆண்டு வீடு கட்டிய புதிதில் பிள்ளைகளோடு ஒரு மாசம் அங்கு தங்கி வயல் 'வாய்க்கால் 'திருவிழாக்களை காட்டி வந்தான் உதயன். இந்த வருடம் லீவுக்கு அங்கே போகனுமுன்னு அவனது பிள்ளைகளும் சொல்லியிருந்தார்கள். வீட்டுக்குள்ளேயே, நகரத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஊர் பிடித்திருந்தது. அந்த வீட்டைத்தான் பரமன் சில காலம் கேட்கிறான். அப்பொழுதே சின்னம்மா சொன்னுஞ்சு நீ நகரத்துல யான கட்டி வாழ்ந்தாலும். நமக்குன்னு ஊரு தேசம் வேணும் விக்காதேன்னு. அட நீ வேற எனக்கு ஊரு நாத்தமே வேண்டான்னு போனான். இப்ப நொந்து போயி நிக்கிறான். சொல்லிக்கொண்டு இருக்கையில் மீண்டும் அலைபேசி அடித்தது. உதயன் பரமந்தான் என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தான்.'சொல்லு பரமா அப்படியா தஞ்சாவூருக்கு கெடக்கலையா. ஓ சரி சரி சாவி ஏங்கிட்டதான் இருக்கு. நீ வந்துட்டு பேசு'என்று பேசிவிட்டுப் போனை வைத்தவனிடம் கண்மணி என்னவாம் என்றாள். திருச்சி பஸ்சுதான் கெடச்சுதாம். அதுவே ரொம்பக் கஷ்டமாகிப் போச்சு. திருச்சி வந்துட்டு தஞ்சாவூர் வந்துவிடுவதாகச் சொல்கிறான்.


அதற்குள் கண்மணி சமைக்க பாத்திரமெல்லாம் நம்ம வீட்டுல இருக்கத்தையேப் பயன்படுத்திக்கட்டும் அவுங்க கையில பணமிருக்கா என்னான்னு தெரியல வாங்க இங்க என்று சாக்குப்பை ஒன்றைக் கையில் எடுத்து இதை விரித்துப் பிடிங்கள் என்று உதயனின் கையில் கொடுத்தாள். பையை விரித்துப் பிடிக்கச் சொல்லி. வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, உப்பு, புளி, எண்ணை என பத்து நாளைக்குச் சமைக்க வேண்டி அனைத்துப் பொருட்களையும் மளமளவென எடுத்துப் போட்டு நிறைத்தாள். நீங்க சாவி கொடுக்கப் போவிங்கல்ல அப்ப இதையும் கொடுத்துடுங்க. அங்க நல்லா வாழ்ந்தவுங்க ஊருக்கு வந்தோன்ன மத்தவுங்க கைய எதிர்பார்த்தா மனம் சங்கடப்படும் என்று உதயனின் பதிலுக்கு எதிர்பாராமல் பையை இறுக்கிக் கட்டிப் போங்க காருல கொண்டு வைங்க என்றாள். பையைத் தூக்கிய உதயனின் மனம் ஏனோ லேசானது.

பரமன் தன் மனைவி மகனோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தான். சுற்றிலும் அவரவர் ஊரையும் யரையும் சொல்லி யாராரோ அழைத்துக் கொண்டு திட்டிக் கொண்டும் பேருந்துகளைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஊருக்குப் போகப் பேருந்தில் இடம் கிடைத்ததில் மூச்சைக் கொஞ்சம் உள்ளிழுத்தும் வெளிவிட்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

குழந்தைகளின் அழுகையும் கூப்பாடும் எங்கும் நிறைந்து வழிந்தது. ஏதோ பிரளயம் வந்ததான சூழல் அங்கு கரு கொண்டு சுழன்றது. பேருந்தில் ஏறிய பரமனுக்கு எங்கோ சாகாமல் இருக்கும் அவனது ஊர் நம்பிக்கையைத் தந்தது. ஊரில் இருந்த சொத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அன்று உதயனிடம் சின்னம்மா 'இங்க பாரு பூர்வீகச் சொத்தை எழுதிக் கொடுக்கிறான் பரமன் அவனிடம் சொத்துக்குரியப் பணத்தோட இருவதாயிரம் சேத்துக் கொடு' என்று சொன்ன அன்றைய அந்த வார்த்தையின் பொருள் இப்போது விளங்கையில் விழியோரம் கண்ணீர் வழிந்தது பரமனுக்கு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p316.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License