இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கூத்து வாத்தியார்

ஆனந்த். கோ


“நான் மாடிக்கு போறேன்மா. நீங்க வர்றீங்களா”

“நீ போ, நான் இந்தச் சாமானையெல்லாம் ஒழிச்சுப் போட்டுட்டு வர்றேன்”

“அப்பா எங்கே?”

“அவர் அப்பவே மாடிக்குப் போய்ட்டார்”

என் போர்வையை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றேன். வழக்கம் போல், அப்பா மெத்தையெல்லாம் போட்டு படுக்கை தயார் செய்து வைத்துவிட்டு வெளியில் படுத்து விட்டிருந்தார்.

எங்கள் கிராமத்து வீட்டு மாடியறை சற்று வித்தியாசமாக இருக்கும். மாடிப் படிக்கட்டுகள் ஏறும் போதில் இருக்கும் மேற்கூரை, மாடியறையில் பாதியை அடைத்துக் கொண்டு ஒரு திண்ணை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்பா அதன் மேல்தான் பஞ்சு மெத்தை போட்டு எனக்கு படுக்கை தயார் செய்துள்ளார். அதில் இருவர் வசதியாகப் படுத்துறங்க முடியும். அந்தத் திண்ணையின் எதிரே ஒரு ஒற்றைத் திண்ணை. இரண்டுக்கும் நடுவே சிறிது காலி இடம். தாராளமாக ஒரு குடும்பம் அந்த அறையில் படுத்து உறங்க முடியும். திண்ணைகளை ஒட்டி, அறையைச் சுற்றிலும் ஆறு ஜன்னல்கள். அறையிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்ல ஒரு கதவு. சிறுவர்களாய் இருந்த போது கோடைக்காலங்களிலும், மின்சாரம் இல்லா நாட்களிலும் நாங்கள் மொட்டை மாடியில் படுத்து இடையறாது வீசும் காற்றில் எந்தவிதக் கஷ்டமோ, கவலையோ இன்றி தூங்கி விடுவோம். நாங்கள் தூங்கிய பின்னர், அப்பாவும் அம்மாவும் எங்களைத் தூக்கி கொண்டு வந்து மாடியறைத் திண்ணையில் போட்டுத் தூங்க வைத்திருப்பதைக் காலையில் எழுந்துதான் தெரிந்து கொள்வோம்.


திண்ணைகள் ஒட்டிய ஜன்னல் வழியேத் தெருவை வேடிக்கை பார்க்க முடியும். தெற்குப் பக்க ஜன்னல் வழி பார்த்தால், தெரு நீண்டு மலையடிவாரத்தைக் காட்டும். இன்னும் சிறிது தூரம் சென்றால் மெயின்ரோடு வந்து விடும். இந்த ஜன்னல் வழியே பார்த்துதான் விருந்தினர் வருகையை மொட்டை மாடியில் இருக்கும் புகைபோக்கி (இன்டர்காம்) வழியாக சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு அறிவிப்போம். வீட்டின் வடக்குப் பக்கம் இரண்டு வீடுகள் தள்ளி, தெரு முடிவடைந்து நாற்சந்தியாக இருக்கும். இங்குதான் அம்மன் கோவில் திருவிழாவிற்கான தெருக்கூத்து நடைபெறும். பெரிய திண்ணையில் அமர்ந்து அல்லது படுத்து ஜன்னல் வழியேத் தெருக்கூத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். தெருக்கூத்து மேடைக்கும் வீட்டுக்கும் குறுகிய தூரமே என்பதால் மாடியில் இருந்து தெருக்கூத்து பார்ப்பது பெரிய திரையரங்குகளில் பால்கனி சீட்டில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தரும். இன்று தெருக்கூத்து நடக்கவிருக்கிறது. ஒரு திருமணத்திற்காக ஊருக்கு வந்த நான், தெருக்கூத்து என்றவுடன் தங்கிப் பார்த்து விட்டுக் காலையில் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.

“இந்தா பால். இரண்டு பேரும் பால் குடிக்காமலே வந்துட்டீங்க” என்றபடி பால் டம்ளரை நீட்டினார் அம்மா.

“வேணாம்னுதான்மா வந்தேன்”

“அது என்ன... வழக்கமாக் குடிக்கிறதுதானே... குடி” என்று சொல்லி, கையில் கொடுத்து விட்டு அப்பாவுக்கு கொடுக்கப் போய் விட்டார்.

இதுதான் அம்மா.

என்னதான் நாங்கள் மறுத்தாலும், அவர் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. எப்படித்தான் அவர்களால் ஒரே சீராய் நேர்க்கோட்டில் பயணிக்க முடிகிறதோ? சில சமயம் எனக்கு வியப்பாகவே இருக்கும்.

திரும்பி வந்து திண்ணையில் படுத்த அம்மாவிடம், ”நீங்க இரண்டு பேரும் கூத்து பாக்கலையா?” என்று கேட்டேன்.

“நாராயணசாமி கூத்துக்கு அப்புறம் நாங்க பாக்கறதேயில்லை. அதுவுமில்லாம அப்பா இப்போல்லாம் சீக்கிரம் படுத்துர்றார். நடுவுல முழிச்சிகிட்டாலும், ஏதாவது புத்தகம் கொஞ்ச நேரம் படிச்சிட்டுட்டு தூங்கிடுறார். நானும் சீக்கிரமேத் தூங்கிடறேன்... கூட, நீ வேற நாளைக்குச் சீக்கிரம் கிளம்பனும்னு சொல்ற... காலைல டிபன் பண்ணனுமில்ல” என்றவாறே தூங்க ஆரம்பித்தார்.

இன்று நடக்கவிருந்தது வேறு ஊரிலிருந்து வந்த குழுவின் கூத்து. சிறிது நேரத்தில், “வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும் குந்தனும்” என்று பாடியவாறே கூத்து தொடங்கியது. அம்மமாவுக்குச் சொல்லலாம் என்று திரும்பிய போது, அம்மாவிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி வந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி தனியாகவேக் கூத்து பார்க்கத் தொடங்கினேன்.

கூத்து ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எனக்குக் கொட்டாவி வர ஆரம்பித்தது. நகைச்சுவை என்ற பெயரில் கட்டியக்காரன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி மக்களுக்கு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருந்தான். மக்கள் ரசித்தோ, அவன் வாங்கும் அடிகளுக்காகவோ சிரித்து வைத்தனர். நடிகர்கள் சினிமா பாடல்களைப் பாடியும், ஒப்புவிக்கும் வசனங்களுமாகப் பேசியும் கூத்தை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் நான் எழுந்து படுத்து விட்டேன். படுத்தவாறே பழைய கூத்து நினைவுகளை அசை போடத் துவங்கினேன்.

நாராயணசாமி எங்கள் ஊர் கூத்து வாத்தியார். அம்மன் திருவிழா என்றாலே அவருடைய கூத்துதான் பெரும்பாலும். எப்போதாவது அவர் சொந்த வேலையால் தவிர்த்தாலொழிய, வேறு ஊர் கூத்து ஆட்கள் வருவதில்லை. வந்தாலும் அவர் ஆசியும் ஆதரவும் பெற்றேக் கூத்து நடைபெறும். அவருக்கு ஒரு மகனும் மகளும். மனைவியை இழந்து விட்டார். மகன் எப்போதும் வீட்டின் வெளியில் உள்ள திண்ணை அறையில் (திண்ணை - கதவு வைத்து மூடும் வசதியுடன்) அமர்ந்து ஏதாவது கைவினைப் பொருட்கள் செய்து கொண்டிருப்பான். ஒருமுறை எனக்கு பனை ஓலை காற்றாடி செய்து கொடுத்தான். பணம் கொடுத்த போது, வாங்க மறுத்து விட்டான். பின்னொரு நாளில் அவனுக்கு தொழுநோய் என்றும் அதன் காரணமாக எப்போதும் அவன் திண்ணை அறையிலேயே அடைந்து கிடந்தான் என்பதையும் அறிந்து கொண்டேன். நோய் முற்றிய நிலையில் நகரத்தில் அதற்கென இருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தான். அதன் காரணமாகவே சில வருடங்கள் நாராயணசாமி கூத்து நடத்துவதைத் தவிர்த்து வந்தார்.

அவருடைய மகள் சகுந்தலா, தந்தை போலவே நல்ல நடிப்புத் திறமை வாய்ந்தவள். எங்கள் ஊர்ப்பள்ளியின் கலைவிழா நாடகங்களில் தவறாது பங்கு பெறுவாள். ஆனால் எட்டாம் வகுப்பு முடித்த பின் படிப்பில் ஆர்வம் இல்லாததாலும், வீட்டு சூழ்நிலையினாலும் அவளது கல்வி தடைபட்டுக் கலைச்சேவையும் முடங்கிப் போனது. படிப்பு அதிகமில்லையென்றாலும் நாராயணசாமி அவர்கள் எழுதும் கூத்து பாடல்களும், வசனமும் மற்ற எந்த ஊர்க் கலைஞர்களின் கூத்துக்கும் குறைவானதில்லை. அதன் காரணமாகவே வெளியூரிலிருந்தும் அவருக்குப் பல அழைப்புகள் வருவதுண்டு.

கூத்தில் பெரும்பாலும் அவர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிடுவார். மற்ற கலைஞர்கள் எல்லாம் ஊர் இளைஞர்கள். அவர்கள் எல்லோரும் வேறு தொழில்களில் இருப்பதால் நேரமின்மை காரணமாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்குவர். மேலும், அவர்கள் செய்யும் சிறுசிறு வசனப் பிழைகளையும் மறந்து போகும் வசனம் மற்றும் பாடல் வரிகளைச் சரி செய்யவும் மேடையிலேயே ஆள் தேவை என்பதாலும் முக்கியப் பாத்திரமாக நாராயணசாமி மாறிவிடுவார்.

வழக்கமான கூத்துக் கதைகளான கர்ணமோட்சம், அரவான், ராமாயணம், அபிமன்யு போன்றவைகளையே அவர் வழங்குவார் என்றாலும், இடையிடையே அவர் தரும் தகவல்கள் சுவாரஸ்யம் தரும். அவர் சாமந்திப் பூவிற்கான பெயர்க்காரணம் கூறியது சரியோ, தவறோ தெரியாது. ஆனால் ரசிக்கும்படி இருந்தது. அதன்படி இறந்த மந்தியைப் (குரங்கு) புதைத்து, சில நாட்கள் கழித்து தோண்டிப் பார்க்க அது சாமந்தி பூவாசம் வீசுமாம் எனவேதான் சா- மந்தி என்று அந்தப் பூவிற்குப் பெயராம். மற்றொரு கூத்தில் திரௌபதியை சபைக்கு இழுத்து வரும் போதே, வராமல் துகிலுரியும் போது கண்ணன் ஏன் வந்தான்? என்ற கேள்விக்கு “திரௌபதி தன்னை நம்பியே வாதிட்டுக் கொண்டிருந்ததால் கண்ணன் வரமுடியவில்லை. எப்போது கண்ணா என்னைக் காத்தருள் என்று இரு கை கூப்பிச் சரணடைந்தாளோ, அப்போதுதான் கண்ணன் அவளைக் காப்பாற்ற விரைந்தான்” என்று கேள்வி பதில் பாணியில் மக்களுக்கு சில விளக்கங்களையும் வழங்குவார்.

ஒரு சமயம் நள்ளிரவு தாண்டி கூத்து போயக் கொண்டிருக்க கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. உடனே அவர்,”இன்னும் பாதி கூத்து கூட முடியவில்லை. எதை விடறது, எப்படி முடிக்கிறதுனு நான் குழம்பிப் போயிருக்கிறேன். நீங்கள் இப்படி பிரச்சினை செய்தால் என்னால் தொடரமுடியாது” என்று சொல்லி சலசலப்பை அடக்கி, கதையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் முழுக்கூத்தையும் நடத்தி முடித்து மக்கள் பாராட்டைப் பெற்றார்.

ஒரு கூத்தின் போது, பெண் வேடமிடும் கலைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, யாரை வைத்து நடத்துவது என குழம்பியிருக்கிறார். அவருடைய நண்பர் சற்றுத் தயங்கி சகுந்தலாவை சிபாரிசு செய்ய, சற்றும் தயங்காமல், சகுந்தலாவைக் கூத்திற்கு அழைத்து வந்து விட்டார். கூத்தும், அதற்கான ஒத்திகைகளும் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுவது வழக்கமாதலால், பெண்கள் கூத்து வேடம் ஏற்பதில்லை. ஆனால், நேரம் நெருங்கி விட்டதால், அதன் பின் ஒருவர் வேடம் கட்டி வசனங்கள் கற்று நடிப்பது கடினம் என்பதாலும், சகுந்தலா அந்த வேடம் ஏற்க வேண்டியதாயிற்று. பிறவிக் கலைஞர் என்பதால் சகுந்தலா எந்தவித கஷ்டமுமின்றி சிறப்பாக நடித்தாள். அவள் சிரிக்கும் போது, கூட்டம் சந்தோஷப்பட்டது. அவள் அழுதபோது தேம்பித் தேம்பி அழுதது. நடனமாடியபோது பணத்தை வாரி இறைத்தது.

அன்றைய கூத்து வெகு சிறப்பாக நடந்து முடிந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை சகுந்தலாவிற்கு கொடுத்தது. அதுவே சகுந்தலா கூத்துக்கலையைத் தொடரவும் வைத்தது. ஆமாம், அதன்பின் வந்த எல்லாக் கூத்துகளிலும் சகுந்தலாவையே நாராயணசாமி நடிக்க வைத்தார். அவர் கூடவே இருப்பதாலும், வசதிக்கேற்ப ஒத்திகைப் பார்க்க முடிந்ததாலும் மற்ற பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் சகுந்தலாவிற்கு ஏற்படவில்லை. எனவே, தொடர்ந்து கூத்தில் நடித்து மக்களின் பாராட்டைப் பெற்று வந்தாள். இடையில் சிகிச்சை பெற்று வந்த மகன் இறந்துவிட, துக்கத்திலிருந்து மீளாத தந்தைக்குப் பதில் சில கூத்துகளை சகுந்தலாவே வடிவமைத்து சிறப்பாக நடத்தியும் தந்தாள்.

சில நாட்கள் கழித்து நாரயணசாமி மகளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்க, ஆரம்பித்தது பிரச்சனை. கூத்து கட்டும் பெண்ணை மணக்க மாப்பிள்ளைகள் தயாராக இல்லை. இத்தனைக்கும் வாத்தியார், பிள்ளை வீட்டார் கேட்டதையெல்லாம் தர ரெடியாகவே இருந்தார். ஆனாலும் முடியவில்லை. இறுதியில் தனது தூரத்துச் சொந்தம் ஒன்றிலிருந்து கெஞ்சிக் கூத்தாடி ஒரு மாப்பிள்ளை பிடித்து வந்தார். வந்த மாப்பிள்ளையின் ஒரே கண்டிசன், இனி சகுந்தலா கூத்து கட்டக்கூடாது என்பதே. வேறுவழியின்றி, அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு திருமணம் செய்து பெண்ணை அனுப்பி வைத்தார்.

அதன்பின், பழையபடி உள்ளூரிலேயே ஒருவரை பெண் வேடத்திற்குத் தேர்ந்தெடுத்து கூத்தை நடத்தி வந்தார். சமீப காலமாய் உடல்நலக் குறைவு காரணமாய் கூத்து நடத்துவதில்லை. மருமகனுடன் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பெண் வீட்டுப் போக்குவரத்தும் குறைந்து விட்டிருக்கிறது. ‘உடல்நலக் குறைவினால் தனக்குப் பின் சகுந்தலா தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவள் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை, நலிந்து கொண்டிருக்கும் அந்தக் கலையை வாழ வைக்க, தனக்குப் பிறகு அவள், கூத்து நடத்தவாவது மாப்பிள்ளை ஒத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கேட்டு அதற்கு மாப்பிள்ளை மறுத்து திட்டி அனுப்பி விட்டதாகவும் ஊரிலேப் பேசிக் கொண்டனர். இந்தப் பிரச்சனையில் அவர் மனமுடைந்து, மேலும் உடல் நலிவுற்று, படுத்த படுக்கையாகி இறந்து விட்டார்.

அதற்குப்பின் ஊரில் நடந்த கூத்துகள் மக்களை ஈர்க்கவில்லை. வெறும் சம்பிரதாயமாகவே நடந்தேறின. எப்போது என் நினைவலைகள் ஓய்ந்து தூங்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. காலையில் அம்மா கீழ்தளத்திலிருந்து கூப்பிட்ட பின்தான் எழுந்து சென்றேன்.


ஊருக்குத் திரும்பி ஒரு வருட காலம் கழிந்திருக்கும். ஒருநாள் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய மேகத்திரள் நிலவை விழுங்கி இருள் சூழ வைத்த நேரத்தில், அலைபேசியில் அம்மாவின் அழைப்பு.

“என்னம்மா”

“இந்த வாரம் ஊருக்கு வாயேன்...”

“என்ன விசேஷம்”

“அம்மன் திருவிழா. அதோட பீஷ்மர் சபதம் கூத்து”

“இல்லம்மா, நான் வரலை”

“இது சகுந்தலா கூத்தாம்டா. ஊரே எதிர்பார்த்துக்கிட்டிருக்கு”

“சகுந்தலாவா? எப்படி?” ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“நாராயணசாமி இறப்புக்கு ஊருக்கு வந்த சகுந்தலாவை ஊர் மக்கள் கூத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்படி வற்புறுத்த மக்களின் அன பு வேண்டுகோளைத் தட்டிக் கழிக்க முடியாமல் ஒத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், இது தொடர்பாகத் தம்பதியரிடையே பிரச்சினை ஏற்பட்டு சகுந்தலாவின் கணவன் தூக்கில் தொங்கி விட்டிருக்கிறான். ஒரு வருடம் கணவனுக்காகத் துக்கம் அனுசரித்து விட்டு, இந்த வருட கூத்திற்கு சகுந்தலா பொறுப்பேற்றுக் கொண்டு விட்டாள்”

“ஊருக்கு வரேன்மா...” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு நான் வானத்தைப் பார்த்தேன்.

மேகத்திரளை விட்டு நிலா வெளி வந்திருந்தது. அது முன்பை விட, அதிகப் பிரகாசத்துடன் இருப்பதாய் எனக்குத் தோன்றியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p349.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License