இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

நன்றி சொல்லலாமா?

சுபஸ்ரீஸ்ரீராம்


"அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்."

"இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல மூடுல இருப்பாருன்னு தெரியாது. அப்படி ஏதாவது சந்தோஷமா இருந்தாருன்னு வச்சுக்க அப்ப நைசா பேசி வாங்கித்தரேன் புரியுதா?"

"என்ன அம்மாவும் பையனும் காலையிலேயே கூடிப்- பேசிக்கிட்டுருக்கீங்க."

"அது ஒன்னுமில்லீங்க. அவனுக்கு கணக்கில சந்தேகம் அடிக்கடி வருதாம். அதான் தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனே சொல்லித்தரயான்னு கேட்டான்." என்று உண்மையை சற்று மறைத்துப் பேசினாள் மீனா.

"ம் ஒழுங்கா வாத்தியாரு நடத்தறத க்ளாஸ்ல கவனிச்சாலே போதும். இவன் எங்க ஒழுங்கா கவனிக்கிறான். எப்பப்பாரு விளையாட்டுன்னுதானே இருக்கான். இப்படியே இருந்தான்னு வச்சுக்க, அடுத்த வருஷம் ஆறாவதுலேயே இருக்க வேண்டியதுதான். இப்பல்லாம் அரசாங்கப் பள்ளியிலே பிள்ளைங்க எப்படி மார்க் வாங்கறாங்க தெரியுமா?. இவனுக்கு இதெல்லாம் எப்படி புத்தியில எட்டும். போடா போ உருப்படியா பள்ளிக்கூடத்துக்கு கிளம்பற வழியப்பாரு." என்று அவர் சொல்ல,

"டேய், பாபு நீ பேசாம போய்ட்டு வா. அம்மா நான் எல்லாம் பாத்துக்கிறேன்." என்று அவனை மெதுவாக அங்கிருந்து அனுப்பினாள்.

சாயங்காலம்.பாபு பள்ளிக்குச் சென்று திரும்பி வந்து சிறிது நேரம் விளையாடி விட்டு, ஹோம் ஒர்க்கை செய்து படிக்க வேண்டிய பாடங்களைப் படித்து முடித்தான்.

மூவரும் இரவு சாப்பிட உட்கார்ந்தனர்.

"நல்லா சாப்பிடு பாபு. அப்பதான் நல்லா படிக்கமுடியும்... ஏங்க நல்லாக் குழம்பு ஊத்திக்கிங்க. அப்பளம் எடுத்துக்கங்க."

"என்ன இன்னிக்கு உபசாரம் எல்லாம் பலமா இருக்கு...?"

"அது ஒன்னுமில்லீங்க. நம்ம பாபுக்கு ஒரு புது சைக்கிள் வேணுமாம். அதான் உங்ககிட்ட சொல்லாம்னு இருந்தேன்."

"இங்க பாரு எப்ப இவன் ஒழுங்காப் படிச்சு முதல் ஐந்து ரேங்க்குக்குள்ள எடுக்குறானோ அப்ப பார்க்கலாம்..."

பாபு பள்ளியில் ரொம்ப சுமாராகத்தான் படிப்பான். அதற்காகவே அவனுக்கு அப்பா இப்படி ஒரு கண்டிஷனை போட்டார்.

அவனுடைய ப்ரண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சைக்கிள் இருக்கு. அவனிடம் மட்டும் இல்லை. அதை நினைக்கும் போது பாபுவுக்கு அழுகையாக வந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது நல்ல மழை. பாபு மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான். அவன் வீட்டு வாசலில் ஒரு சிறிய பெண் நாய்க்குட்டி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது. அவனுக்கு அதைப் பார்த்தவுடன் மிகவும் பாவமாக இருந்தது. கேட்டை திறந்து, வீட்டுத் திண்ணையில் ஒரு சாக்கை விரித்து அதன் மேலே நாய்க்குட்டியை வைத்தான்.

சிறிது நேரத்தில் அதன் சத்தம் ஓய்ந்து அமைதியாக இருந்தது.

"அம்மா கொஞ்சம் கொட்டாங்குச்சியில் பால் கொடுங்க. அதுக்கு ஊத்தரேன்..."

மகனின் விருப்பத்திற்காக அவனின் தாய் பால் கொண்டு வந்து தர அவனும் அந்தப் பாலை அதனருகே வைத்தான்.அது பாலைக் குடித்து முடித்தது.

அவன் அப்பா மழை ஓய்ந்த பிறகு வீட்டுக்கு வந்தார்.

அவர் வண்டி நிறுத்துற இடத்தில் ஒரு நாய்குட்டி இருப்பதை பார்த்தவுடன் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏ, மீனா! இங்க வா. யாரு இதையெல்லாம் வீட்டுல்ல கூட்டிகிட்டு வந்தது?."

"இல்லங்க நம்ம வீட்டு வாசல்ல கத்திக்கிட்டே இருந்துச்சு. மழை பேஞ்சதால நம்ம பாபுதான் இங்க கொண்டு வந்து வச்சான்."

"ஆமாம் படிப்பத்தவிர இதல்லாம் நல்லாச் செய்வான். அந்த நாயை முதல்ல வெளிய கொண்டு விடு. அப்பா ப்ளீஸ்ப்பா. இந்த ஒரு ராத்திரி மட்டும் இங்க இருக்கட்டும்பா."

அவனுடைய அப்பாவிற்கும் அந்த நாயின் மேல் இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அவன் அப்பா அரைமனதுடன் சம்மதித்தவுடன் அவனுக்கு ஏதோ முதல் ரேங்க் வாங்கின மாதிரி நிம்மதி ஏற்பட்டது. பாபுவிற்கு தூக்கமே வரவில்லை. அந்த நாய்க்குட்டி வரவு அவனுக்கு இனம புரியாத ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து விட்டான். காலையில் தனக்குக் கொடுத்த பாலை கொஞ்சம் நாய்க்குட்டிக்கு ஊத்தினான். அவன் அப்பா எழுந்தவுடன் முதல் வேலையாக நாய்க்குட்டியை வெளியே கொண்டு போய் விட்டார்.

பாபுவிற்கு கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டான்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன் விளையாடப் போகாமல் இருந்தான்.

அம்மா அவனிடம் கேட்டார். "ஏண்டா உம்முன்னு இருக்க?."

"ஏம்மா அப்பா இப்படி செய்யறாரு. ஆசையா ஒரு நாய்குட்டி வந்துச்சு. அதக் கூட நம்ம வீட்டில வளர்க்க விடமாட்டேங்கிறாரு."

"சரிசரி. போய் நீ படிக்கிற வேலையப் பாரு. நம்ம வேற நாய்க்குட்டி வாங்கலாம்."அவனுக்குப் புத்தகத்தை எடுத்தாலும் படிப்பில் நாட்டமே இல்லை. சிறிது நேரம் கழித்து அவன் வீட்டு வாசலில் நாய்க்குட்டி சத்தம் கேட்டது. அவனுக்கு சத்தம் கேட்டவுடன் தாவிக்குதித்து போய் பார்த்தான்.

அவன் அம்மாவிடம் அதற்குப் பால் வாங்கி ஊத்தினான். அது குடித்துவிட்டு படியிலேயே படுத்துக் கொண்டது. அவன் அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடன், வேகமாக ஓடி அந்த நாய்குட்டியை பக்கத்தில் உள்ள காலிமனையில் விட்டுவிட்டு வந்தான்.

இதைப் பார்த்த அவன் அப்பா சத்தம் போட்டார்.

"இங்க பாரு கண்ட தெரு நாயெல்லாம் கூட்டிகிட்டு வந்த... உன் முதுகுதோல உரிச்சுடுவேன். போய் உள்ளபோய் ஒழுங்கா படக்கிற வேலையைப் பாரு..."

அவனுக்கு அவன் அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

சில நாட்கள் சென்ற பின்னர், பாபுவிற்கு ஸ்கூல் நேரம் போக அந்த நாய்க்குட்டியிடம்தான் இருப்பான். அவன் அப்பாவிற்கு தெரியாமல் அதற்கு சாப்பாடு கொடுப்பான்.

ஒரு நாள் அவன் அப்பா கூப்பிட்டார்.

"டேய் இங்க பாரு சாயங்கலாம் ரெடியாய் இரு. உன்னைய சைக்கிள் கடைக்கு கூட்டிகிட்டு போறேன். உனக்கு எந்த மாடல் பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்க. ஆனா இனிமேலாவது ஒழுங்காப் படிக்கணும் புரியுதா?."

ஆனால் பாபுவிடம் இருந்து வார்த்தையே வரவில்லை.

"ஏன் உம்முன்னு இருக்க?"

"அது வந்துப்பா, எனக்கு சைக்கிள் வேண்டாம். ஆனா வேற ஒன்னுதான் வேணும்".

"என்ன சொல்லு.?"

"அந்த நாய்க்குட்டியை நம்ம வீட்டிலே வளர்க்கலாம்பா..."

"டேய் நீ அடி வாங்கப்போற...."

"இல்லப்பா. அது மட்டும் இருந்தாப் போதும்ப்பா... ப்ளீஸ்ப்பா...""நீ ஏற்கனவே நல்லாவே படிக்க மாட்ட. இதல அதுவும் வந்துச்சுன்னா, நீ உருப்பட்டாப்லதான்...."

"இல்லப்பா, நான் சத்தியமா நீங்க சொல்றாப்ல முதல் ஐந்து ரேங்க்குக்குள்ளாற வாங்குவேன். நாய்குட்டிக்கு மட்டும் பர்மிஷன் தாங்கப்பா."

அவன் கெஞ்சல் பாபுவின் அப்பா மதனுக்கு என்னவோ செய்ய. "சரிசரி நீ நிறைய மார்க் வாங்கலேன்னா, அதை எங்கயாவது விட்டுட்டு வந்துடுவேன் புரியுதா?."

"ரொம்ப தேங்க்ஸ்பா."

ஒரு வழியாக அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டான். அதற்கு திண்ணையில் ஒரு இடமும் கொடுத்தாகிவிட்டது.

மறுநாள் அவனுக்குப் பள்ளி விடுமுறை. எனவே அந்த நாய்குட்டிக்கு பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்தான். அவன் அம்மா மீனா ஏதேதோ பெயர் எல்லாம் சொன்னாள். ஆனால் அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. கடைசியில் அவனுக்கு ஒரு பெயர் மனதில் தோன்றியது.

அவன் இரண்டாவது வகுப்பு படிக்கும்போது, ஷண்முகப்ப்ரியா என்ற டீச்சர் இருந்தார். அவர் அனைத்து குழந்தைகளையும் மிகவும் அன்பாக நடத்துவார். அந்த டீச்சருக்கு பாபுவைக்கண்டால் மிகவும் பிடிக்கும். பின்னர் மாறுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இருந்தாலும் அவருடைய ஞாபகங்கள் அவனுக்கு இப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும்.

எனவே அவன் ஷண்முகப்ப்ரியாவை சுருக்கி அந்த நாய்குட்டிக்கு ஷபி என்று வைத்தான்.

படிக்கிற நேரம் போக மீதி எல்லா நேரமும் ஷபிதான். ஷபிக்கு சந்தோஷம் வந்தால் அவன் சட்டையை இழுத்து வெளியிலே கூட்டிக் கொண்டு போகச சொல்லும். அவன் பள்ளி செல்லும் போதும், அவன் அப்பா ஆபிஸ் செல்லும் போதும், அது தெருமுனை வரை விட்டுவிட்டு வரும். ஆனால் அவன் அப்பாவிற்கு இதன் செயல் பிடிக்காது.

ஒருமுறை ஷபிக்கு உடம்பு சரியில்லாமல் போக, வெட்னரி டாக்டரிடம் காண்பித்த பொழுதுதான், அது அல்சேஷன் வகையைச சார்ந்தது என்று தெரிய வந்ததது.

பாபுவிற்கு காலாண்டுத் தேர்வு தொடங்க இரண்டு நாட்கள் இருந்த வேளையில், அவன் அப்பா சொன்னார், இந்த முறை நீ சொன்னபடி மார்க் வாங்கலேன்னா, இந்த ஷபி வெளியில போய்விடும் ஜாக்கிரதை.

அதற்காகவே பாபு மிகவும் விடியற்காலையிலேயே எழுந்து கவனமுடன் படிக்கத் தொடங்கினான். அனைத்துத் தேர்வுகளையும் நன்றாக எழுதியிருந்தான்.

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியிருந்தது.

இன்று பேப்பர் தருவார்கள். அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. மார்க் குறைந்து விட்டால் நம் ஷபி நம்மை விட்டுப் போய்விடுமே என்ற கவலை இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவன் வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்கியிருந்தான்.

அவன் அப்பாவிற்கு நம்பவே முடியவில்லை. உள்ளுக்குள் அவருக்கு சந்தோஷம்.

இப்படியே வருடங்கள் ஒடின.

பாபுவும் பத்தாவது வந்துவிட்டான். ஷபியும் நன்றாக வளர்ந்து விட்டான். இருவரும் இணைபிரியாத தோழர்கள் ஆகி விட்டனர்.

ஆனால் ஷபியை அவன் அப்பாவிற்கு பிடிக்காததால், ஷபியும் அவர் எதிரில் வரவே வராது. மிகவும் நாசூக்காக நடந்து கொள்ளும். ஏனோ மதனுக்கு அதைக் கண்டால் எரிச்சல் தான் வரும். இருந்தாலும் பையன் நன்றாக மார்க் எடுப்பதால் பேசாமல் இருந்தார்.

பத்தாவது முழுத் தேர்வு தொடங்கப் போகிற காரணத்தால், பாபு காலை 3.30 மணிக்கு எழுந்து விடுவான். அலாரம் அடித்துவிடும். சிலநேரம் சோம்பல் காரணமாக அவன் எழுந்திருக்க மாட்டான். அந்த சமயத்தில், ஷபி அழகாக கொஞ்சலுடன் ஒரு சத்தம் எழுப்பும். உடனே எழுந்து விடுவான். ஷபிக்கு சந்தோஷம் வந்தால், மேலே அவனிடம் தாவி விளையாடும்.

பத்தாவது தேர்வும் முடிந்தது.இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பாபு ஒருவித டென்ஷனுடன் இருந்தான். அவனுக்கு மார்க் குறைந்தால், அப்பா ஷபியை வேற எங்கையாவது விட்டுவிட்டு வந்து விடுவாரே என்று கவலை அதிகரித்தது. எனினும் கடவுளிடம் மனதார வேண்டிக்கொண்டான்.

காலை ஒன்பது மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. என்ன ஆச்சர்யம்! பாபுதான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளான். மொத்த மதிப்பெண்கள் 500 க்கு 497 மதிபெண்கள் வாங்கியிருந்தான்.

அவன் அப்பா, அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

பள்ளிக்கு சென்ற பொழுது அவன் தலைமை ஆசிரியரிலிருந்து, மற்ற ஆசிரியர்கள் வரை அவனைப் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

எல்லா மீடியாவும் அவனை வீடியோ எடுத்தது. பாபுவைப் பேட்டி காண அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆவலுடன் இருந்தனர்.

"மாநிலத்தில் முதலிடம் பெற்ற நீங்கள் யாருக்கு நன்றி சொல்லுவீர்கள்?" என்றனர்.

உடனே பாபு, "எல்லாருக்கும் வணக்கம். முதலில் கடவுளுக்கும், பின்னர் என் பள்ளி ஆசிரியர்கள், என்னை நல்ல திறமையான மாணவனாக உருவாக்கியதற்கு மிக்க சந்தோஷம். என் பள்ளிக்கு நான் செய்ததது மிகச்சிறிய காணிக்கை. என் அப்பாவும், அம்மாவும் இந்த உலகத்திற்கு என்னால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க சந்தோஷம். அவர்கள் கொடுத்த உற்சாகத்தால் நான் மிகவும் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடிந்தது. இவர்களுக்கு மேல் என் ஷபிக்கு என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன்."

"ஷபியா? யாரது?"

"ஷபி. என் செல்ல நாய்க்குட்டி...!"

உடனே ஒரு பத்திரிகையாளர் குறுக்கிட்டு "என்ன தம்பி நாயை போய் இப்படி சொல்றீங்க?"

"சார். உங்களுக்கு வேணா அது நாயாத் தெரியலாம். ஆனால் எனக்கு அவன் உற்ற நண்பன். மக்கு மாணவனா இருந்த என்னை, இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது அது என் மேல் கொண்டிருந்த அன்புதான்."

அப்ப அதற்கும் நன்றி தெரிவிக்கிறீர்களா?, என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

"நாய் நன்றியை காட்டிலும், அன்பைத்தான் அதிகமாக கொடுக்கும். அது எதையும் எதிர்பார்க்காது."

".........."

"சார் மனுஷங்க தான் ஒத்தருக்கொருத்தர் உதவி செய்யும் போது நன்றியை எதிர்பார்த்து, மற்றவர்களிடம் நன்றி சொல்லி அந்த செயலுக்கே முற்றுபுள்ளி வைக்கிறாங்க. உலகத்திலே ஒவ்வொரு காலகட்டத்திலேயும் யாராவது யார்காவது உதவி செஞ்சுகிட்டே இருப்பாங்க. அது எல்லாத்துக்கும் அந்த நேரத்தில நன்றின்னு சொல்லிட்டு அப்புறம் மறந்துடறாங்க. இனிமேயாவது நன்றின்னு சொல்லாம, நாம எல்லாரும், நீங்க செஞ்ச உதவி எனக்கு மனசுல நல்ல நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்துருக்கு சொல்லனும். அப்படின்னு சொன்னா, சொல்றவங்களும், கேட்கிறவங்களும் காலத்துக்கும் மறக்க மாட்டாங்க...அவங்க அன்பு நம்ம கூட ஆசிர்வாதமா எப்போதும் வந்துகிட்டே இருக்கும்.... அது போல என் ஷபியிடம் உன் அன்பு எப்போதும் எனக்கு வேணும், என் கூடவே இருக்கணும்..." என்றபடி அவனனங்கிருந்த ஷபியைப் பார்க்க அது தன் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துத் தூக்கியபடி அவன் மேல் நட்புடனும் பாசத்துடனும் தாவியது.

இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள், "நீங்க எதுவும் சொல்லாமலே உங்கள் பார்வையைப் பார்த்து உங்களோட வந்து ஒட்டிக்கிட்டதே...?" என்றனர்."இல்ல சார், நாம எப்படி அன்பு செலுத்தறமோ, அதைப் பல மடங்கா அது வெளிப்படுத்தும் இந்த ஷபிக்கு எந்த மொழியுமில்லை... மிருகங்கள் நாம் காட்டுற ஒலியையும் உணர்வுகளையும் உள்வாங்கிட்டு அதற்கேற்றபடி அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும். எனக்கு இந்த ஷபியால்தான் எல்லாப் புகழும் கிடைத்திருக்குன்னு நான் நம்புகிறேன். நான் வருங்காலத்தில ஒரு வெட்னரி டாக்டராக ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்." என்றான்.

இந்தப் பேட்டியை, அனைத்து மீடியாவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பியது.

ஆனால் அவன் அப்பாவிற்கு மனதில் ஒரே வருத்தம். நாம இவனை கஷ்டப்பட்டு படிக்கவச்சா, ஒவர் நைட்ல இந்த நாயை ஸ்டார் ஆக்கிட்டானே என்று நினைத்தார்.

பத்து நாட்கள் சென்ற நிலையில் அவன் அப்பா அவனுக்கு ப்ளஸ் ஒன்னுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கச் சென்றார். தீடீரென்று மழை கொட்டத் தொடங்கியது.

இவன் அம்மாவும், ஷபியும், பாபுவும் வீட்டிலே அவன் அப்பாவிற்காக சாப்பிடாமல் இருந்தனர். மழை விட்டபாடில்லை. அடைமழையாக இருந்தது. அவன் அம்மா மீனா, அவன் அப்பாவிற்கு மொபைலில் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. மணியும் இரவு பத்தரை ஆகிவிட்டது. ரொம்ப கவலையாக இருந்தது. ஷபியும் சாப்பிடாமல் சோகமாக இருந்தது. தீடீரென்று ஷபி வெளியே ஒடிவிட்டது.

ஒரு அரைமணி நேரம் கழித்து ஷபி வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்தது. உடனே பாபு, இங்கபாரு பேசாம இரு. மழை வேற கொட்டிகிட்டு இருக்கு, போ மூலையில உக்காரு என்று சத்தம் போட்டான். ஆனாலும் விடாது அவன் சட்டையை பிடித்து வாசலுக்கு இழுத்துச் சென்றது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அது எதற்கு இழுக்கிறது என்றும் புரியவில்லை.

அவன் அம்மா சொன்னார், இந்தா என் மொபைல வச்சுக்கோ. இந்த குடைய எடுத்துக்கிட்டுப் போ. அப்படியே தெருமுனைல உங்கப்பா வர்றாரான்னு பாரு.

அவனும் ஷபியும் போனார்கள். தெருமுனை வந்தவுடன், அவன் நின்றான். உடனே மீண்டும் ஷபி அவன் சட்டையை இழுத்துக் கொண்டு ஒரு குறுக்கு சந்துக்கு கூட்டிக்கொண்டு போனது.

அங்கே ஒரு பள்ளத்தில் அவன் அப்பா கொண்டு சென்ற வண்டி கவிழ்ந்து கிடந்தது. அவர் அப்பாவும் சுயநினைவில்லாமல் இருந்தார். உடனே அவன் ஆம்புலன்ஸிற்கு போன் செய்தான். தக்க சமயத்தில் அவன் அப்பா ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தார்.

எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஹாஸ்பிடலுக்கு ஷபியும் வந்திருந்தது. அப்பொழுது அவன் அப்பாவிடம் ஷபி செய்த காரியத்தை சொன்னவுடன், அவருக்கு கண்ணீர் வந்தது. எத்தனையோ நாள் இந்த ஷபியை திட்டியிருக்கேன்.ஆனால் தக்கசமயத்தில என் உயிரை காப்பாற்றிடுச்சு.

டேய் ஷபி, உன் அன்பு எப்போதும் எனக்கு வேணும், என்கூடவே இருக்கணும் என்று சொன்னவுடன், அந்த ஷபி இருகைகளையும் சேர்த்து அவரைபார்த்து மேலே தாவியது.

"நீ சொன்னது சரிதான் பாபு. மனுஷங்கத்தான் நன்றியை சொல்லிட்டு, அதோட மறந்துடறாங்க. இனிமேலாவது யார்க்காவது உதவி நாம செஞ்சாலும், இல்ல நமக்கு யாராவது உதவி செஞ்சாலும், நன்றியைக் காட்டிலும், நாம எல்லாரும், நீங்க செஞ்ச உதவி எனக்கு மனசுல நல்ல நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்துருக்குன்னு சொல்லனும்..."

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p52.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License