இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

அம்மா சொன்ன அறிவுரை

மலையாளம்: காரூர் நீலகண்டபிள்ளை

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


சமீபத்தில் ஒரு அரசு அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கு இருந்த ஊழியர்கள் எல்லோரும் ஒரே மாதிரி கறுப்புப் பட்டைகளை அணிந்திருப்பதைப் பார்த்தேன். “எனக்குப் பசிக்கிறது” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பசியின் இலட்சணமேத் தெரியாதவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்தவர்.

சம்பளம் குறைத்துதான் வாங்குகிறார் என்றாலும் பெரிய அதிகாரி போலதான் அவருடைய நடை உடை இருக்கும். பளபளப்பான ஷூ, மடிப்பு கலையாத இஸ்திரி போட்ட பாப்லின் ஷர்ட், இரட்டைக்கரை போட்ட வேட்டி, தங்க பிரேம் போட்ட கைக்கடிகாரம், அலங்காரத்துக்காக மட்டும் பயன்படுத்தும் மூக்குக் கண்ணாடி. இவை இல்லாமல் ராமப்பணிக்கரை நான் பார்த்ததேயில்லை.

இந்த ஆர்பாட்டமான வெளிப்புறத் தோற்றத்திற்கு செலவிடுவதற்காக அவருக்கு எப்போதும் பசி இருக்கத்தானே செய்யும். அதனால் அவருடன் எனக்கு பொறாமை ஏற்படவில்லை. மாறாக அன்புதான் மேலிட்டது.

ஒரு நாள் அவருடைய வீட்டுக்குப் போனேன். வாடகை வீடு. சிறிய வீடுதான் என்றாலும் பளிச்சென்று துடைத்துவிட்டது போல சுத்தமாக அழகாக இருந்தது அந்த வீடு. வராந்தாவில் இருந்த நாற்காலிகள், மேசை எல்லாம் குஷன் போட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. முற்றத்தில் நான்கைந்து பூத்தொட்டிகள் இருந்தன. அதற்குப் பக்கத்தில் பூக்கள் அழகாகப் பூக்கும் செடிகளும் இருந்தன. ஆகமொத்தத்தில் சுகமாக வாழ கொடுத்து வைத்த ஒரு அதிர்ஷ்டசாலிதான் அவர்.

“பணிக்கர் சார் இல்லயா?” நான் கேட்டேன்.

வாசலுக்கு வந்த ஒரு பெண் பாதி மறைந்தபடி நின்றுகொண்டு சொன்னாள். “இன்னிக்கு ஆபீஸ் இல்லாததால் சீட்டு விளையாடப் போயிருப்பார்னு நினைக்கறேன்”.


அவள் பணிக்கருடைய மனைவி என்பதை நான் ஊகித்தேன். நான் திரும்பிப்போக ஆரம்பித்த போது அவள் தொடர்ந்தாள்.

“ஒம்பது மணியானப்ப போனது. ஒன்னும் சாப்பிடாமாத்தான் போயிருக்காரு. எந்திரிச்சு வந்தப்ப ஒரு காபி குடிச்சாரு. ஒன்னும் சாப்பிடல. அப்புறம் பல்லத் தேய்ச்சுட்டு வந்தப்பறம் பித்தளப் பாத்திரத்துல காச்சின பால் குடிச்சாரு. உடம்பக் கவனிச்சுக்கறதுல கொஞ்சம் கூட அக்கற இல்ல. பித்தளப் பாத்திரத்துல தண்ணியேக் கலக்காத பாலக் காச்சிக் கொடுத்தா முழுக்கக் குடிக்காம போறவங்க இருக்காங்களா?

நான் கட்டாயப்படுத்தினப்பறம் ரெண்டு முட்ட தோசை சாப்பிட்டாரு. மனுஷங்கதானே? எதுவும் சாப்பிடாம எந்திரிச்சு நடக்கமுடியுமா? நெய்யுல புரட்டி நேந்திரம் பழத்த எடுத்துகிட்டு வர்றப்பவே எந்திரிச்சிட்டாரு. அப்புறம் அதுல ரெண்டு துண்டு மட்டும்தான் சாப்பிட்டாரு. சின்னக் குழந்தைங்க மாதிரிதான் சாப்பிடறது. யாராச்சும் கட்டாயப்படுத்தினாதான் கொஞ்சமாச்சும் எதயாவது சாப்பிடுவாரு.

நான் எண்ணயயும், தன்வந்திரிக் குழம்பயும் காச்சி வச்சது அங்கயேதான் இருக்கு பாருங்க. சீட்டு விளையாடறதுல பைத்தியம். போகறதுக்கு அவசரப்பட்டுகிட்டு தலயில கிரீமத் தடவிகிட்டு முகத்தில ஸ்நோவயும் தடவிகிட்டு பெட்டியில இருக்கற வேட்டி சட்டய எடுத்து போட்டுகிட்டுக் கிளம்பினாரு. அதுலவேற எதப் போட்டுக்கறதுன்னு தேட ஆரம்பிச்சிட்டாரு”.

அவள் பேசுவதை நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். “அப்ப நான் ஒரு காரியத்த செய்வேன். எனக்கு நல்லாத் தெரியும். சீட்டு விளையாடப் போனா அங்கயேதான் அவரு உச்சி வெய்யில் நேரம் வரை இருப்பாருன்னு. கஞ்சி குடிக்காமப் போயிட்டாருன்னா? நல்ல ருசியான கஞ்சிய வச்சேன். அரிசிப்பொடியில போட்டது. தொட்டுக்க எதயும் செய்யல. அத செய்யப்போனா கஞ்சிய குடிக்காமலேயே போயிடுவாரு. அஞ்சாறு பப்படம் சுட்டு வச்சேன். அப்புறம் பலாக்காய் வருவல், பலாப்பழ அல்வா எதாச்சும் இருக்கும். வீட்டுலயே இருந்தா அஞ்சாறு துண்டு அதுலேர்ந்து எடுத்து எனக்கு சாப்பிடக் கொடுப்பாரு”. கேட்காமலேயே அது மாதிரி எதையாவது அவள் எனக்கும் தருவாள் என்று நினைத்தேன். கேட்காமலேயே கிடைக்கும் என்று நம்பி நான் மௌனமாக இருந்தேன். ஆனால் ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது.

“பயிறு புழுங்கி வைக்கலைன்னா கஞ்சி பக்கமே திரும்பிப் பாக்கமாட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதனால கொஞ்சம் பயிறயும் வேகவச்சுக் கொடுத்தேன். வேட்டி சட்டய செலக்ட் செய்யறதுக்கு ஒதுக்கற நேரத்துல நான் இதெல்லாத்தயும் செஞ்சு முடிச்சுடுவேன். ஒரு உருண்ட வெல்லமும் கொடுத்தேன். வெல்லம்னா சுக்கு போட்டு தயார் செஞ்ச ஸ்பெஷல் உருண்ட. தேங்காப்பூவயும் அதுல சேத்துக் கொடுத்தேன். இதெல்லாம் சாதாரணமானவங்களுக்கு கஞ்சி குடிக்கப் போதாதா என்ன?

ஆனா அவரு கஞ்சி குடிக்கறதப் பாத்தா கஷாயம் குடிக்கற மாதிரி இருக்கும். ஹும். நான் கொஞ்சம் வெண்ணயயும் கஞ்சியோட சேத்துப் போட்டுக் கொடுத்ததுனால குறை ஒன்னும் சொல்லாம குடிச்சிட்டுப் போனாரு. இனி எப்ப வருவாரோ? வர்றதுக்குள்ள நான் சமைக்க வேணாமா? சமையலறையில ஒரு வேலயும் இன்னும் முடியல.

சாம்பாரயும் அவியலயும் செய்யணும். பருப்பயும் வச்சிட்டேன். அதனால கவலயில்ல. பாலை உறயவச்சு கெட்டியாத் தயிரயும் தயார் செஞ்சு வச்சிருக்கேன். தண்ணி ஊத்தாத தயிரு. நாலு வகை ஊறுகா இருக்கு. மட்டன் இப்பதான் வந்திச்சு. அத நெய்யிலப் போட்டு வதக்கணும். ஒரு பொறியலயும் செய்யணும். என்னால இன்னிக்கு வேற ஒன்னையும் செய்யப்போறது இல்ல”.

மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த அவளுடைய பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். “இத்தன வேலயயும் நீங்க தனியாத்தான் செய்யறீங்களா? வேலக்காரங்க யாரும் இல்லயா?”


அவள் தொடர்ந்தாள். “வேலக்காரங்களா! என்ன புண்ணியம்? வீட்டப் பெருக்கி சுத்தப்படுத்தணும்னா நான்தான் போகணும். வீட்ட துடைக்கறப்ப அழுக்குப் போகலைன்னா அத நாந்தான் செய்யணும். வேட்டிய அடிச்சுத் துவைச்சு வெள்ளயாக்கணும்னா நாந்தான் தோய்க்கணும். சோத்துல கல் வராம இருக்கணும்னா நாந்தான் புடைக்கணும். சமையல்ல உப்பு மிளகாய நான் போடலைன்னா தொடவே மாட்டாரு. எல்லாத்துக்கும் நான் வேணும். அப்புறம் எதுக்கு வேலக்காரி? இருந்தாலும் நம்ம ப்ரெஸ்டிஜை காப்பாத்த வேணாமா? அதுக்காக ஒரு பொண்ண வேலைக்கு வச்சிருக்கேன். அவ அவளோட வீட்டுக்குப் போயிருக்கா. இன்னிக்கு நாளைக்கு வந்திடுவா. எதுக்கும் புண்ணியமில்லைன்னாலும் சாப்பிட டிரஸ் போட தூங்க அவளுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்கேன்”. என்னிடம் சொல்ல இன்னமும் நிறைய இருந்தது.

அதையெல்லாம் வாயால் அவளைச் சொல்ல வைக்காமல் கிளம்புவதுதான் நல்லது என்று எனக்குப் பட்டது. “அப்புறமா ஒரு நாள் வரேன்”. சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நடக்கும்போது நான் நினைத்துப் பார்த்தேன். இவள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால், பணிக்கர் ஒரு பிரபு. பிரபுவாக இருந்தால் கூடப் போதாது. இதையெல்லாம் சாப்பிட்டால்... சாப்பிட்டால் செரிமானக்கோளாறு வராமல் இருக்க அவர் பீம அவதாரமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவள் பொய்ப் பித்தலாட்டக்காரியாக இருக்க வேண்டும். கேட்பவர்களுக்கு கொஞ்சமும் அறிவே இல்லை என்று நினைக்கும் தம்பட்டக்காரியாக இருக்கவேண்டும். இதில் அவள் எதுவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை.

லஞ்சம் வாங்க ஒரு வழியும் இல்லாத ஒரு குறைந்த சம்பளக்காரனுடைய தினசரி வாழ்க்கைக் குறிப்பைத்தான் அவள் விவரித்திருக்கிறாள். வேண்டும் என்றால் பணிக்கரிடமே இதைப் பற்றிக் கேட்டுவிடலாம். “இந்த அளவுக்கு சாப்பிட வழி எப்படி வந்திச்சு? வழி இருந்தாக்கூட வயிறு எங்க இருக்கு? வேணாம். எதுக்காகக் கேக்கணும்” நினைத்துக் கொண்டேன்.

அந்தப் பெண்ணின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதையும் ஏற்பட்டது.

எனக்கும் மனைவின்னு ஒருத்தி இருக்கிறாள். பணிக்கர் வாங்கும் சம்பளம்தான் எனக்கும். இவ்வளவு நேரம் என்னுடைய மனைவிக்கு முன்னால் நான் நின்றுகொண்டிருந்தால் அவள் என்ன சொல்லுவாள் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா?

“கிளம்பறதுக்கு முன்னால ரெண்டு ரூபா கொடுத்துட்டுப் போகணும். கருப்பெட்டிகாரனோட கடன் சொல்லி சொல்லி அவனப் பாக்கறப்ப எனக்கு பயமாயிருக்கு. காலையில சட்னி அரைச்சது வடக்கே இருக்கற வீட்டுலேர்ந்து மிளகாய் கடன் வாங்கித்தான். மத்தியானத்துக்கு ரேஷன்ல அரிசி வாங்கி கஞ்சி வைக்கலாம்னா தொட்டுக்க ஒன்னும் இல்லாம எப்படிக் குடிக்கறது? இதெல்லாம் சமைக்கற எனக்குத்தான் தெரியும். கிணத்துல இருக்கற கயிறு எத்தனத் தடவ பிஞ்சு பொயிடுச்சு தெரியுமா?

அது எப்ப அறுந்து வாளியும் கிணத்துக்குள்ள விழுமோ தெரியல. பல்லு வலிக்கு கொஞ்சம் புகையில திங்கலாம்னா அதுக்கும் வழியில்ல. பல்லு வலி சகிக்கமுடியல”. வேண்டாம். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். என்னுடைய மனைவியின் வாயில் இருந்து இதையெல்லாம் கேட்கும் போது எனக்குக் கோபம் வரும். பதிலுக்கு நான் பேசினால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு ஊகிக்கமுடியும் இல்லையா?

இப்படி அதிர்ஷ்டக்காரரான ராமப்பணிக்கர் “எனக்குப் பசிக்கிறது” என்று கறுப்புப்பட்டை அணிந்து கொண்டிருக்கிறார். இது வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அன்று நடந்தது ஒரு எதிர்ப்புப் போராட்டம் என்றும், பசியின் அர்த்தம் மிகப் பெரியது என்றும் எனக்கும் தெரியும். அவருக்கு பசி இருப்பதால் அவர் அந்தப் பட்டையைப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. அவருடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே அவர் இப்படி செய்தார் என்று மற்ற எல்லோரையும் போல எனக்கும் தோன்றியது. இருந்தாலும் அதற்காக இப்படியா செய்வது?

அவருடைய மனைவி சொன்னதைக் கேட்ட பிறகு, நேராக உண்மை ஆராய அவருடைய வீட்டுக்கு போகவில்லை. அன்றைக்குப் போனதற்கு முன்னாலும் அவருடைய வீட்டுக்கு நான் போனதில்லை. இப்போதும் என்னைப் பார்த்தால் அவள் என்னை ஞாபகத்தில் வைத்திருப்பாள். போய் ஒரு மாதம்தான் ஆகியிருந்தது.

“பசிக்கிறது” பட்டையைப் பார்த்த அன்று சாயுங்காலம் பணிக்கரைப் பார்க்கப் போனேன். அவர் ஆபீசில் இருந்து வீட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழித்துதான் போனேன். அவருடைய சாயங்கால பலகாரத்துக்கு அவ்வளவு நேரம் தேவைப்படுமே? இல்லாவிட்டாலும் நாங்கள் ஒருவரையொருவர் ஒரு தடவை பார்த்திருக்கிறோமே? இருந்தாலும் எனக்காகக் காத்திருந்தது போல அவர் இருந்தார். நான் போகவில்லை என்றால் அவரே என்னைப் பார்க்கக் கிளம்பி வந்திருப்பார் போலத் தோன்றியது.

வேலை பார்த்து வந்த களைப்பு அவரிடம் இருந்தது. ஆபீசில் இருந்து வந்த பிறகு, அவருடைய மனைவி சொன்னது போல எதையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் பதட்டம். ஒரு சண்டை முடிந்தது போல இருந்தது. “உங்க போராட்டம் எத்தன நாளைக்கு?” நான் கேட்டேன். “அதப் பத்தி இங்க ஒன்னும் பேச வேணாம். சமையலறையில இருக்கற பொம்பள தம்பட்டம் அடிக்கறவ”. அவர் சொல்வது உண்மையென்று எனக்குப் பட்டது.


எந்தவிதத்திலும் இருக்கும் சூழ்நிலையை மோசமாக்கக்கூடாது என்று யாரையோ பார்த்துப் பயப்படுவது போல அவர் தாழ்ந்த குரலில் சொன்னார். இருந்தாலும் எனக்குத் தெளிவாக எதுவும் புரியவில்லை. ஆனால் மனைவியுடைய பெருமைக்கு குந்தகம் ஏற்படுவது போல எதையோ செய்த குற்றத்திற்காக குற்றவாளிக் கூண்டில் அவர் நின்று கொண்டிருந்தார்.

நிலைமையை மோசமாக்கவேண்டாம் என்று நானும் நினைத்தேன். வேறு எதைப் பற்றி எல்லாமோ அவர் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு கோப்பை கறுப்புக்காப்பியை கொண்டுவந்து வைத்துவிட்டு அவள் சொன்னாள். “எல்லாருக்கும் நல்லாத் தெரியட்டும். இங்க கறுப்புக்காப்பிதான் குடிக்கறதுன்னு”. “அதுல என்ன இருக்கு? சாதாரணமா நான் இததான் குடிக்கறேன்”. நான் சொன்னேன்.

“என்ன இருந்தாலும் ஊர் முழுக்க இருக்கற தரித்திரத்த டமாரம் அடிக்கணுமா? எல்லோருக்கும்தான் தரித்திரம் இருக்கு. அதை கொண்டாட்டமா ஆக்கினா அவுங்களுக்குதான் அசிங்கம். இங்க எதுவும் இல்லைன்னாலும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு அது தெரியாம இருக்க நான் எவ்வளவு பாடுபடறேன் தெரியுமா? அதுக்காக நான் எத்தன பொய் சொல்லியிருக்கேன்னும் தெரிஞ்சா...”

பேச்சை முடிக்காமல் உள்ளே போய் “இத யாராச்சும் குத்திகிட்டு நடப்பாங்களா?” என்று கறுப்புப்பட்டையை எடுத்து மேசை மேல் வீசியெறிந்தாள். “இதப் பாத்து ஆபீஸ்ல இருந்தவங்க யாராச்சும் நல்ல காபி எதாச்சும் வாங்கிக் கொடுத்தாங்களா? வெக்கக்கேடு. இதக் குத்த்திகிட்டு ஒரு வாரம் ஆபீசுக்குப் போகலைன்னா என்ன குடியா முழுகிடும்? உடம்பு சரியில்லைன்னு சொல்லி வீட்டுல இருக்கக்கூடாதா இந்த மனுஷன்?”

அதுவரை எதையும் கவனிக்காமல் இருந்த பணிக்கர் சொன்னார். “போதும் நிறுத்து. இதெல்லாம் உனக்குப் புரியற விஷயம் இல்ல. உண்மய சொன்னதா குத்தம்?”.

“பொய் சொல்லியே ஆகணும்னா?”. நான் சொன்னேன். “எல்லாம் வெத்துவேஷம். இதனால ஏதாச்சும் நல்லது நடந்திருக்கா?”. அவர் கேட்டார்.

சிறிதுநேரம் அமைதி. பிறகு அவள் தோல்வியை ஒத்துக் கொண்டவள் போல சொன்னாள். “கல்யாணமாயிட்டு வந்தப்ப அம்மா எங்கிட்ட சொல்லி அனுப்பினாங்க. அசலு ஊர்க்காரரு அவரு. சம்பளம் ரொம்பக் குறைவுதான். ராமன கஷ்டப்படுத்தாதே. நம்மளோட தரித்திரத்த யாருக்கும் தெரியாமப் பாத்துக்க. இதச் சொல்லித்தான்...

புகுந்த வீட்டுக்கு நான் கிளம்பறப்ப அம்மா சொன்ன ஒரே அட்வைஸ்”.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p16.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License