இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

பணத்தை விடப் பெரிது

மலையாளம்: கேசவதேவ்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


டாக்டருக்குப் பதட்டம் ஏற்பட்டது. பல நோய்களையும் பல மரணங்களையும் கண்டு பழக்கப்பட்ட அந்த மனுஷனுக்கு மனைவி இரத்த வாந்தி எடுத்தாள் என்று கேட்டபோது பதைபதைப்பு ஏற்பட்டது. தோற்பையை எடுத்துக்கொண்டு அவர் காரில் ஏறினார். நோயாளிகள் நிராசையோடு எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டு நின்றனர். சிலருக்கு ஊசி போடவேண்டும். சில பேருக்கு மருந்து எழுதிக் கொடுக்க வேண்டும். வேறு சிலருக்கு ஆலோசனைகள் சொல்லவேண்டும்.

எல்லோரையும் புறக்கணித்து யாருடைய ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஒரு மதிப்பும் தராமல் அவர் தோற்பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார். யாரும் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது? அவர்களுடைய ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் விலையுண்டு என்று அவர்களுக்கு மட்டுமேத் தெரியும். ஆனால், டாக்டர் அவருடைய மனைவியுடைய ஆரோக்கியத்துக்கும் உயிருக்குமே அதிக மதிப்பு கொடுக்கிறார். அவர்களால் என்ன செய்யமுடியும்?

அது ஒரு சிறிய பட்டிணம். அந்த ஊரில் நிறைய நோயாளிகள் வரும் ஒரு சிறிய ஆஸ்பத்திரி அது. அந்தச் சின்ன ஊரில் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஒரே ஒரு ஆள் அவர் மட்டும்தான். அதே ஊரில் இருந்த மற்றொரு முதலாளி ஒரு பழைய காரை வாங்கினார். அது எப்போதாவது மட்டும்தான் ஓடும். டாக்டருடைய புதிய கார் அந்த ஊரில் ஒரு அதிசயமாக இருந்தது.

ஆஸ்பத்திரியில் இருந்து அவருடைய வீட்டுக்கு ஐந்து மைல் தூரம். ஒரு குன்றின் மேல் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்திருந்த ஒரு நிலத்தின் நடுவில்தான் நவநாகரீக முறையில் கட்டப்பட்ட அந்த வீடு இருந்தது. நோயாளியான மனைவியுடைய உடல் நலத்துக்காகத்தான் அவர் அங்கு குடியேறினார். சொந்தமாகக் காரும் டிரைவரும் இருந்ததால் வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் இடையில் இருந்த தூரம் அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை.

ஒரு வாரமாக பெய்துகொண்டிருந்த மழை அன்றைக்குக் கொஞ்சம் நின்றிருந்தது என்றாலும், காற்று அசுரவேகத்தில் வீசிக்கொண்டிருந்தது. வயல்களில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. காலையில் டாக்டர் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரும்போது சாலையில் இடது பக்கம் இருந்த வயல் நிரம்பி வெள்ள நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. குண்டிலும் குழியிலும் விழுந்து மூழ்கியும் சாய்ந்தும் சரிந்தும் கார் போய்க்கொண்டிருந்தது.

இரண்டு தடவை விபத்துக்குள்ளாகப் பார்த்தது என்றாலும் டிரைவருடைய சாமர்த்தியத்தால் தப்பிக்க முடிந்தது. “வண்டிய வேகமா விடு”. மனப் பதட்டத்துடன் டாக்டர் கட்டளை பிறப்பித்தார். முன்பை விடக் கார் வேகமாக ஓடத்தொடங்கியது. “அய்யோ!”. ஒரு அலறல். கார் சாலையின் நடுவில் இருந்த பெரிய குழியில் விழுந்தது. வயலில் நிரம்பியிருந்த தண்ணீர் சாலையின் எதிர்ப்பக்கம் பாய்ந்து ஓடியது.


சாலை உடைந்து போய் பெரிய குழி ஏற்பட்டிருந்தது. டிரைவருக்கு அது தெரியவில்லை. அப்படி நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. டாக்டருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. காருக்குள் தண்ணீர் ஏறியது. டாக்டருடைய ஆடைகளும் தோற்பையும் நனைந்தன. டிரைவருக்கு இரண்டு மூன்று இடங்களில் சதை பிய்ந்து காயம் ஏற்பட்டது. அவன் பாய்ந்து வெளியில் இறங்கினான். டாக்டரைப் பிடித்து வெளியில் கொண்டு வந்தான்.

நாலாப்பக்கங்களில் இருந்தும் ஆட்கள் ஓடி வந்தார்கள். கார் நசுங்கி ஒடிந்து வெள்ளநீர் நிறைந்திருந்த அந்தக் குழியில் கிடந்தது. மனம் நிறைய பதட்டத்தோடும் நனைந்த ஆடைகளோடும் டாக்டர் சாலையில் நின்றார். அவர் கூட்டத்தைப் பார்த்து கேட்டார். “ஒரு காரு கிடைக்குமா? எவ்வளவு வேணும்னாலும் தரேன். என்னை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டால் போதும்”. அவருக்கு நன்றாகத் தெரியும். அங்கே யாரிடமும் கார் இல்லை என்பது.

ஒருவரும் பதில் சொல்லவில்லை. டாக்டர் அதேக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டார். “எங்கேயிருந்தாச்சும் ஒரு காரைக் கொண்டு வாங்க”.

அருகில் இருந்த ஒருவன் சொன்னான். “இந்த ஊர்ல ஒரே ஒரு கார்தான் இருக்கு. அதுதான் அதோ அந்தக் குழியில விழுந்து கிடக்குது”.

"எனக்கு இப்பவே என்னோட வீட்டுக்குப் போகணுமே?”

“ஒரு குதிரைவண்டி போதுமா முதலாளி?” இன்னொருவன் கேட்டான்.

“போதும். போதும். எங்க இருக்கு? வேகமாக் கொண்டு வாங்க. என்ன கேட்டாலும் தரேன்” டாக்டர் ஆவேசத்தோடு சொன்னார்.

கொஞ்சம் தூரத்தில் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பாய்ச்சன் அலட்சியமாகக் கேட்டான். “என்ன தருவீங்க?”

“என்ன வேணும்னாலும் தரேன். வண்டிய எடுத்துகிட்டு வா”

“அப்படி சொன்னா போதாது முதலாளி. என்ன கொடுப்பீங்கன்னு சொல்லணும். சொன்னாத்தான் வண்டியயும் குதிரயயும் கொண்டு வரமுடியும்”

“எவ்வளவு கொடுக்கணும் சொல்லு”

“எவ்வளவு தூரமிருக்கும்?”

“இங்கேர்ந்து ஏறக்குறைய நாலு மைல் இருக்கும்”

“இருபது ரூபா வேணும்”

“கொடுக்கறேன். வண்டிய எடுத்துகிட்டு வா. அட்வான்ஸா காசு வேணுமா?”

“ம்..”. டாக்டர் பர்சைத் திறந்து ரூபாயை எடுத்தார். அவனுக்கு நேராக நீட்டினார்.

அவன் அதை வாங்கி இடுப்பில் சொருகினான். நடந்தான்.

“வண்டிய இதோ கொண்டு வரேன்”.

பக்கத்தில் இருந்த சிறிய வீட்டுக்குள் நுழைந்தான். இரண்டு சின்ன அறைகளும் சமையலறையும் மட்டுமே இருந்த ஒரு மண் வீடு அது. மனைவியோடு வாழ அவன் கட்டிய வீடு அது. ஆனால் இப்போது அவன் மட்டும்தான் அஞ்கே வசிக்கிறான். மனைவி பிரசவத்தில் செத்துப்போனாள். பத்து இருபது மைல் தூரத்தில் பெரிய பட்டிணத்தில் குதிரைவண்டிக்காரனாக இருந்தான்.


அங்கே பல பேர் சொந்தமாக கார் வாங்கினார்கள். வாடகைக் கார்களும் சுலபமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அதனால் பாய்ச்சனுடைய குதிரை வண்டிக்கு அவசியம் இல்லாமல் போனது. அவன் குதிரை வண்டியோடு சொந்த ஊருக்கேப் போனான். அம்மணியைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த வீட்டில் வாழத் தொடங்கினான்.

அது ஒரு காதல் கல்யாணம் இல்லை என்றாலும், கல்யாணத்துக்கு அப்புறம் அவர்களுடைய இதயங்கள் ஒன்றாயின.

அம்மணி பாய்ச்சனுடைய ஆத்மாவானாள். அந்த சின்ன பட்டிணத்தில் குதிரைவண்டிக்கு அவசியம் அதிகம் ஏற்பட்டதால் பெரிய கஷ்டம் எதுவும் இல்லாமல் அந்த தம்பதிகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அம்மணி கருவுற்றாள். மாதம் ஆனது. அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. ஒரு நாள் ஆனபோதும் பிரசவம் நடக்கவில்லை. பாய்ச்சனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. நாட்டு வைத்தியச்சி ஏதேதோ செய்தாள். அதெல்லாம் அம்மணியை ஆபத்துக்கு அருகில் கொண்டுபோய் விட்டது. அம்மணியுடைய வீட்டுக்காரர்களுடைய ஆலோசனையின்படி மந்திரவாதமும் செய்து பார்த்தான். அப்படியும் பிரசவம் நடக்கவில்லை.

மூன்றாவது ராத்திரியானபோது அவன் பைத்தியக்காரனைப் போல ஆனான்.

சில பேர் உபதேசித்தார்கள். “டாக்டரைக் கூட்டிகிட்டு வரணும்”

வேறு சிலர் சொன்னார்கள். “சொத்த எல்லாம் விக்காம டாக்டருகிட்ட சிகிச்சைக்குப் போக முடியாது”

பாய்ச்சன் யாருடனும் எதுவும் பேசாமல் சாலையில் இறங்கி நின்றான்.

ராத்திரி எட்டு மணிக்கு பிறகு, வழக்கம் போல டாக்டருடைய கார் அந்த வழியாக வந்தது.

பாய்ச்சன் சாலையின் நட்டநடுவில் போய் அசைவில்லாமல் நின்றான். கார் நின்றது.

அவன் டாக்டரிடம் கெஞ்சியபடி கேட்டான். “ஒரு தாயையும் ஒரு குழந்தையையும் முதலாளி காப்பாத்தணும்”

மனதில்லா மனதோடு டாக்டர் காரில் இருந்து இறங்கினார். அவனுடைய வீட்டுக்குள் போனார்.

வெளியில் நின்றுகொண்டு உள்ளே எட்டிப் பார்த்தார். ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டார். கடைசியில் சொன்னார்.

“நாளைக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு வா. பாப்போம்”. அவர் சாலையை நோக்கி நடந்தார்.

அவன் பின்னாலேயே ஓடினான்.

“முதலாளி. காப்பாத்தணும்”

“நாளைக்கு ஆச்பத்திரிக்கு வா” டாக்டர் அலட்சியமாகச் சொன்னார்.

“நாளைக்கு...” சொல்லி முடிப்பதற்கு முன்பே அவன் வாய்விட்டு அலறி அழுதான்.

“சாகாம இருந்தா அங்க கூட்டிக்கிட்டு வா” அவர் காருக்குள் ஏறினார்.

“முதலாளி.. முதலாளி.. காப்பாத்துங்க முதலாளி. காப்பாத்துங்க.. நாங்க ஏழைங்க”

“நான் காசு கொடுத்துதான் படிச்சேன்” நகர ஆரம்பித்த காரில் இருந்து டாக்டர் சொன்னார்.

“முதலாளி... பணத்தக் காட்டிலும் பெரிசு மனுஷன் இல்லயா?” அவன் உரத்த குரலில் அலறினான்.

டாக்டர் அதைக் கேட்கவில்லை. கார் ஒரே தாவலில் பாய்ந்து மறைந்தது.

அடுத்த நாள் காலையில் டாக்டருடைய கார் அந்த வழியாகப் போனபோது பாய்ச்சனுடைய வீட்டுக்கு முன்னால் துயரம் தளும்பிய முகத்தோடு பல பேர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்.

டிரைவர் சொன்னான். “செத்துப் போயிட்டாங்களா இருக்கும்”

“ம்.. ம்..”. டாக்டர் அலட்சியத்தோடு முனகினார்.

ஐந்தாறு மாதங்கள் கடந்து போயின. டாக்டர் அந்த வழியாக தினமும் நான்கு தடவை பயணம் செய்தார்.

அவர் அந்த மண் குடிசையை அதற்கு அப்புறம் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஆனால் கார் அந்த வழியாகப் போகும் போதெல்லாம் குடிசையில் இருந்து தீப்பொறி பறக்கும் இரண்டு கண்கள் அந்தக் காரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தன.

அன்றைக்கு அந்த கார் குழியில் விழுந்தபோது பாய்ச்சனும் ஓடி வந்தான். நனைந்து பயந்து பதட்டத்தோடு தோல்பையையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்கும் டாக்டரையே அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இருபது ரூபாயையும் முன்பணமாக வாங்கிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போனான். அம்மணி சாகும்போது படுத்துக் கொண்டிருந்த கட்டிலையேச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.


ஒரு பெருமூச்சோடு அவன் வெளியில் வந்தான். தெற்குப் பக்கமாக இருந்த குதிரை லாயத்திற்குள் நுழைந்தான். அவன் குதிரையுடைய முதுகில் ஒரு தட்டு தட்டி அதனுடைய முகத்தை வருடிவிட்டு மெல்லிய குரலில் சொன்னான். “குட்டிப்பையா.. மகனே”. குதிரை தலையை ஆட்டியபடி அவன் பேசுவதைக் கேட்டது.

குதிரையை அவிழ்த்து வண்டியில் பூட்டினான். சாலையில் இருந்து பதட்டம் நிறைந்த டாக்டருடைய உரத்த சத்தம் கேட்டது.

“வேகமா.. வேகமா நடக்கட்டும்”

அவன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவன் ஒரு பீடியைப் பற்றவைத்தான். பக்கத்தில் இருந்த ஒரு பலாமரத்தில் சாய்ந்து நின்றுகொண்டு பீடியை ஊதித்தள்ளினான்.

“என்ன இவ்வளவு தாமதம்?” அவன் நிதானமான குரலில் “ம்..” என்றான்.

அவன் டாக்டரைக் கடைக்கண்ணால் பார்த்தான். விழியோரத்தில் இருந்து ஒரு தீப்பொறி பறந்து போனது.

“கூலி பத்தலைன்ன்னா நீ தயங்கிகிட்டு நிக்கற? அஞ்சு ரூபா கூட சேத்துக் கொடுக்கறேன். வண்டிய வேகமாக் கொண்டு வா” அவன் நிதானமாக நடந்துபோனான்.

குதிரையையும் பிடித்துக்கொண்டு சாலையை நோக்கி நடந்தான். டாக்டர் ஐந்து ரூபாயை அவனுக்கு நேராக நீட்டினார். அவன் அதையும் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டான். டாக்டர் தோல் பையையும் தூக்கிக்கொண்டு வண்டிக்குள் பாய்ந்து ஏறினார். அவன் வண்டியின் முன்பக்கம் இருந்த பெட்டி மீது ஏறி உட்கார்ந்தான்.

“வேகமா ஓட்டு’. டாக்டர் வண்டிக்குள் ஊர்ந்து முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்தார்.

பாய்ச்சன் கடைக்கண்ணால் அவரைப் பார்த்தான். கடிவாளத்தைக் கையில் பிடித்தான். குதிரை மெதுவாக நடக்க ஆரம்பித்தது. “பறக்கட்டும்.. பறக்கட்டும்.. குதிரை” டாக்டர் முன்னோக்கிக் குதித்தார். “முதலாளிக்கு என்ன இத்தன அவசரம்? யாராச்சும் சாகக் கிடக்கறாங்களா?”

“என் மனைவியோட உசிருக்கு ஆபத்து!”

”ஹோ.. உங்களோட மனைவி?”

அவனுடைய உதடுகளில் படர்ந்த பரிகாசத்தை அவர் கவனிக்கவில்லை.

“ரெண்டு தடவை ரத்த வாந்தி எடுத்திருக்கா. நான் கிளம்பி ஒரு மணி நேரமாயிடுச்சு. அதுக்கப்புறமும் ரத்த வாந்தி எடுத்திருக்கலாம்”

“அப்படியா? இது ரொம்ப ஆபத்தானதாச்சே முதலாளி?” பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் கேட்டான்.

“நீங்கதானா சின்னம்மாவக் கவனிச்சுக்கறது?”

“அப்பறம் வேற யாரு?” டாக்டருக்கு கோபம் வந்தது.

“நான் ஒரு டாக்டருன்னு உனக்குத் தெரியாதா?”

“நல்லாத் தெரியுமே.. அதனாலதான் கேட்டேன். நீங்க சிகிச்சை செஞ்சா சின்னம்மா காசு கொடுப்பாங்களா?”

“குதர்க்கமாப் பேசாதடா”

“நீங்க காசு கொடுத்துதானே படிச்சீங்க? அப்புறம் எப்படி சும்மா சிகிச்சை செய்யமுடியும்?”

“அதெல்லாத்தயும் நான் பாத்துக்கறேன். நீ குதிரையை வேகமா ஓட்டினாப் போதும்”

“முதலாளியப் போலவேதான் இந்தக் குதிரையும்.. சாகக்கிடக்கறாங்கன்னு சொன்னாலும் இவன் ஓடமாட்டான்”

“உன்னோட கையில சாட்டை இல்லயா?”

“நான் குழந்தை மாதிரி பாசத்தோட சீராட்டிப் பாராட்டி வளக்கற குதிரைய அடிக்க மனசு வராது முதலாளி”

“அப்ப இந்த வேகத்துல போனா?”

“போறப்பப் போகும்”

டாக்டருக்கு கோபம் தலைக்கேறியது.

“டேய்.. என்னோட மனைவி ஆபத்தான நிலையில இருக்கறா. நீ வண்டிய வேகமா ஓட்டுடா”

“கொஞ்சம் அமைதியா இருங்க முதலாளி. என்னோட மனைவிக்கும் இதே மாதிரி ஒரு ஆபத்து வந்துச்சு.. அப்ப ஒரு டாக்டர் வந்து பாத்துட்டு சொன்னாரு. அவரு காசு கொடுத்துதான் படிச்சேன்னு சொன்னாரு. அவ செத்துப்போயிட்ட்டா! நான் இப்பவும் வண்டி ஓட்டறேன்”

யாரோ பலமாகத் தலையில் அடித்தது போல டாக்டர் அசைவற்றுப் போனார். அன்றைக்கு ஒரு நாள் ராத்திரியில் ஒருவன் சாலையின் நடுவில் நின்றுகொண்டு காரை நிறுத்தியதும் டாக்டர் அந்த மண் குடிசைக்குள் போநதும் மயக்கத்தில் கிடந்த அந்த நோயாளியைப் பார்த்ததும் எல்லாம் அவருடைய ஞாபகத்திற்கு வந்தது.

அலறி அழுதுகொண்டு “காப்பாத்துங்க” என்று கெஞ்சிய அந்த மனிதன்தான் இப்போது கடிவாளத்தையும் சாட்டையையும் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவன் அவரைப் பழி வாங்குகிறான்... அப்படியென்றால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பிரச்சனை. சொந்த மனைவியுடைய வாழ்வா சாவா பிரச்சனை இது.

அவர் படபடப்போடு சொன்னார். “வண்டிய வேகமா விட்டா நான் இன்னும் பத்து ரூபாயையும் சேத்துத் தரேன்”

அவர் பர்ஸைத் திறந்து நோட்டை எடுத்தார்.

பாய்ச்சன் அதையும் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டான். அவன் கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்தான். லேசாக ஒரு அடி கொடுத்தான்.

குதிரை இரண்டு மூன்று தடவை தள்ளாடியது. வண்டி கவிழ்ந்துவிடும் போல இருந்தது.

அவன் சொன்னான். “புத்தி இல்லாத குதிரை இது”

“என்னைக் காப்பாத்து” டாக்டர் பிச்சைக்காரன் போல யாசித்தார்.

அவருடைய கண்கள் நிறைந்தது. நா தழுதழுக்க சொன்னார். “அவ செத்துப் போயீட்டா என்னோட வாழ்க்கையே தகர்ந்து போயிடும். நாலு பசங்களோட அம்மா அவ” அவர் கெஞ்சினார்.

மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த குன்றின் மேல் குதிரை பாய்ந்து ஏறியது. அந்தப் பெரிய வீட்டுக்கு முன்னால் போய் நின்றது.

டாக்டர் தோல் பையையும் எடுத்துக்கொண்டு வண்டியில் இருந்து பாய்ந்து இறங்கினார். வீட்டுக்கு உள்ளே ஓடினார். அவன் வண்டியில் இருந்து இறங்கினான். குதிரையுடைய முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டினான். அதன் முகத்தை வருடிவிட்டான்.

“குட்டிப்பையா. மகனே”. குதிரை மூச்சிரைத்தபடியே தலையை ஆட்டியது. அவன் ஒரு பீடியைப் பற்றவைத்தான். அந்தப் பெரிய வீட்டில் விசாலமான வராந்தாவில் போய் நின்றான். உள்ளே ஓசைகளும் குரல்களும் கட்டளையும் கேட்டன. மெல்ல மெல்ல எல்லாம் அமைதியாயின. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த ஒரு வேலைக்காரனிடம் பாய்ச்சன் கேட்டான்.

“எப்படியிருக்கு? ஊசி போட்டாச்சா?”

“இனிமெ ஆபத்து இல்லைன்னுதான் முதலாளி சொல்றாரு”


உள்ளேயிருந்து டாக்டருடைய கட்டளை பிறந்தது. “இங்க யாரும் நிக்கக்கூடாது. அவ தூங்கட்டும்”

பாய்ச்சன் இடுப்பில் சொருகியிருந்த ரூபாயை கையில் எடுத்தான். எண்ணிப் பார்த்தான்.

அதை வராந்தாவில் வைத்து முற்றத்தில் இருந்து ஒரு சின்ன கல்லை எடுத்து அதன் மேல் வைத்தான். ஓடிப்போய் வண்டியில் ஏறினான்.

கடிவாளத்தைக் கையில் எடுத்தான். சாட்டையை ஒரு வீசு வீசினான். குதிரை வந்த வழியாக ஓடத்தொடங்கியது.

டாக்டர் வராந்தாவுக்கு வந்தார். கேட்டார். “அந்த வண்டிக்காரன் போயிட்டானா?”

“காசை அங்க வச்சுட்டு அவன் வண்டியில ஏறிப் போயிட்டான்” ஒரு வேலையாள் சொன்னான்.

ரூபாயைக் கையில் எடுத்து டாக்டர் ஓடிக்கொண்டிருந்த வண்டிக்குப் பின்னால் ஓடினார்.

“நில்லு. நில்லு. இத எடுத்துகிட்டுப் போ”. பாய்ச்சன் திரும்பிப் பார்த்தான்.

அவன் உரத்த குரலில் சத்தமாக சொன்னான். “”பணத்த விட பெரிசு மனுஷன்”

குன்றின் சரிவில் விசாலமான வயலில் இருந்து மரங்களைத் தலை வருடி வீசிக்கொண்டிருந்த காற்றுஅந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p22.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License