இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

பணம் முக்கியமில்லை

மலையாளம்: காரூர் நீலகண்டபிள்ளை

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


அழகான நாள். தெளிந்த வானமும் மஞ்சள் வெய்யிலும். பெரிய பையன் வெளியில் கிளம்பினான். கம்பளி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தான். பழையதாகிப் போனதால் நிறம் மாறிப் போயிருந்தது. செருப்பு புதுசு. மிகக் குறைந்த விலை. மூத்த பிள்ளை வீட்டுக்கு முன்னால் இருந்த ஜாதி மரத்தின் நிழலுக்குப் போய் வழியைப் பார்த்துக் கொண்டு நின்றான். சில மாதங்களாக எப்போதும் இது போல அவன் நிற்பது வாடிக்கை.

அதைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு அற்புதக் காட்சி அங்கே இருப்பது போலத் தோன்றும். ஆனால் எதுவும் இல்லை. அந்த வழியே யாராவது எப்போதாவது போவார்கள். இன்றும் ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள். வடக்கு பக்கம்தான் நிறைய பேர் போய்க் கொண்டிருப்பார்கள். ஐந்தாறு பேர் சேர்ந்தாற் போலவும் போவார்கள். அதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உண்டு.

சிலருடைய தோள்களில் தூண்டில்கள் உண்டு. வழிக்கும் அவன் நிற்கும் இடத்திற்கும் இடையில் பாதி தூரத்திற்கு சரிவுதான். மீதி இடம் சமதளம். சரிவை மண் அடித்துக் கொண்டு போகாமல் இருக்க தட்டுகளாகப் பிரித்து வரப்புகள் வெட்டிவிடப்பட்டிருந்தன. மரங்களில் கொடி மிளகு படர்ந்திருந்தன. அவனுடைய வாடிக்கையான வேலைக்காரன் சின்ன தம்பி வந்து “வெட்டு அரிவாள் கொஞ்சம் வேணும்” என்றான்.

“வழி வெட்டறதுக்குதான்”. விவரம் சொன்னான். “வழி வெட்ட நிறய பேர் இருக்காங்களா?”. “தினம் பத்து ரூபா கூலி. நல்ல வேலை. எல்லாரும் சேந்து செஞ்சா சுலபமா முடிஞ்சுடும்”. “அதெப்படி?”. “எல்லாருக்கும் வேலை செய்யணும்ங்கற நினைப்பு கிடையாது. சர்ச்சுக்குப் போகற ரோடை உண்டாக்க. கூலி தந்தாத்தான் வருவோம்னு சில ஆளுங்க சொல்லி வேலைக்கு வர்றது இல்ல.

சிலருக்கு இடம் போகறத நினைச்சு சங்கடம். ஒரு ஆளுக்கு முப்பது செண்ட் இடம் இருக்கு. அந்த ஆள் இடம் தரமாட்டேன்னு சொல்லியாச்சு. அந்த ஆளு மண்வெட்டிய எடுத்து வீசியெறிஞ்சாரு. எதிர்ப்பக்கத்துலேர்ந்து அதிகமா எடுத்தாச்சு. நான் இந்த வேலைக்கு வர்றது இன்னிக்கு நாலாவது நாளு. வேலை செஞ்சு கூலி கிடைச்சாதான் குடிசைக்குப் போய் கஞ்சி வைக்க முடியும். இந்த சச்சரவெல்லாம் முடியற வரை வேலைக்கு வரவேணாம்னுதான் நினைச்சேன்”


“பத்து நாளு காய்ச்சல் வந்து படுத்துகிட்டா கூலி வேலைக்குப் போக முடியுமான்னு நினைச்சுகிட்டு அப்படி இருந்தியா?. இரண்டு வேளை கறுப்பு காபியாச்சும் இங்க வந்தா கிடைக்கும். மத்தியானத்துக்கு அரிசிக் கஞ்சியும் கிடைக்கும்”. மூத்த பிள்ளை சொன்னான். “அவனவனுக்கு எப்படியோ? எனக்கு இதெல்லாம் மேல்”

“நீ ஒரு காரியம் செய்யு. இன்னிலேருந்து பாதைய வெட்டப் போயிட்டு சாயங்காலமா இங்க வா. நான் ஏதாச்சும் கொடுக்கறேன். என்னோட பங்குக்கு நீ வேலை செஞ்சா நான் காசு கொடுத்துடறேன். இது அந்தக் கணக்கு இல்ல. நீ அரிவால எடுத்துகிட்டு போ...” அவன் போன பிறகே மூத்த பிள்ளை படி இறங்க ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று படிகளை நிதானமாக இறங்கினான். “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? அங்க இறங்கினா இங்க ஏறவேணாமா?”. மனைவி அருகில் சென்றாள்.

அவன் வராந்தாவுக்குப் போனான். “நல்லது. நாப்பத்தி மூணு படி இருக்கு இந்த வீட்டுல. அத அஞ்சு பிரிவா பிரிச்சிருக்கு. அதுவும் நல்லதுதான்” அவன் படியேறினான்.

பத்து ஏக்கர் அளவுக்கு பரப்புள்ள தோட்டம். அது அவனுடைய உழைப்போட பலன். ஒன்பது அறைகள். சமையலறை. தொழுவம். எல்லாம் சேந்தபோது அந்தக் கிராமத்திலேயே அது பெரிய வீடாக மாறியது. இரண்டாம் உலகப் போர் அவனுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. பல சரக்குக் கடையில் கணக்கெழுதுபவனாக இருந்த அவன் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டாம் என்று அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக வியாபாரத்தை ஆரம்பித்தான்.

பிறகு ரீட்டைல் வியாபாரி. அதுக்கு அப்புறம் அரிசி சர்க்கரை மண்னெண்ணை ஹோல் சேல் வியாபாரம். ராணுவத்தில் சேர்ந்த ஆட்கள் அனுப்பிய ரூபாய் நோட்டுகள் ஊரில் பறந்து வந்து கொண்டிருந்த காலம். அதில் இருந்து அதிக அளவு அவன் பிடித்தெடுத்தான். அதற்கு முன்பு வரை குஞ்சு சங்கரப்பிள்ளை என்று அவனை ஊர்க்காரர்கள் கூப்பிட்டார்கள். அதன் பிறகு, அவனை எல்லோரும் மூத்த பிள்ளை என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.

ஒரே ஒரு லட்சியம்தான் அவனுக்கு அப்போது. பணம் சேர்ப்பது. அது சேர்ந்தது. வேறு எதற்கும் நேரமில்லை. வீட்டில் இருந்து புறப்பட்டால் கடைக்கு. அங்கிருந்து கிளம்பினால் வீட்டுக்கு. வியாபாரம் தொடர்பாக மட்டும் ஆலப்புழைக்கோ கொச்சிக்கோ போவான். முழுநேர மூச்சும் பேச்சும் செயலும் எல்லாம் வியாபாரம் மட்டும்தான். சின்ன வயதில் வறுமையை அதிகமாக அனுபவித்தான். வியாபாரம் தழைத்து வளர ஆரம்பித்த போது குடும்பத்தில் இருந்து ஜாகையை மாற்றினான்.


மனைவி குழந்தைகளுடன் தனியாக வந்தான். எல்லாவற்றிலும் எளிமை. சாப்பாடு. துணிமணிகள். வீடு. வீட்டுச்சாமான்கள். எதிலும் ஒரு ஆர்ப்பாட்டமும் கிடையாது. அவனுடைய வளர்ச்சி பனை போல இருந்தது. ஒரு காற்றும் அவனை அசைக்கக்கூட முடியவில்லை.

ஊர்க்காரர்களுக்கும் அவன் மீது ஒரு அலாதி மதிப்பு இருந்தது. ஏதாவது உதவி கிடைக்கும் என்பதற்காக இல்லை அது. பணக்காரனை யார்தான் ஆதரிக்காமல் இருப்பார்கள்? “இன்னும் ஒரு வீடு கட்டணும். குழந்தைகளுக்கு வயசாயிடுச்சு. வேணுங்கற அளவுக்குத்தான் பணம் இருக்கே? ஆனா அது மட்டும் போதாது. நல்ல இடமா யோசிச்சு வாங்கணும். வீட்டுக்கு ப்ளான் வரையணும். வேலை செய்ய ஆளுங்கள நியமிக்கணும். அதுக்கு வேணுங்கற சாமான்கள் எல்லாத்தயும் சேக்கணும். கூடவே நின்னு வேலய வாங்கணும். யாருகிட்ட இது எல்லாத்தயும் கொடுக்கறது? கொஞ்ச நாளா இதே யோசனையாத்தான் இருக்கு”.

கடைசியில் சொந்தக்காரர்களில் ஒருவரிடம் இதையெல்லாம் ஒப்படைத்தான். எல்லாம் முடிந்த போது, அந்த ஆள் ஏமாற்றிவிட்டானோ என்று ஒரு நினைப்பு ஏற்பட்டது. அது சிலருடைய வாய்ப் பேச்சுகளால் வலுவடைந்தது. “ஒன்னு ஒன்னரை வருஷம் ஓடியாடி வேலைசெஞ்சதுக்கு நன்றி இல்லயே அந்த ஆளுக்கு?”. இந்தப் பேச்சு அவன் மீது குற்றச்சாட்டாக பாய்ந்தது. அவனுக்குள் பதட்டம் அதிகமானது.

அவன் நோயாளியானான். மருந்து மாத்திரை. பத்தியச் சாப்பாடு. ஓய்வு எல்லாம் அவசியமானதாக மாறியது. வியாபாரத்தைத் தொடர முடியாத நிலைமை. பெண் குழந்தைகள் அவரவர்களுடைய புருஷன்காரர்களுடன் தூரத்தில் குடியிருந்தார்கள். பெரிய பையனுக்கு வயசாகிறது. அவன் ஊதாரி. எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாதவன். அவன் எதையும் கண்டுகொள்வது இல்லை. ஐந்தாறு நாட்களுக்கு ஒரு தடவை மட்டுமே வீட்டுக்கு வருவான்.

சின்ன மகன் ஸ்கூலில் படிக்கிறான். வியாபாரத்தைப் பொறுப்பாக நடத்த சரியான ஆள் யாரும் இல்லை. மெல்ல மெல்ல அது சுருங்கிச்சுருங்கி ஒரு பங்காளியையும் சேர்த்துக் கொண்ட பிறகும் கடைசியில் தன்னுடைய எல்லா பங்குகளையும் உரிமையையும் பங்காளிக்கு விற்று அவன் வீட்டோடு ஒதுங்கினான். மனைவியும் சின்னவனும் கூட இருந்தார்கள்.

பெரிய பையன் எப்போதாவது சாப்பிட வருவான். ஒரு மின்னல் மாதிரிதான் அவனுடைய வரவும் போக்கும். எதற்கும் கஷ்டம் இல்லை. வங்கியில் போதுமான அளவுக்கு பணம் இருக்கிறது. குத்தகைக்கு விட்டிருக்கும் நிலத்தில் இருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. பாத்திரம் பண்டங்களை அடகு வைத்தால் வட்டிக்கு காசு கொடுக்கும் சின்ன அளவு வேலையை மனைவி செய்துவந்தாள்.

இவ்வளவு இருந்தாலும் மூத்த பிள்ளைக்கு மனதில் ஒரு நிம்ம்மதியில்லை. இந்த மலை வீட்டில் வாழ்ந்து அலுத்துப் போய்விட்டது. கடைத்தெருவில் மக்கள் நெரிசலில் வாழ்ந்து கொண்டிருந்த ஆள் அவன். இப்போதோ பெரும்பாலான சமயங்களிலும் தனிமைதான். மகன் ஸ்கூலுக்குப் போவான். வீட்டில் இருக்கும் போது அம்மாவோடு சேர்ந்து இருப்பான். அவனுக்கு அம்மாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அவனைக் கொஞ்சி அவனோடு விளையாட அப்பாவான மூத்த பிள்ளைக்கு முன்பெல்லாம் நேரமில்லையே!

மனைவி சமையலறை வேலைகளைப் பார்ப்பாள். விவசாயத்தில் ஈடுபடுவாள். ஆடு மாடுகளை பராமரிப்பாள். இதிலேயே அவளுடைய பெரும்பாலான நேரமும் கழிந்து போய்விடும். அவ்வப்போது மூத்த பிள்ளை மட்டும் தனியாளாக வெளியில் இறங்கி வாசலுக்கு அப்பால் தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் பார்வையின் புலனத்திற்குள் வரும் பழமரங்கள் செடிகொடிகள் இவை எதுவும் அவனைக் கவரவில்லை.

பாதையில் நடந்து போகிறவர்களைத்தான் வேடிக்கைப் பார்ப்பான். அதுதான் அவனுடைய லட்சியமும் கூட. பாதையின் பெரும்பகுதியும் மரங்களால் மறைந்தே இருந்தது. பஸ் போகும் ரோடுக்கு செல்லும் மூன்றடிப் பாதை அது. அந்த வழியாக வடக்குப் பக்கமாகப் போனால் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தைப் பார்க்கலாம். அது சர்ச்சுக்குப் பக்கத்தில் இருந்தது. எதிர்ப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கோயில் இருந்தது.

இரண்டு பக்கங்களிலும் காபி கடைகள் சில்லறைக் கடைகள் இருந்தன. ஸ்கூலில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. இதனால் அந்தப் பாதையில் அடிக்கடி ஆட்கள் நடமாடுவதைப் பார்க்கலாம். இந்த வழியாகப் போகிற ஆட்களைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு அலாதிப் ப்ரியம். திரும்பி வர ஏற வேண்டியிருக்கவில்லை என்றால் அவன் பாதையிலேயே போய் நின்று கொள்வான்.

மேடு ஏறக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். டாக்டர் அதற்கு ஒப்புக் கொண்டாலும் பயன் ஒன்றும் இல்லை. அதற்கெல்லாம் அவனுடைய உடம்பில் சக்தி இல்லை. ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து பாதையை அகலப்படுத்துகிறார்கள். லாரி போகிற அளவுக்கு அகலம் இருக்க வேண்டும். ஆனால் பஞ்சாயத்துக்கு விட்டுக்கொடுத்தால் அந்த இடத்தைப் பாதுகாக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இரண்டு பக்கமும் இருப்பவர்கள் இடத்தை காசு பணம் வாங்காமல் இலவசமாக விட்டுக் கொடுக்க வேண்டும். பாதையை வெட்டும் வேலையை ஊர்க்காரர்கள் எல்லோரும் கூடி ஒன்றாகச் சேர்ந்தே செய்யவேண்டும். இல்லாவிட்டால் வேலைக்காரனை அமர்த்தக் காசு கொடுக்க வேண்டும். முக்கியப்புள்ளிகள் வேலை செய்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த இடையிடையில் வெட்டும் வேலைக்கும் மற்ற சமயங்களிலும் அங்கே ஆஜராக வேண்டும்.

இட உரிமையாளருடைய சம்மதத்தை யாரும் கேட்கவில்லை. எல்லோருக்கும்தானே? யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிள்ளையுடைய இடம் அதிகமாகவேப் போகும். அது வயல். இப்போது நெற்கதிர் விளைந்து கிடக்கும் செழுமையான நிலம். விட்டுக் கொடுக்க வேண்டிய அந்த இடம் மட்டும் பத்து செண்ட் இருக்கும்.


அது பாதையோரமாக இருந்தது. இரண்டு பக்கத்தில் இருந்து சமமாக எடுத்தாலும் கூட பிள்ளைக்கு ஏழு செண்ட் இடம் நஷ்டமாகும். இந்த அளவுக்கு நஷ்டம் யாருக்கும் ஏற்படவில்லை. எதிர்ப்பக்கத்தில் மூன்று பேர் இடம் விட்டுக் கொடுத்தாலேப் போதும். மூத்த பிள்ளை எதிர்ப்பார் என்று பலரும் நினைத்தார்கள். சுகமில்லாமல் வீட்டில் இருக்கிறான் அவன் என்றாலும் அவனிடம் இதைப் பற்றிப் பேசவே எல்லோருக்கும் தயக்கம்.

அவன் புத்திசாலியானவன். பிடிமானம் உள்ளவன். இதைப் பற்றி தன்னிடம் பேச பலரும் வருவார்களோ என்று அவன் யோசித்தான். தூரத்தில் இருந்த குழந்தைகள், அவர்களுடைய குழந்தைகளுடைய பிறந்த நாள்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும். அதில் ஒரு சுவாரசியம். அடுத்த ஏகாதசிக்கு ஒரு பட்டாபிஷேகச் சொற்பொழிவு நடத்த வேண்டும்.

பாதையில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் மத்தியான சாப்பாடு போடவேண்டும். நடுநடுவில் ஏதாவது பண்டிகைகள் வரவேண்டும். கொஞ்சம் காசு செலவழிவதால் ஒரு குறைவும் வந்துவிடப் போவதில்லை. அறுவடை முடிந்தபிறகுதான் அவனுடைய எல்லையில் இருந்த இடத்தை பாதைக்காக எடுத்தார்கள். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அவன் தியாகம் செய்தான்.

சாக்கோ மாப்பிள இரண்டாவதாக வந்தது ஒரு மாதம் கழித்துதான். “நான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். இங்க வர்றதுக்கு என்ன இவ்வளவு நாளா யோசனை?”. மூத்த பிள்ளை அவரை வரவேற்றான். “என்ன விசேஷம்?”. “விசேஷமா எதுவும் நடக்கல. நான் இப்படியே இங்கயே கிடந்து அலுத்துப்போச்சு. செய்யறதுக்கு ஒரு வேலையும் இல்ல”.

“வேல செஞ்சு பழக்கப்பட்டவங்களுக்கு சும்மா இருக்கறதுன்னா மூச்சு விடறது கூடக் கஷ்டமான காரியம்தான்”. “உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தா நேரம் போகறதே தெரியாது. பழைய காரியங்கள் எல்லாம் வேற யாருக்கு இந்த அளவுக்கு நல்லாத் தெரியும்?”. “நானும் அப்பப்ப நினைச்சுப் பாத்துப்பேன். நேரம் கிடைக்கறப்ப எல்லாம் இங்க வரணும்னு. இந்தப் படிய எல்லாம் ஏறி வர்றனும்னு நினைச்சாலே பயமாயிருக்கு. அதனாலயே வரவேணாம்னும் இருந்துடுவேன்”.

“வயசு எழுபத்தி ஏழு ஆயிடுச்சு”. “எழுபத்தி ஏழா? எனக்கு அம்பத்தெட்டுதான் ஆகுது. அதுக்குள்ளயே வீட்டிலேர்ந்து வெளியக் கூட கால் எடுத்துவைக்க முடியாமப் போயிடுச்சு”. “பாதை போடக் கொடுத்ததுல நிறய இடம் போயிடுச்சு போல இருக்கே?. இடத்தக் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க முடியாதுன்னு குரு தர்க்கம் செஞ்சப்ப உங்க பேரச் சொல்லி அவருகிட்டப் பேசி முடிச்சாங்க. பிள்ளை பாதை போட வேண்டிய இடத்தக் கொடுக்காம இருந்திருந்தா பலம் ப்ரயோகிச்சு போலீசோட உதவியோட இடத்த எடுத்திருப்பாங்க.

நான் கேள்விப்பட்டேன். பாதைக்கு நீங்க இடம் கொடுக்கல. நீங்களே பாதய போட்டுக் கொடுத்துட்டீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. அதனால என்ன? பாதயோட வளைவ போட்டு முடிச்சப்ப ரோடோட அந்தப் பக்கத்துல பிள்ளைக்கு ஒரு பெட்டிக்கடைக்குத் தேவையான இடம் உண்டாச்சு”. அப்போது பாதையில் ஒரு லாரி வந்து நின்றது. இரண்டு பேரும் அங்கே போய்ப் பார்த்தார்கள். அவர்களுடைய முகம் தெளிவானது.

“அதெல்லாம் மரம் இல்லயா? யாருக்கு?”. மூத்த பிள்ளை சொன்னான். “புலித்தோலன் ரோட்டுக்கு பக்கத்துல பெட்டிக்கட வைக்கப்போறான். அந்தப் பக்கமாப் போனப்ப நான் அவங்கிட்ட கேட்டேன். உநக்கு ரோடு வேணாம்னு சொல்லிட்டு இப்ப லாரி வர்றதுக்கு மட்டும் அது வேணுமான்னு கேட்டேன்”. “வெட்கம் கெட்ட ஜந்து”. “சாக்கோ. நீங்க இதப் பத்தி அவங்கிட்ட கேக்கப் போகாதீங்க. அவன் ஒரு நிலையில்லாத ஆளு. நான் கூட யோசிச்சேன். சாக்கோ. ரோட்டோரத்துல சின்னதா ஒரு வீடு கட்டணும்”.

“வியாபாரம் செய்யவா? அப்படின்னா எனக்கு வாடகைக்கு தரணும். உக்காந்துக்க ஏதாச்சும் இடம்னு ஒன்னு வேணும். உப்பையோ மிளகாயையோ எதையாச்சும் வச்சுகிட்டு இருந்தா வயித்த நிரப்ப காசுன்னு ஏதாச்சும் கிடைக்கும். சின்ன வயசிலேருந்து செஞ்சுகிட்டு இருந்த வேல தானே?”. “கடை ஒன்னும் வைக்கப்போறது இல்ல. நான் இருக்கறதுக்கு ஒரு சின்ன இடம். ரெண்டு ரூமும் ஒரு வாசலும் அதுல ஒரு திண்ணையும் இருந்தாப் போதும்”.


“இவ்வளவு பெரிய வீடு இருக்கு. அப்படியும் எதுக்காக சின்னதா ஒரு வீடு கட்டறீங்க?”. “இங்க இருந்து ரொம்ப அலுத்துப் போச்சுன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும். மனுஷங்களப் பாக்காம இருந்தா நான் பைத்தியமாயிடுவேன். ரோடு பக்கத்தில இருந்தா மனுஷங்களப் பாக்கலாம். வெளியில இறங்கி கொஞ்சம் நடக்கவும் செய்யலாம். பணம் முக்கியமில்ல. மனுஷந்தான் முக்கியம்னு சொல்றது எவ்வளவு பெரிய சத்தியம்!

வீட்டுக்காரி சொல்லியும் கேக்காம ஒரு நாள் நான் புதுசா போட்ட ரோடுல கொஞ்சதூரம் நடந்தேன். நல்ல முதல் தரமான பாதை”. “எல்லாரும் ஒத்துமையா இருந்தா நம்பளோட இந்த காஞ்சு போன பூமி கூட சொர்க்கப் பூமியாயிடும். எல்லாரும் ஒத்துமையா இருப்பாங்க. முன்னால நின்னு செய்ய ஒரு ஆளு வேணும். அவ்வளவுதான்”.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p36.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License