“1977, டிசம்பர் 31ஆம் நாள் ராத்திரி10.35 மணிக்கு நான் பிறந்தேன். சரியா நாலு மணி நேரம் கழிச்சு 1978 ஜனவரி விடியற்காத்தால 2.35. என்னோட அம்மா செத்துப் போயிட்டாங்க. நாலுமணி நேரம் நான் அம்மாவுக்குப் பக்கத்திலேயே இருந்திருக்கணும். அப்ப அம்மா கிட்ட இருந்து தாய்ப்பால் குடிக்கறத்துக்கு சான்ஸ் கிடைச்சுதான்னு தெரியல. அம்மாவோட உடம்பு இளம் சூடா இல்லாம ஜில்லுன்னுதான் இருந்திச்சுன்னுங்கற லேசான ஞாபகம் என்னோட மனசுல இல்ல. அம்மாவோட சிதை எரியறப்ப என்னோடப் பிறப்பப் பத்தி வீட்டுல இருந்தவங்களும், ஊர்ல இருந்தவங்களும் விவாதம் செஞ்சு ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பாங்கன்னான்னு கூட வச்சுக்கலாம். பத்து கால்களுள்ள ஏதோ ஒரு ஸ்பெஷலான நாள்லதான் நான் பிறந்தது. அதுல மிக நீட்டமா இருந்த காலு அம்மாவச் சுத்திகிட்டு இருந்திருக்குது போல. மத்த காலுகள் யாரு பக்கம் இனி மேல நீளும்ங்கற ஒரு பீதியான சூழ்நிலையில ஒரு பயங்கரமான ஜீவியா நான் வளந்துகிட்டுஇருந்தேன். இப்படித்தான் ஒரு புத்திஜீவியா நான் மாறினது எண்ணங்கள் என்னைக் கட்டுப்படுத்தறதுக்குப் பதிலா அவை என்னைக் கட்டுப்படுத்திகிட்டு இருக்கு. இதுக்கு நடுவுல கொஞ்ச காலத்துக்குத்தான்னாலும் ஒரு வேதபாட கிளாசுக்குப் போய்ச்சேரவேண்டியதா இருந்தது. வயசு வித்தியாசம்இல்லாம அதில போய் யாரு வேணும்னாலும் சேரலாம்னாலும், பேர சொன்னதுக்கு அப்புறம்தான் கிளாசுக்குள்ல நுழய விடுவாங்க. எந்தச் சாதியச் சேந்தவன்னு பேர்லேந்து தெரிஞ்சுக்கலாங்கறதுதான் காரணம். ஒரே மாதிரியா யோசிக்கறவங்களா இல்லயாங்கறதக் கண்டுபிடிக்கற விசாலமான மனசு. சொல்றது கேக்கறது எதுவுமே புரியறது இல்லைன்னா ரத்தக்குழாய்கள்ல ஓடற ரத்தம் என்ன குரூப்ன்னு போய் லேபரட்டரியில செக் செஞ்சுக்கணும். ஏன் இப்படில்லாம் செய்யறாங்கன்னு சத்தியமா கேட்டா கேள்வி உண்மயா இருந்திச்சுன்னா பதில் சொல்ல வேண்டியது அவுங்களோடப் பொறுப்புதான்.
அதுக்கான பதில அச்சடிச்ச பேப்பர்ல உங்ககிட்ட விநியோகம்கூட செய்வாங்க. பாத்தது இல்லயா. பஸ் ரயிலிலோ போறப்ப. தூங்கிப் போயிடற நம்பளத் தேடி நம்பளோட மடியவந்துசேர்ற நோட்டீசுங்க. அழகழகான பேப்பர்கள்ல கலர் கலரான எழுத்துகள்ல வந்து சேர்ற நோட்டீசுங் உடனே தூக்கிப் போடறதுக்கு நம்பளோட மனசு ஒத்துக்கரது கிடையாது. அந்த அளவுக்கு அழகாஇருக்கும் அதெல்லாம்! முதல்ல கவனத்தக் கவர்றறது பெரிய பெரிய கொட்ட எழுத்துல இருக்கற எழுத்துங்கதான். படிச்சுப் பாக்கறதுக்கு ஆசைஇல்லாம இருன்தாலும்கூட அழகா இருக்கும்
அதெல்லாம். ஒரு பதிப்பகத்தில நிறய நாள் வேலைப் பாத்துகிட்டு இருந்ததனால அழகான அச்சுங்கள வேகமா தெரிஞ்சுக்க என்னால முடியும். சம்பிரதாயமா ‘ ரேவதி இல்ல கார்த்திகைங்கற அழகான பேர்கள் உள்ள கொழுகொழுன்னு இருக்கற எழுத்துகதான் நம்பளப் பாத்துக் கேள்விக்குறி மாதிரி முழிச்சுகிட்டு இருக்கும். இந்த மாதிரி நோட்டீசுங்கள படிக்கறவங்களோட மூஞ்சி பல நேரத்திலும் மோசமா மாறறத நான் பாத்திருக்கறேன். இங்க நான் என்ன செய்யறேன் அல்லது என்னோட வேலை என்னன்னு லேசா ஒரு க்ளூ கூட கொடுக்கலைன்னா இந்த விஷயங்கள எல்லாம் சரியாஎப்படிப் புரிஞ்சுக்கமுடியும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
****
காலையிலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் டிரெயின்ல பயணம் செய்யற வேலையைத்தான் எனக்கு நானே தேர்ந்தெடுத்துகிட்டேன். டிரெயின்ல டிக்கெட் பரிசோதகனோ. டிரெயின் சந்தேகம் சிலருக்காச்சும் வரும். ரெண்டு வேலைப் பாக்கறவங்களோடயும் பிரென்ட்ஷிப் இருந்தாலும் கூட அவுங்க கூட்டத்தச் சேந்தவன் இல்லை நான். அப்புறம். ரயில்வே கேட்டரிங் சர்வீசுல வேலை செய்யறஆளோன்னோ சந்தேகம் வரலாம். அந்தக் கூட்டத்தச் சேந்தவனும் இல்லைநான். கோட்டயம் கொல்லம்ங்கற ரெண்டுரயில்வே ஸ்டேஷன்கள எடுத்துக்கங்க. காலையிலே கோட்டயத்துக்குப் போகற பாசஞ்ஜர்ல ஏறினா சங்கனாச்சேரி, செங்கண்ணூர், திருவல்லா இந்த இடங்கள்ல எங்கயாச்சும் இறங்கிட்டு திரும்பவும் கோட்டயத்துக்குப் போகற இன்னொரு பாசஞ்ஜர்ல ஏறுவேன். மறுபடியும் கோட்டயத்துலேந்து எக்ஸ்பிரசிலோ சூப்பர் எக்ஸ்பிரசிலோ ஏறி மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி இடங்கள்ல கிராசிங் போடற இடத்தில இறங்கி திரும்ப கோட்டயத்துக்குப் போவேன். என்னோட வேலை குட்டி குட்டி சாமாங்கள விக்கற வென்டரா இருக்கும்னு நீங்க முதல்ல நினைச்சுப்பீங்க. ரெண்டாவது இல்லாத உடம்பு ஊனத்தையோ குறையையோ காட்டி பயணிகளோட பரிதாபத்த சம்பாதிக்கற ஒரு பிச்சைக்காரனா இருக்கும்னு நினைப்பீங்க. ரெண்டோடயும் அடிப்படையான குறிக்கோள் பொருளாதார முன்னேற்றம்தான்னாலும் ஒரு பதிப்பகத்தில வேலை பாத்துகிட்டு இருந்த ஆள்ன்னு முன்னாலயே சொல்லியிருக்கறேன், வேலை வெட்டி இல்லாதவனா இருந்தா என்ன? பதிப்பகமா இருந்தா என்ன? கவர்மென்ட் வேலையாத்தான் இருந்தா என்ன? தனியார் கம்பெனியா இருந்தாத்தான் என்ன? எல்லாம் ஒன்னுதானே? சொந்தமா எந்த வேலையச் செய்யறதுலயும் பெருமையடையணும்னு நினைக்கற ஆள் நான். எதுக்காக வளைச்சுப் பேசிகிட்டு இருக்கணும்? என்ன வேலை செய்யறேன்னு சொன்னாப் போதாதா? நான் ஏத்துகிட்டு இருக்கற வேலையை ஒரு வேலைன்னு சொல்லமுடியுமான்னு சந்தேகம்தான்.
ஒரு நிச்சயமான தொகைய யாரும் எனக்குக் கூலியாக் கொடுக்கறது இல்ல. என்னோட பொருளாதார வளர்ச்சிங்கறது கண்டிப்பா நான் பயணிகளோட எப்படிப் பழகறேங்கறதப் பொறுத்தே இருக்குது. அவுங்க என்ன மாதிரியா என்னை ஏத்துக்கறாங்கறதும் முக்கியமான விஷயம். ஒரு புத்திஜீவிய அவ்வளவு சுலபமா ஏத்துக்கறதுக்கு சாதாரணமான ஜனங்களால முடியாதுங்கறதுதான் காரணம். அதிலயும் குறிப்பா பாசஞ்ஜர் டிரெயின்கள்ல முண்டியடிச்சுகிட்டு காலையில ஆபீசுக்கும், சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி வரவும் செய்யறவங்களுக்கு புத்திஜீவிகளப் பத்தி யோசிக்கவோ அவுங்க என்ன வேலை செய்யறாங்கங்கறப் பத்தி யோசிக்கவோ நேரம் கிடைக்காது இல்லயா? பயணங்களுக்கு நடுவுல பலரும் அதிலயும் பொம்பளைங்க தூங்கறாங்க. ஆம்பளைங்க தூக்கம் வந்தாலும் அதக்கலைச்சுகிட்டு சீட்டு ஆடறாங்க. பலரோட விஷயமும் சம்பள அதிகரிப்பப் பத்தியும் ஸம்பள பிக்சேஷனப் பத்தியும்தான்.
பல சமயத்திலயும் என்னையோ என்னோட புத்திஜீவி வேலையைக் கண்டுக்கலைங்கற மாதிரி அவுங்க பாட்டுக்குப் பேசிகிட்டே இருப்பாங்க. இந்த மாதிரி அவுங்க செய்யறது என்னோட தினப்படி புழப்ப ரொம்பவும்தான் பாதிக்குது. என்னோட பயணங்களோட லட்சியம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்கு பதட்டத்தோடக் காத்துகிட்டு இருக்கற உங்கள காக்க வைக்கறது சரிஇல்லைன்னு தெரிஞ்சதுனால இனிமேல உள்ள விஷயங்களை சந்தேகம் இல்லாம சொல்றேன். என்னோட ஒரு புத்தகத்த நான் நடத்தற பதிப்பகமே வெளிவிடுது. மூனு மாசத்துக்குள்லாற பத்து எடிஷங்க. துரதிர்ஷ்டவசமா பதிமூனாவது எடிஷன்ல சி கே வெள்ளத்துவலங்கற நாவலிஸ்ட் “அவரோட நாவல் அதுங்கற” புகாரோட மேனேஜ்மென்ட்ட அணுகினாரு. அவர் பிரசுரிக்கறதுக்காகக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியில பிரசுரிக்கற கமிட்டி உறுப்பினரும், புத்திஜீவியுமான நான் என்னோடப் பேர எழுதிச் சேத்துகிட்டேன். அவ்வளவுதான். வாதப் பிரதிவாதங்கள் முக்கியம் இல்லாமப் போனப்ப பிரச்சனை வளர்ந்துகிட்டே போச்சு.
மலையாள இலக்கிய உலகத்தில வரலாறு படைச்ச ஒரு எழுத்தாலனுக்கு முன்னணியில இருந்த ஒரு பதிப்பகத்தில இருந்து வெளியேப் போக வேண்டியதாச்சு. நஷ்டம் யாருக்கு? ‘ காலம் சொல்லட்டும்’ என்று சமாதானபடுத்திக்கிட்டேன். ஆனாலும் ஒரு புத்திஜிவியா மாத்திரமா இருந்த ஒரு ஆளு பிரபலமான ஒரு எழுத்தாளனா மாறினதுனால ஏற்பட்டப் பிரச்சனைதான், இப்ப நான் சந்திச்சுகிட்டு இருக்கறேன். லட்சியத்தக் காட்டிலும் வழியக் காட்டிலும் செயல்தான் முக்கியம்ங்கற உண்மய ஒரு புத்திஜீவியான நான் பட்டுன்னுப் புரிஞ்சுகிட்டேன். தரமே இல்லாததும், வெறும் குப்பையுமாகும் சி கே வெள்ளத்தூவலோட எழுத்துங்கன்னு நிரந்தரமா அந்த ஆளுக்குப் புரியவச்சேன் நான். இப்படித்தான் காலையிலேந்து சாயங்காலம் வரைக்கும் டிரெயின் பயணம் செய்யற வாழ்க்கைக்கட்டத்த அடைஞ்சேன். ரெண்டு மூனு மாசம் இடைவேளைதான் இதுக்காக எனக்குத் தேவைப்பட்டுச்சு. என்னோடத் தோள்ல நான் சுமந்துகிட்டு இருக்கற வைட்டான கறுப்புத் தோள்பையயும் கையில வச்சிருக்கற கவர்ச்சியான பாக்கெட்டயும் நீங்கப் பாக்கலயா? இதுக்குள்ள இருக்கறதெல்லாம் உயிரோடத்துடிப்புங்க! மூனு மாசத்துக்குள்லாற சி கே வெள்ளத்தூவலோட உதவி இல்லாம நானே எழுதி முடிச்ச ரெண்டு படைப்புங்களையும் சேத்து மூனு இலக்கத்தில மலிவு விலைய எழுதி வச்சு ஸ்டிக்கர் ஒட்டி வச்சேன்.
மனுஷங்களோட கதைங்க. உள்ளுக்குள்லாற மனுஷனோட வேதனைங்க. துக்கங்க. சின்ன சின்ன சந்தோஷங்க. சில சமயத்தில கொல்லத்தத் தாண்டி திருவனந்தபுரம் வரைக்கும் திரும்புகிறப்ப கோட்டயத்தயும் தாண்டி எர்ணாகுளம் வரைக்கும் நீட்டிக்கிட்டுப் போகறப்ப பயணங்கள்ல மலிவு விலைக்கு அதை எல்லாம் வாங்கறதுக்கு மனசுள்ல பயணிங்க பலரும் இருப்பாங்க. இப்படி பதிப்புகள்லேந்து பதிப்புகளுக்கு என்னோடப் புத்தகங்க அடி மேல அடி வச்சு போயிகிட்டே இருக்கு. மனதிருப்திதான் எல்லாத்த விடவும் பெரிசுன்னு நினைக்கற விசாலமான மனசுள்ல ஒரு புத்திஜீவி
இதுக்கும் அப்புறம் வேற என்ன சேவைய செஞ்சிடமுடியும்? வேதபாட கிளாசுல சேந்ததுதானா படிக்கறது எங்கயும் போயி முடியாம ஓடிப் போனதுதானா இந்தநிலைமையில என்னைக் கொண்டாந்து விட்டதுங்கற விஷயம் இப்பவும் எனக்குத் தெளிவா புரியல”.