இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

பொட்டன் உன்னி

மலையாளம்: ஜெயஸ்ரீ பள்ளிக்கல்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


லம்போதரன் உன்னி என்பதுதான் அவனுடைய பெயர். என்றாலும் ஊர்க்காரர்கள் வைத்த செல்லப்பெயர்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பொட்டன் உன்னி. அங்காரக்கடவின் பொதுச்சொத்து . நன்றாக மெலிந்த உருவம். ஆரோக்கியம் இல்லாதவன் போன்ற தோற்றம். என்றாலும் காரியத்தில் அப்படியில்லை. தேவைப்பட்டால் ஒரு எதிரியை ஒத்தையாக நின்று எதிர்க்கும் துணிச்சலும் அவனுக்கு உண்டு. இருந்தாலும் தனக்கு ஏதோ சில குறைபாடுகள் உள்ளது என்ற அடிப்படையில்லாத தோணல்தான் அவனை ஒரு பொதுச்சொத்தாக மாற்றியது.

எப்போதும் யாராவது ஒருவரின் நிழல் அவனுக்குத் தேவை. ஆனால், யாருக்கும் ஒரு பாரமாக இருப்பதில்லை. அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை என்றாலும் எல்லோரும் அவனுடைய சொந்தக்காரர்கள் என்பதுதான் நிதர்சனமான சத்தியம். வெளிச்சம் விழுந்தால் உடனே குளித்துத் தோய்த்ததை போட்டுக் கொண்டு கிராமத்தில் எந்த ஒரு டீக்கடைக்குள்ளும் கூச்சமில்லாமல் நுழைவான். விறகு வெட்டுவது, தண்ணீர் இறைப்பது, எச்சில் பாத்திரங்கள் கழுவுவது என்று எல்லா வேலைகளையும் கடைக்காரர் கேட்காமலேயேச் செய்வான்.

அலமாரியில் தயாராக இருக்கும் ஆவி பறக்கும் பலகாரங்களில் இஷ்டமுள்ளதை இஷ்டப்பட்ட அளவுக்கு அவனே எடுத்துச் சாப்பிடுவான். கேள்வியும் இல்லை. பதிலும் இல்லை. வரவும் செலவும் இல்லை. கடன் கொடுப்பதும் வாங்குவதும் இல்லை. முன் கூட்டியே உழைப்பைச் செலவிட்டதால் யாருக்கும் ஒரு புகாரும் இல்லை.

சொல்லி வைத்தது போல நூல் பிசகாமல் எல்லா வேலைகளும் ஒழுங்காக நடக்கும். ஒவ்வொரு நாளும் அவன் தங்களின் கடைக்கு வர வேண்டுமே என்பதுதான் டீக்கடைக்காரர்கள் எல்லோருடைய பிராத்தனை. இதற்குப் பின்னால் சுய நலமும் கலந்திருந்தது. அவன் கால் வைக்கும் கடையில் அன்றைக்கு வியாபாரம் அற்புதமாக நடக்கும். அது ஒரு ராசி என்ற விஷயத்தில் டீக்கடைக்காரர்களுக்கிடையில் ஒரு சந்தேகமும் இல்லை. “வேல எதையும் செய்ய வேணாம். சும்மா வந்து இருந்து உனக்கு வேணுங்கறத சாப்பிட்டு போலாம் இல்லயா?” என்று எல்லா டீக்கடைக்காரர்களும் கேட்பதுண்டு. என்றாலும் உழைக்காமல் கிடைக்கும் சோறு அவனுக்கு சுவைக்காது.

ஒவ்வொரு நாளும் நுழைய வேண்டிய கடையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள ரகசியம் அங்கே இருந்து வரும் வாசனைகளில்தான் உள்ளது என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும். அன்றைக்கு அந்தக் கடைக்காரனின் நாள். பகல் வேளைக்குக் கோயிலில் பிரசாதமும் பாயசமும்தான் சாப்பாடு. இரண்டையும் சேர்த்து குழைத்து சாப்பிடுவதுதான் அவனுடைய வழக்கம். இல்லாவிட்டால் அன்றைய பயணத்துக்கு கூட்டிக்கொண்டு போகும் ஆள்தான் அவனுக்கு வேண்டியது எல்லாவற்றையும் செய்வான். அவனை கூட்டிக் கொண்டு போகும் எந்த ஒரு காரியமும் நூற்றுக்கு நூறு வெற்றியில்தான் முடியும். அதனால் அந்த வகையிலும் அவனுக்கு பெரிய கிராக்கி. நடுவில் அபூர்வமாக, சில பைத்தியக்காரத்தனமான கேள்விகளை கேட்பதுண்டு.


நெரிசலான ரோடை தாண்டி செல்லும்போது அம்மா ஒன்றரை வயதுள்ள குழந்தையைக் கவனிக்காமல் ஏன் முன்னால் நடந்து போனாள்? அரசாங்க பஸ், ஸ்டாப்பில் நிறுத்தாமல் அரை பர்லாங் அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ மாறி நிறுத்துவது ஏன்? வாட்டர் அத்தாரிடியினரின் பைப் உடைந்து போனதால் உருவான வானவில்லை ஒரு அக்கறையும் இல்லாமல் ஊர்க்காரர்கள் எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள்? இப்படி சில வேண்டாத கேள்விகள். இதனால்தான் ஊர்க்காரர்கள் அவனுக்கு பொட்டன் என்ற செல்லப்பெயரைச் சூட்டினார்கள்! எல்லாரும் அதை ஆதரித்தார்கள்!

காரியங்கள் இப்படி போய்க்கொண்டிருந்தாலும் அவனுடைய ஆராதனை கதாபாத்திரம் நகுலன் அண்ணன்தான். அண்ணனுக்கு எந்த அவசியமும் இல்லையென்றால்தான் அவனுடைய உதவி மற்றவர்களுக்குக் கிடைக்கும். பேச்சையே ஆயுதமாக்கி சூழலில் நிரந்தரமாக போராட்டக் குணத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஆள்தான் நகுலன் அண்ணன். வெள்ளை நிறக் காட்டன் சட்டை காற்றில் அசைந்தாடினால் “ச்சடேல்!” என்று வேட்டு போல சத்தம் வரும். ஒற்றை வேட்டி போட்டுக் கொண்டு காட்சி தரும் அண்ணன் நீதி நியாயத்துக்காக போராட அவதரித்திருக்கும் அரசியல் கதாநாயகன். உன்னியுடைய கண் கண்ட கடவுள் அவன்தான். அண்ணனுடைய தனிப்பட்ட ஆளுமையும் ஆற்றல் மிக்க செயல்பாடும் எல்லாம் உன்னியை இயக்கிக் கொண்டிருந்தது. வெய்யில் கொளுத்தும் சாலை வழியாக எண்ணற்ற முழக்கங்களுமாக அண்ணன் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் போது அவனுக்குப் பின்னால் உன்னி இருப்பான்.

கோஷம் போடும் வாக்கியங்களின் பொருள் எதுவும் தெரியாது என்றாலும் மிக சீரியஸான காரியங்கள்தான் அவை எல்லாம் என்ற ஆவேசத்தில் உன்னி அதே படி திரும்பி சொல்லி ஆகாயத்தை நோக்கி முஷ்டியை உயர்த்துவான். எங்கேயாவது ஊழல் அக்கிரமம் பாரபட்சம் நடப்பது தெரிந்தால், தருமத்தை நிலைநாட்ட அங்கேயெல்லாம் நகுலன் அண்ணன் அவதரிப்பான்.

நீதியை நடைமுறைப்படுத்தாமல் திரும்புவதில்லை. இதுதான் அண்ணனுடைய சரித்திரம். பூமி அறிவியல். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு இயந்திரத்தோடு நெருக்கமான உறவு வைத்துக் கொள்ளும் நகுலன் அண்ணனுக்கு ஊரில் பதில் இல்லாத சகல பொதுக்காரியங்களுக்கும் இருக்கும் ஒரே பதில். இப்படிப்பட்ட நகுலன் அண்ணனை தவிர வேறு யாருக்கு உன்னி ஆதரவு காட்டுவான்? இந்த ஆராதனையுடைய அடித்தளத்தில் இவன் பொட்டன் இல்லை என்று சிந்திப்பவர்களும் உண்ண்டு. அண்ணணோடு இருக்கும் கூட்டுறவை தவிர உன்னிக்கு வேறு ஒன்றே ஒன்றுதான் இருந்தது.


அதுதான் கிராமத்தை இரண்டாகப் பிளந்து ஓடும் மாலதி ஆறு. அதில் நீராடுவதுதான். முங்கும்போது ஆள் ஆற்றில் பாய்ந்து ஒரே குதி! முங்கிய பல மணி நேரம் கழித்து நீருக்குள் இருந்து மேலேறி வருவான். நீர் சாகசங்களில் ஊர் இளைஞர்களின் ஹீரோ அவந்தான். சில நேரங்களில் பெண்கள் குளிக்கும் படித்துறைக்கு சமீபத்தில் ஆள் முங்காங்குழி போட்டு கிடப்பது அரண்மனை ரகசியங்களை உளவு பார்க்கத்தான் என்று ஒரு கருத்தும் ஊரில் உண்டு. இதைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் இருந்தன என்றாலும் தப்பான எண்ணம் அல்ல அதற்கு பின்னால் இருப்பது என்பதில் ஊர்க்காரர்களுக்கு கருத்து வேறுபாடு எதுவுமில்லை. நீதிதேவதையின் ப்ரியமான சகோதரனான அண்ணனின் நேர் வாரிசான தான் அப்படியெல்லாம் தப்பான வழிக்கு போகக்கூடாது என்ற உறுதியான உணர்வுடன் இருந்தான். அது அவனுக்குள் எப்போதும் இருந்தது.

மீனை பிடித்துக் கொண்டு வரும் அவனைப் பார்த்தால் அது அண்ணனுடைய வீட்டுக்குத்தான் போகிறது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றைக்கு சாப்பாடு அங்கேதான். ஆற்று மீன் கிடைக்காத போது இரவு சாப்பாட்டு விஷயத்தில் எந்த ஒரு அவனுக்கு ஒரு முன் நிபந்தனையும் அவனுக்கு இல்லை.

காலையில் ராயப்பன் அண்ணனுடைய கடையில் வாசனை வீசும் அப்பத்தையும் கோழிக்கறியையும் சாப்பிட்டு வழக்கம் போல தோய்த்து காய வைத்துப் போட்டுக் கொள்ளும் உடைகளின் வேஷத்தில் தயாராக நிற்கும் அவனைக் கூட கூட்டிக்கொண்டு போக பலர் முயற்சி செய்தார்கள் என்றாலும் அவன் பிடி கொடுக்கவில்லை. காரணம் கேட்கவேண்டியதில்லை. அண்ணனுடன் தலைநகருக்கு துணையாக போவதற்குரிய நிற்புதான் அது. யாராக இருந்தாலும் ஒரு தடவை அவனை திரும்பிப் பார்ப்பார்கள். கேவலமான உடல் வேஷத்துக்கும் அப்பால் ஏதோ ஒன்று அந்த முகத்தில் இருந்தது!

அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகம் அவனுக்கு இல்லை. நினைவு தெரிந்த போது கோயில் சுற்றுவட்டாரத்தில்தான் இருந்தான். ஆறும் கோயிலும் டீக்கடைகளும் வாசிக்கத் தெரியாது என்றாலும் வாசிப்பதைக் கேட்க முடியக்கூடிய திறமையும் வாசகசாலையும்தான் அவன் காட்சி தரும் வாடிக்கையான இடங்கள். கோயிலின் மடப்பள்ளிக்கு வெளியில் இருக்கும் சரிவில்தான் தூக்கம். ராத்திரி எதிர்பாராமல் ஒற்றைப்படும் யாருக்காவது படுத்துக்கொள்ள துணையாக நம்பகமான ஒரு ஆள் அவசியம் என்றால் அது அவன்தான்.

“வாடா. ஏறு”. அண்ணன் உத்தரவிட்டான். காரில்தான் பயணம். டிரைவிங் சீட்டில் இருக்கும் ஆளுடைய ஏதோ ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கு உள்ள பயனம்தான் அது. “நீ பின்னால் இருடா”. முன் கதவைத் திறக்க முயற்சித்த உன்னியை வண்டியின் சொந்தக்காரன் பின்னால் வரச்சொல்லி ஒரு கை கொடுத்து உதவினான். அப்போதுதான் ஆள் யாரென்று உன்னிக்கு தெரிந்தது.

“ஓ! இது வேற யாரும் இல்ல. அண்ணனோட மூத்த அண்ணன் நாராயணன் குட்டி. ஊரில் போதுமான அளவுக்கு காசு பணம இருக்கற ஒரு ஆள்” அவன் உன்னியைப் பார்த்துச் சிரித்தான். கார் முன்னோக்கிப் பயணித்தது. சங்கோஜம் எதுவும் இல்லாமல் பொது இடத்தில் இருந்து கொண்டு புகை பிடிக்கும் ஒன்று இரண்டு ஆட்காரர்களை அண்ணன் கோபத்துடன் பார்ப்பதைக் கண்டு உன்னி ஆமோதித்தான்.

ஒரு ஆள் காரித் துப்பி அசிங்கமாக எதோ பேசியதைப் பார்க்காதது போல நடித்தான். இடடு பக்கம் ஓவர் டேக்கிங். இண்டிகேட்டருடைய தவறான சிக்னல். இது போல, போக்குவரத்து அத்துமீறல்களின் திருவிழா சாலை முழுவதும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும்போதும் காரில் இருந்து இறங்கி எதிர்ப்பு தெரிவிக்காததில் அண்ணன் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று உன்னிக்குத் தோன்றியது. அதற்கேற்ற முக பாவங்கள். உடல் மொழிகள் எல்லாவற்றையும் வெளியில் காட்டி உன்னி கௌரவத்தோடு காரில் இருந்தான்.

“நீ ஏன் காபி குடிக்கக் கூப்பிட்டப்ப வரல?”. நாராயணன் திரும்பிப்பார்த்து உன்னியிடம் கேட்டான்.

“ஓ. அவன் வரமாட்டான். வேலை. கூலி. அப்பறம் சாப்ப்பாடு. இதுதான் அவனோட ஒரு லைன்”


சும்மா கிடைக்கறது எதுவும் அவனுக்குப் பிடிக்காது. அதனாலதான் ஊர்க்காரங்க இவனை பொட்டன்னு கூப்பிடறாங்க?” நகுலன் சொன்னான்.

“இவன் ஆளு புத்திசாலின்னு கேட்டிருக்கேன்” நாராயணனுடைய புகழ்ச்சியில் உன்னி லேசாக மயங்கினான்.

“அது உண்மைதான். கண்ணை மூடிக்கிட்டு நம்பலாம். ஒரு அனா கூட தப்பா இருக்காது. கோடி ரூபா கொடுத்தனுப்பினா ஒரு அனா பைசா கூட குறையாது. சொல்ற இடத்துல கொண்டு போய்ப் பத்திரமாக் கொடுப்பான். சொல்ற ஆளு கிடைக்கலைன்னா ஆளு கிடைக்கற வரை ரகசியமாப் பூட்டி சங்கதிய இவன் பத்திரமா பாதுகாத்து வச்சுப்பான். எனக்கு அனுபவம் இருக்கு. சும்மா ஒன்னும் இல்ல. ஊர்க்காரங்களுக்கு இவன் செல்லப்பிள்ள ஆனது!” நாராயணனோட இந்த அபிப்பிராயமும் உன்னிக்கு ஒரு பாராட்டாகவேத் தோன்றியது.

ஒரு காரியத்துக்குக் கூட கூட்டிகிட்டு போக அசல் ஒன்னாம் தரமான ஆளு. போன காரியம் எப்ப நடந்துச்சுன்னு கேட்டாப் போதும்” நகுலன் தொடர்ந்தான். “அது யாருக்குதான் தெரியாது? அதனாலத்தானே நான் இன்னிக்குக் காரியத்துக்கு இவனை முன்னாடியேப் புக் செஞ்சு வச்சேன்”

“ஹிஹி...”. பலகை போல இருந்த பற்களை வெளியில் காட்டிச் சிரித்தான். புகழ்ச்சிகளின் முடிவில்லாத புதைகுழியில் உன்னிக்கு மூச்சு முட்டியது. திறந்து கிடந்த வாயில் நீண்ட நேரம் தங்கியிருந்த புன்முறுவலில் அது கலந்திருந்தது. எதனாலயோ வழிந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.

“ரொம்ப பெரிய உபகாரம் அவசியத்துக்கு மட்டும்தான் வாயத் திறப்பான். அவசியம்ன்னு ஒன்னும் இல்ல. புகாருங்க இல்ல. ஒரு வேலய கொடுத்தா நேரா நேரத்துக்கு செஞ்சதுக்கு சன்மானம் தரணும். ஆச்சரியப்படறதுக்கு ஒன்னும் இல்ல. தம்பி நீதானே அவனோட ஹீரோ”

இந்த தடவை நாராயணன் தம்பியை புகழ்ந்தான். அந்தப் புகழ்ச்சியெல்லாம் தனக்கு எதுவும் இல்லை என்பது போல நகுலன் பேசாமல் இருந்தான். கார் தலைநகருக்கு அருகில் வந்துவிட்டது. நண்பகல் வெய்யிலில் வாகன வியூகத்தில் சிறிய புள்ளியாக அந்த வாகனம் ஊர்ந்தது.

சிக்னல்களிலும் தடைகளிலும் வேண்டிய அளவு பொறுமையைக் கடைப்பிடித்துச் சென்று கொண்டிருக்கும் அந்தக் கறுப்பு அரண்மனைக்குள் இருந்த உன்னிக்கு முன்பொரு காலத்தில் முதல்முதலாக நகரக் காட்சிகளைப் பார்த்த போது தன் மூளையில் ஏற்படுத்திய ஆச்சரியங்களை இப்போது ஏற்படுத்தவில்லை என்பதை உன்னி உணர்ந்தான்.

நகுலனுடைய நகர விஜயத்துக்கான உத்தேசம் என்ன என்று உன்னிக்குத் தெரியாது. யாருக்கோ என்றோ கிடைக்க வேண்டியிருந்த ஏதோ ஒரு சலுகையை அதிகாரிகள் தாமதப்படுத்தவோ அல்லது தடையோ செய்திருப்பார்கள். இல்லாவிட்டால் நேரான வழியை விட்டு, எதுவோ எங்கேயோ நடந்திருக்கிறது.

இதில் இரண்டில் ஒன்றைப் பார்க்கவே சொந்தமாக வாகனம் இல்லாத நகுலன் அவருடைய அண்ணனோட இப்ப தலைநகருக்கு வராரு. ஆனால் எதிர்பார்த்தபடி மந்திரியுடைய ஆபீசில் சென்று அந்தப் பயணம் முடியவில்லை. அப்புறமும் சில ஏற்ற இறக்கங்கள். கார் கார்ப்பரேஷன் தலைவருடைய வளாகத்துக்கு செல்லும் வழியில் நுழைந்தது.

தலைவருடைய தனி அதிகாரி நகுலனை பார்த்தவுடன் வணக்கம் சொன்னான். கேட்டான், “எப்ப சிட்டிக்கு வந்தீங்க அண்ணே?”

“அண்ணன் கூப்பிட்டவுடனேயே புறப்பட்டதுதான்”

“அப்படியா? இதானா நீங்க சொன்ன ஆளு?” அவன் கேட்டான்.

“ஆமாம். என்னோட பெரியண்ணன். நாராயணன் குட்டி”

“இந்தத் தடவை நகுலன் அண்ணனோட ஸ்வரம் லேசாக இடறியதோ?” என்று உன்னிக்கு ஒரு சந்தேகம். “ஓ. அப்படியெல்லாம் இல்ல. எனக்குதான் தோணியிருக்கும்” அவர்கள் ஆபீஸ் அறைக்குள் நுழைந்தார்கள்.

“அலெக்ஸ். இது நம்பளோட சொந்த கேஸாக்கும்” நகுலன் குரலை தாழ்த்தினான்.

“அண்ணே. எல்லா காரியமும் பக்கா ரகசியமா இருக்கணும். புரியுதா?”. அலெக்ஸ் இன்னும் மெல்லிய ரகசியக் குரலில் சொன்னான்.

“அது எனக்குத் தெரியாதா என்ன?”. அண்ணன் இப்படி குரலை தாழ்த்திப் பேசுவது உன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதில் காரணமில்லாத ஒரு சங்கடம் அவனைப் பொதிந்தது. ஒரு வலி. அலெக்ஸின் கண்கள் சந்தேகத்தோடு தன்னை உற்றுப் பார்ப்பதை உன்னி புரிந்து கொண்டான். “அவனப் பாத்து பயப்படவேணாம். நம்ம ஆளு.”

அவனுடைய அங்கலாய்ப்பை உணர்ந்தது போல நகுலன் இடைமறித்துச் சொன்னான்.

“அலெக்ஸ். இது என்னோட சொந்த அண்ணன் காரியம். ஞாபகத்துல வச்சுக்கணும். நேர் வழியில போனா ஜென்மத்துல அவன் ஒன்னும் நடக்காது. லிஸ்ட் வர்றப்ப அதுல இவனுக்கு நிச்சயமா ஒரு இடம் வேணும்.”

“புரியுது... புரியுது.. இப்ப காலம் எவ்வளவு மோசமா இருக்கு? ஏதாச்சும் வெளிய தெரிஞ்சா என்ன செய்யறது?”. அலெக்ஸ் யோசனையில் ஆழ்ந்தான்.

“நீ தைரியமா இரு. நான் இருக்கேன் இல்லயா?” அசாதாரணமான அந்தக் காட்சிகளில் ஆதி அந்தம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு நிற்பது போல உன்னிக்குத் தோன்றியது. நெற்றியில் சுருக்கங்கள். வியர்வைத் துளிகள்.


“அண்ணா. அத இங்க எடுத்துகிட்டு வா”. நாராயணன் உடனே பல்லைப் பற்களை வெளியில் காட்டி புன்முறுவல் முறிந்து போகாமல் அவ்வளவு நேரமும் மௌனம் பூண்டிருந்துவிட்டு நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டிருந்த ப்ரீஃப் கேஸை எடுத்து மேசை மேல் வைத்தான்.

“திறக்கட்டுமா? முழுக்க இருக்கு.” திறக்கப்பட்ட ப்ரீஃப் கேஸின் வயிற்றில் செலவழிக்காமல் கிடக்கும் புது வாசனை மாறாத காந்தி தலைகளுக்கு மேல் உன்னியுடைய பார்வை சென்று பதிந்தது. கண்களில் இருந்து மூளைக்குப் பாய்ந்த அதிர்ச்சியில் உன்னி எரிவது போல உணர்ந்தான்.

வந்த வேலையை முடிப்பதில் மும்முரமாக இருந்த அவர்கள் திடீரென்று உந்தித்தள்ளிய ஒரு உள்ளுணர்வில் வெளியில் ஓடிய உன்னியை பார்க்கவில்லை. கண்களால் பார்த்த காட்சியை மறுபடி மனதுக்குள் அசை போட்டு நடந்ததெல்லாம் உண்மைதான் என்று உன்னி உறுதி செய்ய முயன்று கொண்டிருந்தான்.

வாகனங்களுக்கும் மக்கள் கூட்டத்துக்கும் நடுவில் சாலை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு சமநிலை தவற விட்டு அவன் நடந்தான். ஓடினான். பறந்தான். முடிவில்லாத வழிகள். சுற்றி உள்ளது எல்லாம் வினோதக் காட்சிகள். பெரிய சத்தத்துடன் அப்போதே வெடித்துவிடும் என்று தோன்றிய நெஞ்சை அவன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான்.

எங்கே என்றேத் தெரியாமல் அவன் ஓடினான். கடற்கரையில்தான் அந்த ஓட்டம் நின்றது. கடல் ஒரு குழம்பிய குளத்தைப் போல முன்னால் சுருங்கிக் கிடந்தது. அவன் அதில் இறங்கினான். இறங்க இறங்க அதன் ஆழம் அதிகமானது. கடல் இரண்டு கைகளையும் நீட்டி அவனை ஏற்றுக் கொண்டது.

சுய அர்ப்பணிப்பின் குளிர்ச்சியில் உள்ளிருந்த உஷ்ணப்பிரதேசங்கள் ஜில்லிட்டபோது கடல் அவனுடைய மாலதி ஆறாக மாறியது.

நிர்வாணமான பாதங்களில் முத்தம் கொடுக்கும் மீன்கள் அவனைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தன. தான் இப்போது தமாஷுக்காக ஆற்றின் கருவறையில் முங்காங்குழி இட்டு கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p62.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License