இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

காவல்காரன்

மலையாளம்: நைனா மன்னஞ்சேரி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


ஆபீசில் வழக்கம் போல அப்போதுதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். குரூப் அண்ணன் வழக்கம் போல கோயிலுக்குப் போய்விட்டு வந்து ஆபீசைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். நடுவில் எதையோ முணுமுணுத்துக் கொண்டும் இருந்தார்.

“குப்பயப் போடறதுக்கு இங்க குப்பத்தொட்டி வச்சிருக்கு. ஆனா கீழ தரையிலப் போட்டாதான் சில பேருக்கு நிம்மதியா இருக்கும் போலிருக்கு”

யாரோ ஆபீசில் குப்பையை கீழே போட்டதற்கான வசவுதான் அது.

எப்போதும் அவர் யாரைப் பற்றியாவது ஏதாவது ஒரு புகார் சொல்லிக் கொண்டுதானிருப்பார். அதுவும் எப்போதும் என்னிடம் வந்துதான் புகார்களின் மூட்டையை அவிழ்ப்பார். அதற்கெல்லாம் பதிலாக “ம்” என்று முனகலை மட்டும்தான் பதிலாக நான் தருவேன்.

காது கொடுத்துக் கேட்காமல் போனதுனால்தான் ஒரு முனகலை மட்டுமே நான் பதிலாகச் சொல்கிறேன் என்று அவருக்கு அவ்வப்போது சந்தேகம்.

யாரிடமும் நான் போய் குரூப் அண்ணன் சொல்லும் புகார்களைச் சொல்ல முடியாது. அதனால் நான் பதில் பேசாமல் இருந்தேன். “சார்தான் அவங்க கிட்ட கொஞ்சம் சொல்லணும்” குரலைத் தாழ்த்திச் சொல்வார்.

அதற்கும் நான் பதில் சொல்லமாட்டேன். வேலையை முடித்துக் கொண்டு அவர் போனார். அங்கயும் இங்கயுமாக ஒவ்வொருவராக ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். “சார். என்னோட புகாருக்கு ஏதாச்சும் தீர்மானம் ஆச்சா?” கேள்வியைக் கேட்டு நான் பைலில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தேன்.

மெலிந்த உருவத்துடன் முதுமையின் அவஸ்தைகளை கை பிடித்துக் கொண்டு வாழும் ஒரு ஆள். எதுவும் செய்யமுடியாத தன்மையும் விரக்தியும் நிராசையும் வெளிப்படுத்தும் ஒரு முகம். முன்பும் அவர் வந்திருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர். வேலையை விட்டு அவர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதுதான் புகார். மேசை மேலிருந்த பைல்களின் குவியலில் இருந்து அவருடைய பைலைத் தேடிப் பிடித்து எடுத்தேன்.


வயதாகிவிட்டதால் வேலையை விட்டு எடுத்திருக்கலாம். ஒன்றிரண்டு தடவை கம்பெனி உரிமையாளருக்கு ஆபீசில் இருந்து வரச்சொல்லி அழைப்புக் கடிதம் அனுப்பிய போதும் வாங்காமல் அவை திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. பலவீனமான அவருடைய முகத்துக்கு நேராக அதைச் சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தது.

நான் பேசாமல் இருந்ததால் அவர் மறுபடியும் என்னைக் கேட்டார். “சார். அவங்க விவாதம் செய்ய வர்றாங்களா?”

“நோட்டீஸ் அனுப்பியிருக்கு. வராங்களான்னு பாக்கலாம்”. என்னுடைய பதிலைக் கேட்டு அவர் முகம் மங்கலானது.

“நான் புகார் கொடுத்து ரெண்டு வாரமாச்சு”. நிராசையோடு அவர் சொன்னார்.

“சார். போக்குவரத்து செலவுக்கு கடன் வாங்கிட்டுதான் நான் வரேன். சீக்கிரம் ஒரு பரிகாரத்த உண்டாக்கிக் கொடுங்க”. அவர் கண்களில் கவலைக்கு அப்பால் நிறைந்து நிற்கும் வேதனை.

“நீங்க எப்பவும் வரணும்னு இல்ல. நான் விவரங்கள உங்ககிட்டக் கூப்பிட்டுச் சொல்றேன். போன் நம்பரக் கொடுங்க”

அவர் ஒரு காகிதத் துண்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து எனக்கு நேராக நீட்டினார். அதில் போன் நம்பர் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பிறகு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் மடக்கி வைத்திருந்த கசங்கிப் போன ஒரு நூறு ரூபாய் நோட்டை என் மேசை மேல் வைத்தார்.

“சார். என் கையில இருக்கறது இதுதான். எப்படியாச்சும் இத முடிச்சுத் தரணும்”

அவருடைய கண்ணீர் விழுந்த அந்த நோட்டை நான் பார்த்தேன்.


போக்குவரத்து செலவுக்கு யாரிடம் இருந்தாவது கடன் வாங்கியதாக இருக்கலாம். “காசு கொடுத்தாத்தான் கவர்மெண்ட் ஆபீஸ்ல காரியங்கள் நடக்கும்” என்பது அவருடைய எண்ணமாக இருக்கலாம்.

“தாத்தா. அந்தப் பைசாவ எடுத்து கையில வச்சுக்கங்க. இனிம வர்றப்ப போக்குவரத்து செலவுக்கு நான் காசு தரேன்” அதைக் கேட்டு அவநம்பிக்கையோடு அவர் என்னைப் பார்த்தார். மறுபடியும் நான் கட்டாயப்படுத்தியபோது அவர் காசை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அப்போதும் குறைவான காசு என்பதால்தான் வாங்கிக் கொள்ளாமல் இருந்தேன் என்ற சந்தேகம் அவருடைய முகத்தில் தெரிந்தது.

“தாத்தா. நீங்க கிளம்புங்க. நான் கூப்பிடறேன்”. தயங்கியபடி அவர் கிளம்புவதற்காக நடந்தார். “வேலைக்கு திருப்பி எடுக்கலைன்னாலும் பரவாயில்ல. நஷ்ட ஈடு கிடைச்சாக் கூட போதும்” மெல்லிய குரலில் அவர் சொன்னார்.

பலவீனத்தின் மொத்த உருவமாக அவர் நடந்து அகன்றார். இதற்குள் ஆபீசில் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்கள்.

புகார் கொடுக்கவும் விவாதத்தில் பங்கெடுக்கவும் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆபீசர் ஷைலஜா மேடத்திடம் அன்றைக்கு விவாதத்திற்கு வரும் பைல்களை எடுத்துக் கொடுக்க நான் தயாரானேன். அப்போது அவருடைய பைலை மறுபடி எடுத்துப் பார்த்தேன். மூன்று முறை நோட்டீஸ் அனுப்ப்பியும் இடத்தில் ஆள் இல்லை என்று சொல்லிதான் நோட்டீஸ் திரும்ப அனுப்பப்பட்டிருந்தது.

ஆள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. பெருமை நிறைந்து நின்ற பழைய நினைவுகளின் பாக்கி பத்திரமாக அங்கே இப்போதும் கொஞ்சம் பேர் வசித்துக் கொண்டிருந்தார்கள். நகரத்தில் வணிகப் பிரமுகராக இருந்தவரின் மிச்சம் மீதிகளை இப்போதும் அங்கே பார்க்கலாம். பிறந்த இடங்களுக்கு பலரும் திரும்பிப் போய்விட்டார்கள் என்றாலும் இப்பவும் சில குடும்பங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

“அங்க போய் நேர்ல பாத்து விஷயத்த சொல்லிட்டு வந்தா என்ன?” என்று சொன்னபோது மேடம் சொன்னார். “நானும் அத யோசிச்சேன்” அவரோட முகத்தைப் பார்க்கும் போது ரொம்ப சங்கடமா இருக்கு. எத்தன நாளா ஏறி இறங்கறாரு. ஆபீசர் ஜான் சாரும் வரேன்னு சொல்லியிருக்கறாரு” நகர நெரிசலில் இருந்து சிறிது தூரம் மாறி வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கம்பெனிக்குள் நுழைந்தோம்.

பெரிய கேட்டுக்கு முன்னால் நின்ற காவல்காரன் எங்களைத் தடுத்து நிறுத்தினார். ஆபீசில் இருந்து என்று சொன்ன போது கேட்டைத் திறந்தார்.

கம்பெனியின் அருகிலேயே ஹவுஸிங் காலணி போல நஷ்டமடைந்த பெருமைகளின் ஞாபகங்கள் நிறைந்து நிற்கும் சில வீடுகளும் கடைகளும் அங்கு இருந்தன.

அமைதி நிழல் விரித்த சுற்றுப்புறம். மேனேஜரை அழைத்துக் கொண்டு வரச் சொன்னபோது முதலில் அவர் கொஞ்சம் தயங்கினார். “ஏதாச்சும் வம்பு பிடிச்ச கேசோ?” என்ற சந்தேகத்தில் அவர் தயங்கி நின்றார். ஜான் சார் கொஞ்சம் சீரியஸாக சொன்னதால் அந்த ஆள் ஆபீசை நோக்கி நடந்தார். சிறிது நேரம் கழிந்தபோது நடுத்தர வயதுடைய ஒரு ஆள் வந்தான்.

“இங்க வேல பாத்த பழைய செக்யூரிட்டிகாரனோட விஷயத்தப் பத்திப் பேச வந்திருக்கோம். மூனு தடவை நோட்டீஸ் அனுப்பியும் நீங்க வாங்கல. அதனால நேர வந்து நோட்டீஸ் தரலாம்னு வந்திருக்கோம்”. மேடத்தின் குரலில் கோபம் கலந்திருந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அந்த ஆளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

நாங்கள் நேராக வருவோம் என்று அந்த ஆள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.

“நோட்டீஸ் ல கையெழுத்துப் போட்டுத் தரணும்”

நான் நோட்டீசையும் புக்கையும் அந்த ஆளுக்கு நேராக நீட்டினேன். மனதில்லா மனதோடு அந்த ஆள் நோட்டீசில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

“அடுத்த வாரம் விவாதம் செய்ய தேதி குறிச்சிருக்கோம். வேல கொடுக்கலைன்னாலும் நீங்க நஷ்ட ஈடாச்சும் தரணும்”

மேனேஜர் சொன்னார். “அந்த ஆளு ஏதோ ஒரு விபத்துல ஆஸ்பத்திரியில இருந்தாரு சார். கொஞ்ச நாளா காணாமப் போனதுனால வேற ஆள எடுத்தோம். அப்பறம் அந்த ஆளுக்கு வயசும் அதிகமாயிடுச்சு சார்”

நியாயங்கள் அடுக்கப்பட்டன.

“இங்க வேல பாத்த காலத்துக்கு உரிய எல்லா பாக்கியயும் தரணும். நீங்க விவாதம் செய்ய வாங்க. மிச்சத்த அங்க வச்சு தீர்மானிச்சுக்கலாம்” மேடம் சொன்னார்.

அடுத்த நாள் நான் தாத்தாவைக் கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அவருக்கு பெரிய மகிழ்ச்சி.

“ஆபீசருங்க போய்ச் சொன்னா இனிம அவங்க வருவாங்களா இருக்கும்”

அவர் வார்த்தைகள் வெளிப்படுத்திய நம்பிக்கையில் என் மனது நிறைந்தது.


”மகனே. உதவற வாய்ப்ப ஒரு ஆளுக்குக் கூட ஒருபோதும் நஷ்டமாக்காதே” என்று எப்போதும் என் அப்பா சொல்லும் வார்த்தைகள் அப்போது என் நினைவுக்கு வந்தன. முன்பு வருமானச் சான்றிதழுக்காகவும் மற்ற சான்றிதழ்களுக்காகவும் கிராம அலுவலகத்துக்கு அலைந்த அந்த நாட்களை நான் மறக்கவில்லை. பல தடவை நடந்து தளர்ந்தபோது மனதில் ஒரு தீர்மானம் எடுத்திருந்தேன். என்றைக்காவது அரசாங்க வேலை கிடைத்தால் ஒருவரையும் மனப்பூர்வமாக துரோகிக்கக்கூடாது. முடியக்கூடிய உதவி எதுவாக இருந்தாலும் செய்யவேண்டும். யாரும் ஆபீசுக்கு வந்ததனால கச்தப்படக் கூடாது. ஆனால் எல்லோருடைய மனதும் ஒரே மாதிரியா இருக்கவேண்டும் என்பது இல்லையே? நேரில் சென்று சொல்லியும் அவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இரண்டாவது விவாதத்திற்கும் அவர்கள் வரவில்லை. பாவம். தாத்தா மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வந்து காத்துக் கொண்டிருந்தார்.

“சார். இன்னிக்கு அவங்க வருவாங்க இல்லயா?”

வந்தவுடனேயே அவர் என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்.

“நாங்க நேராப் போய்தான் நோட்டீஸ் கொடுத்திருக்கோம். வரோம்னுதான் சொன்னாங்க”. என்னுடைய வார்த்தைகளைக் கேட்டபோது ஆபீசுக்கு படிகளில் ஏறிவந்ததால் ஏற்பட்ட மூச்சிரைப்புக்கு இடையிலும் அவர் சிரித்தார்.

“தாத்தா. சாப்பிடலைன்னா சாப்பிட்டுட்டு வாங்க. ரெண்டு மணிக்குதானே விவாதம் வச்சிருக்கு”. அப்போது மணி ஒன்றுதான் ஆகியிருந்தது.

“நான் தண்ணி குடிச்சுட்டேன்ன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன்”அவர் மெல்லிய குரலில் சொன்னார். எப்படியாவது வழக்கு இன்றுடன் சமாதானமாக முடிந்தால் சரியென்ற எண்ணம் அவர் முகத்தில் இருந்தது. பஸ் டிக்கெட்டுக்கு கடன் வாங்கி வரும் ஒரு ஆளிடம் சாப்பிட்டுவிட்டு வரச்சொன்ன அபத்தத்தைப் பற்றி அப்போதுதான் நான் யோசித்தேன்.

ஆபீசில் எல்லோரும் சாப்பிடக் கிளம்பினார்கள். சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நடக்கும்போது கையில் இருந்த நோட்டை எடுத்து அவருடைய கையில் வைத்தேன். “போய் சாப்பிட்டுட்டு வாங்க. சில சமயம் விவாதம் முடிய நேரமாகலாம்”. நான் நடந்துபோனபோது அவநம்பிக்கையோடு அவர் என்னைப் பார்த்தார்.

ஒரு அரசாங்க ஆபீசில் வேலை பார்ப்பவர் ஆபீசுக்கு வருபவருக்கு காசு கொடுப்பது அதுவே முதல் அனுபவமாக அவருக்கு இருக்கும். மெல்ல படியிறங்கி கீழே போனார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து விவாதத்திற்காக காத்திருந்தார். மணி இரண்டானது. மூன்றானது. அப்போதும் எதிர்தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.

அழைத்தபோது போனையும் எடுக்கவில்லை. அவருடைய முகத்தைப் பார்க்க முடியாமல் நான் பைலைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரம் ஆனபோது அவர் எழுந்து என் அருகில் வந்தார்.

“நான் என்ன செய்யணும் சார்?” தொண்டையில் கரைந்த அவருடைய வார்த்தைகளைக் கேட்டு என் மனது வேதனைப்பட்டது.

மேடமும் சாரும் நிம்மதி இழந்து இருந்தார்கள். இன்றைக்கு நிச்சயமாக வருவார்கள் என்றும் எப்படியாவது நஷ்ட ஈடு வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடனும் நாங்கள் இருந்தோம். “தாத்தா. நீங்க கிளம்புங்க. இதுக்கு மேல அவங்க வருவாங்கன்னு தோனல. நான் கூப்பிடறேன். ரெண்டு நாளுக்குள்ள எப்படியாச்சும் ஒரு தீர்மானத்துக்கு வரலாம்”

எங்களை மாறி மாறிப் பார்த்துவிட்டு அவர் மெதுவாகத் திரும்பிப் போனார்.

அதைப் பார்த்து என் மனது சங்கடப்பட்டது. ஆரோக்கியமா இருந்தப்ப வேலய வாங்கிக்கிட்டு முடியாம ஆனப்ப திரும்பப் பாக்காம இருக்கறது எவ்வளவு கொடூரமானது! எத்தனை நாள் அவர் புகாருடன் அலைந்து திரிகிறார். பிறகும் பல தடவை நாங்கள் மாறி மாறி அழைத்தோம்.

ஒரு முறை அவர்கள் போன் எடுத்தார்கள். என் கோபம் முழுவதும் உடைந்த அணையில் இருந்து பாயும் தண்ணீர் போல பொங்கி வந்தது. “ரெண்டு நாளைக்குள்ள நீங்க வந்து முடிக்கலைன்னா என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்”. ஆபீசரின் அந்த வார்த்தைகளுக்கு பலன் ஏற்பட்டது. அவர்கள் ஓடி வந்தார்கள்.

“சார். அன்னிக்கு அத்தியாவசியமான ஒரு வேல வந்ததுனாலதான் வரமுடியல”

“அத்தியாவசியம் யாருக்கு வேணும்னாலும் வரலாம். அத சொல்லவாச்சும் செய்யணும்ங்கற மரியாத தெரியாது உங்களுக்கு? வயசான அவரு எவ்வளவு நேரமா இங்க வந்து காத்துகிட்டு இருந்தாருன்னு தெரியுமா?”

மேடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ஒரு செக்கை எடுத்துக் கொடுத்தார்கள்.

அதை வாங்கிப் பார்த்து விட்டு மேடம் சொன்னார்.

“அவரக் கூப்பிட்டு இது சம்மதம்னா கேச முடிச்சுக்கலாம். எப்படியானாலும் நீங்க இன்னும் ஒரு தடவ வரணும்”

“வர்றோம் சார், என்னிக்குன்னு சொன்னாப் போதும்”அவர்கள் இறங்கி நடந்தவுடனே நான் தாத்தாவுக்கு போன் செய்தேன். இந்த சந்தோஷமான சேதியை அவரிடம்தானே முதலில் சொல்லவேண்டும்?

ஒன்றிரண்டு முறை போன் செய்தும் யாரும் போனை எடுக்கவில்லை. சில சமயம் வேறு வேலையாக இருக்கலாம். திரும்பக் கூப்பிடுவாராக இருக்கும்.

அவர்கள் செக் கொடுத்த விஷயத்தை அவரிடம் சொல்லாமல் எனக்கு நிம்மதி ஏற்படவில்லை. எத்தனை நாள் அவர் நடையாய் நடந்திருக்கிறார்? சிறிது நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டபோது ஒரு பெண் குரல் கேட்டது.

“அது சோமன் அண்ணனோட நம்பர்தானே?”. சந்தேகத்தோடு நான் கேட்டேன்.

“நான் அவரோட பொண்ணுதான்”. மெதுவான குரலில் பதில் வந்தது.

“அவர்கிட்ட போனக் கொஞ்சம் கொடுக்க முடியுமா?”

சிறிது நேரம் பதில் எதுவும் இல்லை. மீண்டும் நான் “ஹலோ… ஹலோ…” என்று கூப்பிட்டேன். பதிலாக மறுமுனையில் இருந்து அழும் சத்தம்தான் கேட்டது.

என்ன நடந்தது என்று புரிந்தது. மீண்டும் யாரோ போனை எடுத்தார்கள் அது ஒரு ஆண் குரல்.

“யாரது?”.தாத்தாகிட்ட அத்தியாவசியமா ஒரு விஷயம் சொல்லணும்”

“நான் அவரோட மருமகனாக்கும். மாமா நேத்து ராத்திரி செத்துப்போயிட்டாரு. திடீர்னு நெஞ்சு வலி. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறப்ப செத்துட்டாரு. சடங்கெல்லாம் இப்பதான் முடிஞ்சுது. எதுவா இருந்தாலும் நான் அப்பறம் கூப்பிடறேன் சார்”


அவருடைய வார்த்தைகள் இடியாக வந்து என் மீது இறங்கியது. ஒரு சில காரியங்களை ஒரு போதும் உண்மையாகக் கூடாதே என்று நாம் விரும்பும் நிமிடங்கள். அப்படிப்பட்ட நிமிடம் அது. நான் வேலை செய்து கொண்டிருந்த போதும் தூங்கும் போதும் அவர் முகம் என்னை வேட்டையாடியது.

“எப்படியாச்சும் காசு வாங்கித் தரணும்”. கண்களில் நீருடன் அவர் சொல்லும் வார்த்தைகள். அவை என் சிந்தனைகளை, நித்திரையை ஆக்ரமித்தது. முடிவில் எல்லாம் சரியாகி செக் கிடைத்தபோது அதை வாங்க அவர் உயிருடன் இல்லை. ஆபீசர்கள் முன்னால் நான் சென்று நின்ற போது சிறிது நேரத்திற்கு என்னால் எதுவும் பேச முடியவில்லை.

மேடம் மற்றும் சாரின் சீட்டுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து போன போது நான் விஷயத்தை சொன்னேன். என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் அவர்களும் நிசப்தமாக இருந்தார்கள். இதுவரை யாருக்காகவும் எந்த ஒரு மேனேஜரும் நேராகப் போய்ப் பேசியதில்லை. தாத்தாவுக்காக மட்டும்தான் அப்படி.

அவருடைய நிலைமையைப் பார்த்துதான் நேரில் போனோம். “அத்தனை கஷ்டப்பட்டு செக் வாங்கியும் பிரயோஜனப்படாமல் போச்சே?”

சாரின் வார்த்தைகளில் சங்கடம் நிறைந்திருந்தது. “செக்க அவங்களுக்கு திருப்பி தரலாம். முடிவ அங்கீகரிச்சு புகாரு கொடுத்த ஆள் கையெழுத்துப் போடாததுனால செக்கை வேற யாருக்கும் கொடுக்க முடியாது”

மேடத்தின் குரலிலும் நிராசையும் துக்கமும் நிறைந்திருந்டன. மேடம் கொடுத்த செக்கை நடுங்கும் கைகளுடன் நான் வாங்கினேன். எங்கிருந்தோ தாத்தா நிறைந்து தளும்பும் கண்களுடன் என்னைக் கேட்பதாகத் தோன்றியது.

“என்னோட புகாரு முடிவுக்கு வந்துடுச்சு இல்லயா?”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p80.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License