இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

தேர் உருளும் வீதி

மலையாளம்: ஜி. எஸ். மனோஜ்குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


திவ்யாவை சீஃப் எடிட்டர் கூப்பிடுகிறார் என்று ப்யூன் வந்து சொன்ன போதுஅவள் திடுக்கிட்டுப் போனாள். ஆதிவாசி ஊர்களில் சிசு மரணங்களைப் பற்றிய ரிப்போர்ட்டை முடிக்காததற்கு இன்று எடிட்டரிடம் இருந்து வசவு கேட்கப்போவது உறுதி என்று நினைத்தபடிதான் அவருடைய கேபின் கதவைத் திறந்தாள். ஆனால் அவர் மிக அமைதியாக இருந்தார்.

“ம்.. திவ்யாவா?. வர்ற வெள்ளிக்கிழமைதான் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நாள். ஒரு ரிப்போர்ட் தயாராக்கணும்”

“சார். ஆதிவாசி ஊர்கள்ல சிசு மரணங்களப் பத்தின ரிப்போர்ட்ட இன்னும் முடிக்கல. அத முடிச்சுட்டு அப்பறமா இதச் செய்யக்கூடாதா?”

“அத ஒத்திவச்சுடு. இது இந்த வாரத்துல பிரிண்ட்டுக்குப் போகவேண்டியது. இந்தியாவுல மத்த மாநிலங்கள விட கேரளா முன்னணியில இருக்கு. அதப்பத்தின டேட்டா வேணும்னா ஆர் டி ஓவ கூப்பிட்டுக் கேட்டுக்க. நான் அவரக் கூப்பிட்டு சொல்றேன்”

“சரி சார்”. சத்துப் பற்றாக்குறையால் மரணம் தட்டிப்பறித்து எடுத்துக் கொண்டு செல்லும் ஆதிவாசி குழந்தைகளைப் பற்றிய் அதிகாரிகளின் கண்களைத் திறக்க வேண்டிய அந்த ரிப்போர்ட்டை பாதி வழியில் கைவிட வேண்டி வந்ததை நினைத்து வேதனையுடன் அவள் தன் இருப்பிடத்திற்கு திரும்பினாள்.

நிம்மதி இழந்தாள். இனிமேல் இன்று எதுவும் எழுத முடியாது என்று புரிந்த போது முன்கூட்டியே ஆபீசில் இருந்து வெளியில் வந்தாள். ஸ்கூட்டரில் சிறிது நேரம் நகரத்தைச் சுற்றிவந்தாள். அது அவளுடைய ஒரு பழக்கம். விரக்தியை மாற்ற, சும்மா நகரத்தின் சாலைகள் வழியாகவும், சிறிய பாதைகள் வழியாகவும் ஒரு சுற்று சுற்றி வந்தாள்.

நூலகத்திற்கு முன்னால் போய் வண்டி நின்றது. எடுத்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். மாற்றி எடுத்த புத்தகங்களோடு அவள் வீட்டை அடைந்தாள். தாமதமாக வந்ததற்காக அம்மா வசை பாடினாள். ராத்திரியில் எழுதுவதற்காக அறையில் இருக்கும்போது அவளுக்குத் தோன்றியது. தினம்தினம் செய்தித்தாள்களில் வரும் சாலை விபத்துகளும் அதில் இழக்கப்படும் உயிர்களும் அனாதையாகப் போகும் குடும்பங்களும்! காரணங்கள்… பரிகாரங்களை உட்படுத்தி அழுத்தமாக ரிப்போர்ட்டைத் தயார் செய்யவேண்டும் என்று அவள் நினைத்தாள்.


குறுகலான சாலைகள். வாகனங்களின் கட்டுக்கடங்காப் பெருக்கம். குடித்துவிட்டு ஓட்டுவது. சாலை விதிகள் பற்றிய அறிவு இல்லாதது. இப்படி குற்றவாளிகளாக வேண்டிய விஷயங்களைக் கண்டுபிடித்தாள்.

திருப்தி ஏற்படாமல் எழுதிய எல்லாவற்றையும் சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டாள். இது அவளுடைய ஒரு பழக்கம். மாற்றி எழுத புதிதாக எதுவும் தோன்றவும் இல்லை. பாலுவுக்கு போன் செய்தாள்.

“உனக்கு என்ன ஆச்சு?”

“ஒன்னுமில்ல. சும்மாதான் கூப்பிட்டேன். ஒரு ரிப்போர்ட்ட எழுத இருந்தேன். சரியா வரல. அப்போ உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நினைச்சேன்.

“ஏன் உனக்கு எழுத முடியல?”

“தெரியல பாலு. என்னமோ மனசுக்குள்ள ஒரு அடைப்பு. ஒன்னும் சரியா வரமாட்டேங்குது”

“நீ எழுதலைன்னா அப்பறம் வேற யாரு எழுதப் போறாங்க?. நான் அந்த செய்தித்தாள வாசிக்கறதே உன்னோட ரிப்போர்ட்ட படிக்கறதுக்காகத்தான். திவ்யா தாமோதரன் அரியக்கோடுங்கற தலைப்புல வர்ற கட்டுரைங்கள வாசிக்க நிறய பேரு இருக்காங்க. எதிர்பார்க்கரவங்க ஏராளமா இருக்காங்க என்னை மாதிரி. சரி. அது போகட்டும். என்ன டாஸ்க்?”

“சாலை விபத்துகள்ல இழக்கப்படும் உயிருங்க. போக்குவரத்து விழிப்புணர்வு”. “இதப் பத்தி நிறய வந்திருக்கே?. அதனால நீ வித்தியாசமா எழுது”

“என்னோட இஷ்டம் ஒன்னும் இல்லயே? எடிட்டர் கொடுக்கற தலைப்புதானே?”

அவனுடன் பேசிக்கொண்டே எப்போதோ தூங்கிப்போனாள். அன்று இரவு அவள் ஒரு கனவு கண்டாள். ஆள் அரவம் இல்லாத வழிகளினூடே போலீஸ்காரங்களுக்கு பிடி கொடுக்காம ஓடற ஒரு கதாசிரியர். அதிகாரிகள் பிடிக்க முடியாத ஒரு ஆளாக அந்த எழுத்தாளனை அறிவித்திருந்தார்கள்.

திடுக்கிட்டு எழுந்தாள். சிறிது நேரம் படுக்கையிலேயே இருந்தாள்.

அவள் உடம்பு முழுவதும் வியர்வை பெருகியது. நேற்றைய பொழுதுகளில் எப்போதோ வாசித்த நிலா ஒழுகும் பெருவழியில் பஷீர் எழுதிய கதை ஒன்றின் ஞாபகம் வந்தது. அந்தக் கதை தந்த வேதனையின் மறு வடிவமாக இருந்தது அது.

பாலுவுடைய நம்பருக்கு பல தடவை அழைத்தாள். கடைசியாக தொடர்பு கிடைத்தது.


அதன் மூலம் வாசுவின் தொடர்பு கிடைத்தது. சாலை விபத்துகளில் மரணமடைபவர்களைக் காட்டிலும் செத்துப் போகாமல் நடைப்பிணமாக வாழ்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்று பாலு சொன்னபோது அது சரியென்று அவளுக்கு தோன்றியது. செத்துப் போகாமல் வாழும் ஒரு இளைஞனைப் பற்றி அவன் சொன்னான்.

கூடுதலாக தெரிந்துகொள்ள வாசுவை அழைக்கச் சொன்னான். ட்ரூ காலரில் சகா வாசு என்று வந்தது. லொக்கேஷனை சேர் செய்ய முடியுமா என்று அவள் கேட்டபோது “அது ஒன்னும் என்னோட போன்ல இல்ல” என்று பதில் வந்தது. மனதில் குறித்து எடுத்த அடையாளங்கள் வழியாக அவள் ஸ்கூட்டரை ஓட்டினாள்.

தூரம் அதிகம். அந்த பழைய ஸ்கூட்டர் அவளிடம் தன் பதட்டத்தை வெளிப்படுத்தியது. நீண்ட கால நட்பு என்றாலும் இடையிடையில் அவர்களுக்கு நடுவில் பிணக்கம் ஏற்படுவது உண்டு. வழக்கம் போல ஸ்கூட்டர் சிறிய சத்த வேறுபாடுகள் மூலம் தன் இயலாமையை தெரிவித்தது.

அவள் அதைப் புறக்கணித்தபோது வண்டி சட்டென்று நின்றது. ஸ்டார்ட் செய்யப் பார்த்தாள். பலன் இல்லை. வண்டியை வழியோரத்தில் இருந்த வாகை மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு அவள் தன் பயணத்தை பேருந்தில் தொடர்ந்தாள். பாலு சொன்ன இடத்திற்கு போய்ச்சேர்ந்தபோது மெம்பர் வாசு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

எழுபது வயதுக்கும் மேல் இருக்கக்கூடிய மெலிந்த உடம்போடு உள்ள ஒரு சாது மனுஷன். அவரிடம் பாலு எல்லா விவரங்களையும் சொல்லியிருந்தான்.

அவர் அதிகம் எதுவும் பேசவில்லை. ஒரு வழிகாட்டியைப் போல முன்னால் நடந்து போகும் அவரிடம் ஆரம்பத்தில் அவளுக்கு கோபம் ஏற்பட்டது. பேசுவதில் கஞ்சத்தனம் காட்டும் ஒரு மனுஷன். அவளுடைய கேள்விகள் பலவற்றிற்கும் ஒரு முனகல் மட்டுமே பதிலாக வந்தது. என்றாலும் நாட்டுப் பாதைகள் வழியாகப் போகும்போது முன் பின் ஒருபோதும்ன் பார்த்ததில்லை என்றாலும் அவர் அவளுக்கு ஒரு தைரியம் தருவது போலத் தோன்றியது.

அவருக்குப் பின்னால் விழும் நிழலை மிதித்து நடக்கும்போது இளமைக் காலத்தில் ஒரு விளையாட்டு போல அப்பாவின் நிழலை மிதித்துக் கொண்டு நடந்தது ஞாபகம் வந்தது. “பத்திரிகையில வேல பாக்க ஆரம்பிச்சு எவ்வளவு காலமாச்சு?” வாசு கேட்டார்.

“ஆறு வருஷம்” பதில் சொன்னபோது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

“ஏதாச்சும் ஒன்னு பேசினாரே?”

“இன்னும் நிறய தூரம் இருக்கா?”

“கொஞ்ச தூரம் போகணும். உன்னோட பேரு என்ன?”

“திவ்யா. திவ்யா தாமோதரன் அரியக்கோடுங்கறதுதான் முழுப் பேரு. அந்தப் பேருலதான் எழுதறேன்”

“தாமோதரன் அரியக்கோடு?”. “அப்பாவோட பேரு”. அதைக் கேட்டு அவர் நின்றார்.

“தாமோதரனோட பொண்ணா நீ?”

“ஆமாம். அப்பாவத் தெரியுமா?”

“ம். பத்திரிகையாளனா இல்ல. சகா தாமோதரனா…. அவரு கம்யூனிஸ்ட்டா இருந்தாரு. அப்பறம் தான் பத்திரிகையாளனா ஆனாரு”

நடை தொடர்ந்தது.

“என்னை மாதிரி நிறய பேரு கம்யூனிஸ்ட்டா ஆகறதுக்கு காரணமா இருந்தாரு”

“இப்ப அப்பா இல்ல. போயி ஒம்பது வருஷமாச்சு”

“தெரியும். செய்தித்தாள் மூலமா தெரிஞ்சுகிட்டேன். கடைசியில அவரு கட்சியைத் திருத்த முயற்சி செஞ்சப்ப வீழ்ச்சிகள சுட்டிக்காட்டினப்ப பலரால புறக்கணிக்கப்பட்டாரு. பத்திரிகையாளரு வேல எப்படிப் போகுது?”

“ஹாங்”. இடுங்கிய படிகளில் இறங்கி ஒரு சிறிய வீட்டு முற்றத்தை அடைந்தார்கள்.

“இதுதான் வீடு. இங்க ஒன்னரை வருஷமா ஒரு ஆள் கிடக்கறாரு. ஒரு பைக் விபத்தோட மிச்சம் மீதியா”

திவ்யா அந்த இரண்டு அறை வீட்டைத் தயக்கத்தோடு பார்த்தாள். சிமெண்ட் பூசப்படாமல் சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட வீடு. சுவரின் பல பகுதிகளும் பெயர்த்துக் கொண்டு வந்தன. ஓடுகளில் சிலது உத்தரத்தில் இருந்து விழப்போவது போல கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தது.


ஒரு பெண்மணி அழுக்கு பிடித்த புடவை என்று சொல்லக்கூடிய ஒரு கிழிசல் துணியை உடுத்திக் கொண்டு படிகளில் இருந்தாள். நீர் வற்றிப் போன கண்கள். மொழியற்றுப் போன வார்த்தைகள். ஏதேதோ புலம்பாமல் புலம்பிக் கொண்டிருந்தன. அவர்களை உற்றுப் பார்த்தாள் அந்த வயதான பெண்மணி.

திவ்யா அந்தப் பையனை உற்று நோக்கினாள். ஒழுங்கில்லாத கண்கள் அடிக்கடி திறந்து மூடிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கொடுத்த ஒரு மேசை மின் விசிறி ஜன்னல் வழியாக காற்றை அவன் மீது வீசிக் கொண்டிருந்தது. காற்று பட்டு அவனுடைய செம்பழுப்பு நிற முடி அசைந்தது.

அது ஒரு சமயம் வேகங்களின் வழியாக முடியை வருடி விட்டு அவனுக்கு ஆனந்தம் தந்த அதே காற்றை இப்போதும் அவன் தெரிந்துகொண்டது போல இருந்தது. அவனுடைய கண்கள் பாதி மூடித் திறந்தன. பக்குவம் இல்லாத மீசை, தாடி உரோமங்களை அந்தக் காற்று நிர்மலமாகத் தொட்டு கடந்து போனது.

ஒரு காலத்தில் வேகத்தை காதலித்த அவன் இப்போது ஒரு மிருதுவான லேசான காற்றுக்காக யாசிப்பது போல இருந்தது. வேகத்தை விரும்பாதவர்களாக யாரும் இருக்கமுடியாது. ஓலைப் பம்பரங்களின் சிறகுகள் சுற்றுவதைப் பார்ப்பதற்காக ஓடாத இளமைக்காலங்கள் இருக்கமுடியாது. வேகங்களுடன் ஏற்பட்ட விருப்பங்களை பயம் நம்மிடம் இருந்து கவர்ந்து கொண்டு போய்விடுகிறதே! திவ்யா நினைத்துக் கொண்டாள்.

வேகத்தின் மீதான அவனுடைய காதலை இளமைக்காலம் சிவப்பு கம்பளம் விரித்து அன்று வரவேற்றது. முன் பின் தெரியாத வழிகளினூடே அவன் எத்தனை எத்தனையோ பயணங்கள் போயிருக்கிறான். இயற்கைக் காட்சிகளை ஏற்பாடு செய்து விருந்து வைத்ததும் அழைப்பு விடுத்ததும் வாழ்த்தப்படாததுமான எத்தனையோ இடங்களுக்கு பல குதிரை சக்தி உள்ள சக்கரங்களை உருட்டிக் கொண்டு போயிருக்கிறான்.

உருளைக் கற்கள் மீதும் மலைகளின் மீதும் சக்கரங்களை உருட்டிக் கொண்டு உத்வேகத்தோடும் அவன் உயரங்களை நோக்கியும் தூரங்களைக் கடந்தும் பயணித்திருக்கிறான். அவனைப் பற்றி நினைத்து அவனுடைய கண்களை நோக்கும் போது அவனுடைய இதயத்தில் இருந்து முன்னோக்கி குதித்துப் பாய்ந்து செல்ல விதும்பும் பைக்கின் ஆரவாரத்தை அவள் கேட்டாள்.

மெலிந்து நீர் வற்றிப்போன நீளமான விரல்களை அவள் தொட்டுப் பார்த்தாள். பூசாத சுவரின் ஒரு மூலையில் ஒரு சிலந்தி இரை பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு அப்பால் செம்பருத்திப் பூக்களில் தேன் குடிக்க வந்த குருவிகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. பைக்கின் மீது சாய்ந்திருக்கும் அழகான ஒரு வாலிபனுடைய போட்டோ சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

இப்போது கண் முன்னால் அவள் பார்க்கும் இந்த உடலுக்கும் போட்டோவில் இருந்த வாலிபனுக்கும் இடையில் இருந்த தூரத்தை ஒரு நடுக்கத்தோடு அவள் வாசித்து எடுத்தாள். தகர்ந்த இதயத்தோடு திவ்யா வெளியில் இறங்கும் போது ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் வாசு காத்துக்கொண்டிருந்தார்.

பாசி படர்ந்தபடிகளின் வழியாக இறங்கினார்கள். சாலையை நோக்கித் திரும்ப நடக்கும் போது வாசு அவனைப் பற்றி சொன்னார். “படிக்கற காலத்துல நல்ல புத்திசாலி. அதிக மதிப்பெண் வாங்கினதுக்காக என்னோட கையிலேர்ந்து பரிசு வாங்கியிருக்கான். இனிம அதப் பத்தி பேசி என்ன புண்ணியம்?” ஆதங்கத்தோடு சொன்னார்.

குழந்தையாக இருக்கும் போது அவனுடைய அப்பா அவர்களை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டதாகவும், பல வீடுகளில் வேலை செய்து அவனுடைய அம்மா பிழைப்பை நடத்தியதாகவும் அவர் சொன்னார். அவனோட பிடிவாதத்துக்காக அந்தக் குடிசைய அடகு வச்சு கூட்டுறவு சங்கத்திலேர்ந்து ரெண்டரை லட்சம் ரூபாய் கடனா வாங்கி அத வச்சு பைக் வாங்கித் தந்தா அவனோட அம்மா.

இவ்வளவு விலை அதிகமானது வேணாம்னு சொல்லியிருப்பாளா இருக்கும். ஆனா ஒரே ஒரு மகன் இல்லயா? அந்த கடனை அடைக்கச் சொல்லி ஜப்தி நோட்டீஸ் வந்தது. நான் அத ரெண்டு தடவை தள்ளிப் போடப் பரிந்துரை செஞ்சேன். ஆனா என்ன? இனி எத்தன நாளைக்கு இப்படி?”. சொல்லிவிட்டு அவர்மௌனமானார். நடை தொடர்ந்தது.

முடிவில்லாத பலப் பல கேள்விகளுடன் அவள்! பகலிலும் தாங்கமுடியாத சூடு. சுட்டுக் கொதிக்கும் செம்மண் பாதை. செருப்பு இல்லாத பாதங்களால் மண்ணை அழுத்தி மிதித்து நடந்தபடி வாசு அவளுக்கு வழிகாட்டினார். திரும்ப நடக்கும் போது தூரம் அதிகமானது போலத் தோன்றியது. சிறிது நேரம் காத்துக் கொண்டு நின்ற பிறகுதான் அவள் செல்லவேண்டிய பேருந்து வந்தது.

ஜன்னல் வழியாக அவள் வாசுவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

நடந்துநடந்து அகன்று சென்று ஒரு சிறு புள்ளியாக அவர் மாறும்வரை பார்த்தாள். அன்றைக்கு ராத்திரி நல்ல பனி இருந்தது. அம்மா கொடுத்த காப்பியுடன் எழுத உட்கார்ந்த போது வழியில் விட்டுவிட்டு வந்த ஸ்கூட்டரை நினைத்துக் கொண்டாள்.


அது இப்போது வாகை மரத்தின் அடியில் இருட்டில் தனியாக இருக்கும். ஜன்னலை திறந்து பார்த்தபோது ஸ்கூட்டரை நிறுத்தும் ஷெட் சூன்யமாக இருந்தது. அது அவளுடைய நிம்மதியை குலைத்தது. அந்த வழி இப்போது ஆள் அரவம் இல்லாமல் இருக்கும். வாகனங்களின் ஓட்டம் நின்றுபோயிருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அது தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கும். பனித்துளிகள் அதை மூடியிருக்கும். அரவம் இல்லாத அந்த இடம் அதைப் பயப்படுத்தியிருக்கும். தன்னுடைய வண்டிக்கு ஜீவாம்சம் இருப்பது போல பல சமயங்களிலும் அவளுக்குத் தோன்றியதுண்டு. பல காலங்களாக அது அவளுடைய பங்காளியாக இருந்தது. தனக்கு சொந்தமான யாரோ போல அது அவளுக்குத் தோன்றியது.

திரும்பி வரும்போது பேருந்தில் இருந்து ஸ்கூட்டரைப் பார்த்தாள். அது அவளைப் பார்ப்பது போல இருந்தது. “இங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு நீ போறியா?” என்று அது அவளைக் கேட்பது போல இருந்தது. வெகுநேரம் கழித்துத்தான் அவள் எழுத வேண்டியதை எழுதி முடித்தாள். கடைசி வரிக்குக் கீழே திவ்யா தாமோதரன் அரியக்கோடு என்று எழுதும்போது உதிர்ந்து விழுந்த கண்ணீர் எழுத்துக்களை ஈரமாக்கியது.

திரும்பத் திரும்ப அந்த எழுத்துக்களை அவள் வாசித்தாள். இனி திருத்த வேண்டியது எதுவும் இல்லை என்று தோன்றிய போது நாளை இது எடிட்டருடைய குப்பைத்தொட்டியில் நிச்சயமாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அப்பறம் ஒரு கேள்வியும் கேட்ட்கப்படும். “இது ரிப்போர்ட்டா? இல்ல கதையா?”

எழுதுவதை நிறுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தாள். தூக்கம் வராமல் கிடக்கும்போது அவள் மீண்டும் இரண்டு பேர் வாழும் அந்த குடிசை வீட்டை நினைத்தாள்.

தூரங்களை காதலித்த ஒரு மகன். எதிர்பார்ப்புகள் எல்லாம் அஸ்தமித்துப் போன ஒரு தாய். இருவரும் இருக்கும் ஒரு இடம். பொருள் தெரியாத வார்த்தைகளைக் கொண்டு விதும்பும் அந்த தாய் தரும நியாயங்களை வைத்து விதியைப் பழிக்கும் போது மௌன தியானங்களால் அவன் அப்போதும் அந்த தேரோடிய வழிகளினூடே எங்கேயோ பயணித்துக் கொண்டிருப்பான்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p81.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License