Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள்


இந்தியாவில் இருக்கும் பழமையான பல்கலைககழகங்களுள் ஒன்றாகத் திகழக்கூடியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாகக் கொண்டு 1922 ஆம் ஆண்டு ஜீன் 24 –ல் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி என்னும் பெயரில் அறத்தந்தை அண்ணாமலை அரசர் அவர்களால் இது தொடங்கப் பெற்றது. பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக 1929 ஆம் ஆண்டு விரிந்து உலகெங்கும் கல்வி மணத்தைக் கமழச் செய்து வருகின்றது. இதே ஆண்டிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழம் பதிப்பகம் ஒன்றை நிறுவி, பொருளை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அறிவுச் செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பி நூல்களை அச்சிட்டு குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். இப்பதிப்பகத்தின் வழி பல்வேறு துறை சார்ந்த 625 நூல்கள் வெளிவந்துள்ளன. அதனோடு பல்வேறு ஆய்வு சார்ந்த இதழ்களும், கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. அனைத்து நூல்களையும் தொகுக்க முடியாத காரணத்தால், இக் கட்டுரையில் தமிழியல் துறை சார்ந்து வெளிவந்துள்ள நூல்கள் மட்டும் இங்கே தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.பல்கலைக்கழக வெளியீடுகள்

தமிழுக்காக தொடங்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சார்ந்த பல ஆய்வு நூல்கள், இந்நிறுவனப் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளன. 1937-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தொடர்பான நூல்கள் பதிப்பிக்கப் பெற்று வருகின்றன.

1. பாரிகாதை - பாஷா கவிசேகரவித்துவான் -இரா.இராகவையங்கார் (1937)
2. தமிழ் வரலாறு - பாஷா கவிசேகரவித்துவான் - இரா.இராகவையங்கார் (1937)
3. Tholkappiam chollatikaram - Dr. P. S. Subramaniayam Sastri (1945)
4. Historical Tamil Reader - Dr. E. S. Varadaraja Iyar (1945)
5. The Elepaht in the Tamil Land - E. S. Varadaraja Iyar (1947)
6. Tholkappiam Porul Adhikaram Part 1 Translation into English - E. S. Varadaraja Iyar (1947)
7. குறுந்தொகை விளக்கம் -பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1947)
8. Tholkappiam Porul Adhikaram Part 2 Translation into English - E.S.Varadaraja Iyar (1947)
9. The Workship and Ophiolatry in The Tamil Land - G . Subramaniya Pillai (1948)
10. பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி - பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1949)
11. தித்தன் - பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1949)
12. கோசர் - பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1949)
13. பட்டினப்பாலை - பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1951)
14. இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி - பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1952)
15. தமிழிலக்கியம் - க.இராமசாமி நாயுடு (1954)
16. கௌடலீயம் பொருணூல் - மகாமகோபாத்திய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், இராமானுஜாசாரியார் (1955)
17. Advanced Studies in Tamil Prosody - Dr .A .Chidambaranthan Chettiar (1957)
18. தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1 - வித்துவான் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் (1957)
19. தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2 - வித்துவான் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் (1957)
20. A History of Jain ; Buddhist and Vaishanava Literature A.N.I.1100 - E .S . Varadarajan (1957)
21. ஐங்குறுநூறு பகுதி 1 - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (1957)
22.குறுந்தொகை விளக்கம், இரண்டாம் பதிப்பு -பாஷா கவிசேகரவித்தவான் இரா.இராகவையங்கார் (1958)


23.பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி இரண்டாம் பதிப்பு -பாஷா கவிசேகரவித்தவான் இரா.இராகவையங்கார் (1958)
24. A History of Saiva Literature - Vidwan A .S .Dorai Swami (1958)
25. ஐங்குறுநூறு பகுதி – 3 - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (1958)
26. பிற்காலச் சோழர் வரலாறு தொகுதி 1 - தி.வை.சதாசிவபண்டாரத்தார் (1958)
27. பிற்காலச் சோழர் வரலாறு தொகுதி 2 - தி.வை.சதாசிவபண்டாரத்தார் (1958)
28. நாடகக் கலை - ஔவை தி.க.சண்முகம் (1958)
29. கவி இரவீந்தரநாத்தாகூர் வாழ்க்கை வரலாறு - தெ.பொ.மீனாட்சி சுந்தரம் (1961)
30. பிற்கால சோழர் வரலாறு - தி.வை.சதாசிவபண்டாரத்தார் (1961)
31. தொல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம் - க.வெள்ளைவாரணனார் (1962)
32. தமிழிலக்கிய வரலாறு தொகுதி – 1 - தி.வை.சதாசிவபண்டாரத்தார் (1962)
33. A New Approach to Thiruvasagam -Mrs Ratna Navarathinam (1962)
34. தமிழிலக்கிய வரலாறு தொகுதி – 2 - தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (1965)
35. The Tamil and their Culture - K . S. Ramaswami Sastri (1965)
36. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் - மயிலை.வேங்கடசாமி (1969)
37. தொல்காப்பியம் - திரு.க.வெள்ளைவாரணனார் (1970)
38. திருக்குறள் ஒப்புமை வளர்ச்சி - திரு.ச.தண்டபாணி தேசிகர் (1972)
39. சிறுகதை - மீ.ப.சோமுசுந்தரம் (1972)
40. இலக்கணச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1973)
41. இலக்கணச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1974)
42. இலக்கணச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1975)
43. சிலப்பதிகாரச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1976)
44. விரிவுப்பணிச் சொற்பொழிவு - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1976)
45. சிலப்பதிகாரம் மணிமேகலை – காப்பிய மரபு - டாக்டர் கொ. இலச்சுமணசாமி (1977)
46. சிலப்பதிகார யாப்பமைதி - டாக்டர் ந.வீ.செயராமன் (1977)
47. புகழேந்தி நளவெண்பாவும் பாரிகாதையும் - டாக்டர் வெ.பழனியப்பன் பாஷா கவிசேகரவித்துவான் இரா.இராகவையங்கார் (1977)


48. Fine Arts and Crafts in Pattuputtu and Ettuthogai - S . vaithiyalingam (1977)
49. A Survey of the sources for the History of the Tamil Literature - Dr M.Govindaswamy (1977)
50. Advanced Studies in Tamil Prosody - Dr .A.Chidabaranathan Chettiar (1977)
51. தொல்காப்பியச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1978)
52. Buddhism in the Tamil Country - T.N.Vasudeva Rao (1978)
53. Buddhism as Expounded in Manimekalai - Dr.S.N.Kandaswamy (1978)
54. தமிழ் நாடகப் பரிணாம வளர்ச்சி - டாக்டர் ஆறு.அழகப்பன் (1979)
55. திருக்குறள் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1979)
56. மணிமேகலைச் சிந்தனைகள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1979)
57. A Study of Thirugnana Sambandar - Dr.P.Soundra (1979)
58. கௌடலீயம் பொருநூல் முதல் பாகம்(இரண்டாம் பதிப்பு) - பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் ,பி.எல்.இராமனுஜச்சாரியார் (1979)
59. திருவாசகச் சொற்பொழிவு குறுந்தொகை விளக்கம் - ந.ரா.முருகவேள் பாஷா கவிசேகர வித்துவான் இரா.இராகவையங்கார் (1982)
60. தென்னிந்திய கல்வெட்டுக்கள் (முப்பது மட்டும்) - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1983)
61. கல்லும் கனியாகும் - சுப.அண்ணாமலை (1984)
62. இலக்கணக்கருவூலம் தொகுதி -1 - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1985)


63. இலக்கணக்கருவூலம் தொகுதி -2 - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1986)
64. இலக்கணக்கருவூலம் தொகுதி -3 - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1987)
65. திருஞானசம்பந்தர் திருப்பாடல்கள் - டாக்டர் தி. லீலாவதி (1987)
66. The Universal Vsion of Saint Ramalinga - Dr . R.Ganapathy (1987)
67. திருவாசகச் சுவை - முரு.பழ. இரத்தினம் செட்டியார் (1987)
68. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - ஆறு.அழகப்பன் (1987)
69. தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் - க.வெள்ளைவாரணனார் (1988)
70. கலியின் குரல் - சுப்பு ரெட்டியார் (1988)
71. Kural Portraits - Dr.K.Chellappan (1989)
72. சிவஞான முனிவரின் காஞ்சிபுராணம் ஓர் ஆய்வு - டாக்டர் மு.தங்கராசு (1989)
73. தமிழ்மேடை நாடகங்கள் - டாக்டர் சு.சாமிஐயா (1989)
74. வடமொழி நாடக இலக்கிய வரலாறு - ஸ்ரீனிவாச சர்மா (1989)
75. தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கணக் கூறுகள் - துரை.பட்டாபிராமன் (1989)
76. இலக்கண ஆய்வடங்கல் தொகுதி -1 துரை.பட்டாபிராமன் (1992)
77. இலக்கணக் கருவூலம் 3 - தமிழ்த்துறை ஆசிரியர்கள் (1992)
78. குறுந்தொகை விளக்கம்(1-40) - பாஷாகவி சேகர வித்துவான் இரா.இராகவையங்கார் (1994)
79. தி.ஜானகிராமன் சிறுகதைகள் – ஒரு திறனாய்வு - பழ.முத்துவீரப்பன் (1995)
80. திருக்கோவையார் பேராசிரியர் உரையும் பழைய உரையும் - சு.சுப்பிரமணிய பிள்ளை (1995)
81. திருநின்ற செம்மையர் - பழ.சண்முகம் (1996)
82. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் - கு.சுந்தரமூர்த்தி (1996)
83. தமிழிலக்கியங்களில் அகத்தியர்-ஓர் ஆய்வு - ப.தங்கராசு (1997)
84. தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி - அ.ஆனந்தநடராசன் (1997)
85. தொல்காப்பியம் சைவ சித்தாந்த நோக்கில் - அ.சொ. சுப்பையா (1997)
86. இலக்கியங்களில் வானியல் - அ.சிவபெருமான் (1997)
87. பன்னிரு திருமுறை வரலாறு தொகுதி 1 - க.வெள்ளைவாரணனார் (1997)
88. பன்னிரு திருமுறை வரலாறு தொகுதி 2 - க.வெள்ளைவாரணனார் (1998)
89. தொல்காப்பியம் எழுத்த்திகாரம் இளம்பூரணர் உரை - கு.சுந்தரமூர்த்தி (1998)
90. பெரியபுராண வரலாறும் முதுமொழி வெண்பாக்களும் - கா.ம.வெங்கடராமையா (1998)
91. இலக்கண ஆய்வடங்கள் தொகுதி -2 - துரை.பட்டாபிராமன் (1999)
92. சித்தர் இலக்கியத்தில் திருக்குறள் - இரா.சாரங்கபாணி (1999)
93. பண்டிதமணியின் தமிழ்ப்பணி - தியாகராசன் (2000)
94. கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியாரின் இலக்கிய நூல்கள்-ஓர்ஆய்வு - த.இராசவன்னியன் (2000)
95. இலக்கண ஆய்வடங்கல் தொகுதி -3 - துரை.பட்டாபிராமன் (2000)
96. இலக்கணக் கட்டுரைகள் -பொதுப்பாசிரியர் -க.தியாகராசன் (2002)
97. சுந்தரர் தேவாரம் உரைவிளக்கமும், ஆய்வுரையும் - பதிப்பாசிரியர் க.தியாகராசன் (2003)
98 . ஒப்பாய்வு நோக்கில் கம்பன் - சி.மெய்கண்டான் (2004)
99. சங்க இலக்கியச் சிந்தனைகள் தொகுதி 1, 2 - ப.தங்கராசு, அரங்க.பாரி (2004)
100. சித்தர் இலக்கியம் தொகுதி 1 - மீ.ப.சோமு (1988) மறுபதிப்பு (2004)
101. சித்தர் இலக்கியம் தொகுதி 2 - மீ.ப.சோமு (1988) மறுபதிப்பு (2004)
102. சித்தர் இலக்கியம் தொகுதி 1 - மீ.ப.சோமு (1992) மறுபதிப்பு (2004)

அச்சில் இருப்பவை

1.சித்தர் இலக்கியம் தொகுதி 4, 5, 6 - மீ.ப.சோமு
2.பாவேந்தரும் சங்கப் புலவர்களும் - சிலம்பொலி சு.செல்லப்பன்
3.சோதிடமும் மருத்துவமும் - அ.சிவபெருமான்

திருக்குறள் ஆய்வு நூல்கள்

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் ஆய்வுகள் நடைபெற வேண்டுமென சென்னை, அண்ணாமலை, மதுரை காமராசர் என்னும் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வகங்கள் மேற்கொள்ளும் திட்டம் வகுக்கப் பெற்றது. அதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் 3 இலட்சம் வைப்புநிதியாக வைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் இடைக்கால இலக்கியங்களும் திருக்குறள் பற்றிய ஆய்வினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்றது. அவ்விருக்கையின் வழி பல்வேறு அறிஞர்களின் ஆராய்ச்சி நூல்கள் அண்ணாமலைப் பதிப்பகத்தின் வழி வெளிவந்துள்ளன. திருக்குறள் ஆய்வு நூல்களில் பேராசிரியர் இரா.சாரங்கபாணி அவர்களின் திருக்குறள் உரைவேற்றுமை என்னும் ஆய்வு நூல் ஆய்வுலகத்திற்குப் பெரிதும் பயன்படக்கூடிய நூல். இந்நூலில் திருக்குறளுக்கு உரை எழுதிய மரபுரையாசிரியரிலிருந்து புதிய உரையாசிரியர்கள் வரை ஆய்ந்து உரை வேறுபாடுகளைச் சுட்டி, குறளுக்குப் பொருத்தமான உரையைக் கூறியுள்ளார். இந்நூல் பேராசிரியர் அவர்கள் கரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொழுது சுருங்கிய வடிவமாக செல்வி பதிப்பத்தின் வழி இந்நூல் வெளிவந்துள்ளது என்பது குறிப்படத் தக்கது.

1. திருக்குறள் பொருளதிகாரம் - டாக்டர் மு.கோவிந்தசாமி (1973)
2. காப்பியங்களில் திருக்குறள் - திரு ச.தண்டபானி தேசிகர் (1974)
3. திருக்குறளும் பிற உரையாசிரியர்களும் - டாக்டர் மு.கோவிந்தசாமி (1975)
4. வள்ளுவரும் கம்பரும் - திரு ச.தண்டபாணி தேசிகர் (1975)
5. பரிமேலழகர் - டாக்டர் மு.கோவிந்தசாமி (1978)
6. வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள் - திரு ச.தண்டபாணி தேசிகர் (1980)
7. திருக்குறளும் தமிழ்பாரத நூல்களும் - திரு க.இராமலிங்கம் (1980)
8. தெய்வப் பனுவல்களில் திருக்குறள் - திரு அருணை வடிவேல் முதலியார் (1983)
9. பரிப்பெருமாள் உரையும் உரைத்திறனும் - திரு.ம.கா.திருவேங்கடராமையா (1983)
10. திருக்குறள் இயல்-8 - திரு அருணை வடிவேல் முதலியார் (1984)
11. திருக்குறள் உரைவேற்றுமை (அறத்துப்பால்) - பேராசிரியர் இரா.சாரங்கபாணி (1989)
12. திருக்குறள் உரைவேற்றுமை (பொருட்பால்) - பேராசிரியர் இரா.சாரங்கபாணி (1992)
13. தெய்வப் பனுவல்களில் திருக்குறள் (பத்தாம் திருமுறை) - திரு அருணை வடிவேல் முதலியார் (1992)
14. தெய்வப் பனுவல்களில் திருக்குறள் (பத்தாம் திருமுறை) - திரு அருணை வடிவேல் முலியார் (1992)
15. திருக்குறள் உரைவேற்றுமை (காமத்துப்பால்) - பேராசிரியர் இரா.சாரங்கபாணி (1994)
16. வள்ளுவர் வகுத்த காமம் - பேராசிரியர் இரா.சாரங்கபாணி (1994)
17. சித்தர் இலக்கியத்தில் திருக்குறள் - பேராசிரியர் இரா.சாரங்கபாணி (1994)
18. பெரிய புராண வரலாறுகளும் முதுமொழி வெண்பாக்களும் - திரு ம.கா.வேங்கடராமையா (1999)

திருமுறை ஆய்வு வெளியீடுகள்

சைவத்திருமுறைகளான பன்னிரு திருமுறைகளுள் மூவரின் தேவாரத் தொகுப்புக்கள் ஏழனுக்குமான உரையும், சித்தாந்தக் குறிப்புக்களும் எழுதி வெளியிடும் நோக்கில், 1990-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் திருமுறை ஆய்விருக்கை தொடங்கப் பெற்றது. இப்பணிகளைச் செம்மையுற மேற்கொள்வதற்காகப் பேராசிரியப் பெருமக்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களும் நியமிக்கப் பெற்றனர். அவர்களின் ஆய்வுகளின் வழி, ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன. அந்நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப் பெற்றுள்ளன.

1. தொல்காப்பியம் சைவசித்தாந்த நோக்கில் - சிவத்திரு.அ.சொ.சுப்பையா (1997)
2. சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும் (முதல் 500 பாடல்கள்) - அ.ஆனந்த நடராசன், அ.சொ.சுப்பையா (2001)
3. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - அ.சொ.சுப்பையா (2006)

அச்சில் இருப்பவை

1.சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும் (இரண்டாம் 500 பாடல்கள்) - புலவர் சுந்தரேசம் பிள்ளை, அ.சொ.சுப்பையா.
2.திருநாவுகரசர் 4, 6 திருமுறை 2000 பாடல்கள் - கணபதி டாக்டர் அ. ஆனந்த நடராசன், டாக்டர் வெ.பழனியப்பன்

திருவருட்பா வெளியீடு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அருள் தந்தை வடலூர் வள்ளலார் பெருமானின் திருவருட்பாவினைத் தொகுத்து வெளியிட்ட சிறப்பு அண்ணாமலைப் பல்கலைக்ழகத்திற்கு உண்டு. வள்ளலாரின் பற்றாளராகவும் அவர் வழி பின்பற்றி வாழ்பவருமான அருட்செல்வர் திரு.பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், திருவருட்பாவிற்கு விரிவான உரை வேண்டுமென விரும்பி, அவ்விருப்பம் ஈடேற, இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞராகத் திகழ்ந்த உரைவேந்தர் பேராசிரியர் ஔவை க.துரைசாமிப் பிள்ளையைத் தேர்ந்து, வேண்டினார். அவரும் இணங்கினார். இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வழி வெளியீடாக வந்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணிய திரு. நா.மகாலிங்கம் அவர்கள் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் முத்தையாவேளிடம் இசைவு கேட்க அவர்களும் உடன்பட்டு பல்கலைக்கழகப் பொன்விழா ஆண்டில் வெளியிடப்பெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் நினைவு நாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னை தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு இராம.வீரப்பன் அவர்கள், தொடர்ந்து இவ்வுரைகள் தொடர்ந்து வெளிவருவதற்கு தமிழ்நாடு அரசு நான்கு இலட்சம் ரூபாய் அளிக்கும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1.திருவருப்பா தொகுதி-1 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1979)
2.திருவருப்பா தொகுதி-2 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1983)
3.திருவருப்பா தொகுதி-3 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1983)
4.திருவருப்பா தொகுதி-4 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1984)
5.திருவருப்பா தொகுதி-5 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1985)
6.திருவருப்பா தொகுதி-6 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1986)
7.திருவருப்பா தொகுதி-7 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1987)
8.திருவருப்பா தொகுதி-8 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1988)
9.திருவருப்பா தொகுதி-9 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1989)
10.திருவருப்பா தொகுதி-10 - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1989)

சொருணாம்பாள் நினைவுச் சொற்பொழிவு வெளியீடுகள்

சொல்லின் செல்வரென அழைக்கப்பெறும் பேரறிஞர் பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள், தம் தாயின் பெயரால் 25,000 வைப்புநிதியாக வைத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள். இவ்வறக்கட்டளைப் பொழிவுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. இப்பொழிவுகளைத் தொகுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம் சில நூல்களை வெளியிட்டுள்ளது.


1. இளங்கோவடிகள் - டாக்டர் மு.வரதராசன் (1960)
2. திருவள்ளுவர் - மறைத்திரு சேவியர் தனிநாயகம் (1961)
3. கொங்கு வேளிர் - திரு.சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார் (1963)
4. சிலப்பதிகாரம் - திரு.பி.திரிகூட சுந்தரம் பிள்ளை (1964)
5. கம்பர் - டாக்டர் வ.சுப.மாணிக்கம் (1965)
6. சேக்கிழார் - டாக்டர் மா.இராசமாணிக்கம் (1966)
7. திருநாவுகரசு - பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார் (1967)
8. வாலிவதை - கோ.சுப்பிரமணியப்பிள்ளை (1968)
9. கம்பரும் மெய்ப்பாட்டியலும் - கு.கோதண்டபாணிபிள்ளை (1970)
10. நக்கீரர் - ச.தண்டபாணி தேசிகர் (1971)
11. மாணிக்கவாசகர் - அ.ச.ஞானசம்பந்தம் (1972)
12. சாத்தனார் - அ.மு.பரமசிவானந்தம் (1973)
13. குமரகுருபர் - அ.நடேசமுதலியார் (1974)
14. கல்லாடம் - டாக்டர் மெ.சுந்தரம் (1975)
15. தாயுமானவர் - டாக்டர் சா.வே.சுப்பிரமணியம் (1976)
16. சிவஞானமுனிவர் - க.வெள்ளைவாரணனார் (1977)
17. திருத்தக்கதேவர் - லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் (1978)
18. இளம்பூரணர் - மு.அருணாசலம் (1982)
19. திருவள்ளுவர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1982)
20. ஆண்டாள் - சி.பாலசுப்பிரமணியம் (1984)
21. திருவள்ளுவர் - திருக்குறளார் (1985)
22. ஒப்பாய்வு நோக்கில் கம்பர் - சி.மெய்கண்டன் (2004)

கம்பராமாயணப் பதிப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழாராய்ச்சிக்கு முதன்மை கொடுத்து, ஆராய்ச்சிப் பிரிவினை ஏற்படுத்தி பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டது. இவ்வாய்வுத்துறை 1952 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று 1969 வரை தனித்துறையாக இயங்கி வந்து. இதன் மூலம் கம்பரின் கம்பராமாயணத்தைச் செம்பதிப்பாக அறிஞர் உலகுக்கு வழங்க வேண்டும் என்ற வேணவாவினால் தமிழறிஞர்களைக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பம் 1955 தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக வெளியிட்டது. இத் தொகுதிகள் முழுமையும் மறுபதிப்பாக விரைவில் வெளிவரவிருக்கின்றன.


1. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 (1955)
2. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 2 (1956)
3. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 (1957)
4. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 (1958)
5. கம்பராமாயணம் அயோத்தியாகாண்டம் தொகுதி 1 (1959)
6. கம்பராமாயணம் அயோத்தியாகாண்டம் தொகுதி 2 (1961)
7. கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொகுதி 1 (1963)
8. கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொகுதி 2 (1965)
9. கம்பராமாயணம் கிட்கிந்தாகாண்டம் தொகுதி 1 (1966)
10. கம்பராமாயணம் கிட்கிந்தாகாண்டம் தொகுதி 2 (1967)
11. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 1 (1968)
12. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 2 (1970)
13. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 3 (1970)
14. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 4 (1970)
15. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 5 (1971)
16. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 6 (1971)
17. ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் தொகுதி 1 (1977)
18. ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் தொகுதி 1 (1979)

தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம்

தமிழ்புலவர்களின் வராற்றுக் களஞ்சியம் என்னும் நூல் 1953 இல் பேராசிரியர் லெ.கரு.இராமநாதன் செட்டியார் அவர்கள் தமிழ்த்துறை தலைவராக இருந்த போது பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியோடு தொகுக்கும் பணி தொடங்கியது. முதல் தொகுதியினைத் தொகுக்கும் பணியினைத் தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவரும் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து டாக்டர் வெ.பழநியப்பன் அவர்கள் இவ்வாய்வில் பெரும் பங்கு வகித்து, தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் நான்கு தொகுதிகளாக வர உதவினார்.

1. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 1 - தமிழ்துறை ஆசிரியர்கள் (1974)
2. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 2 - டாக்டர் வெ.பழநியப்பன், திரு.உ.பழனி (1984)
3. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 3 - டாக்டர் வெ.பழநியப்பன் (1989)
4. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 4 - டாக்டர் வெ.பழநியப்பன் (2000)

தமிழ்ப் பண்பாட்டு வரலாறு

தமிழர்களுடைய பண்பாட்டின் சிறப்பினை உலகுக்கு உணத்தும் நோக்கில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை ஆய்வு திட்டம் வகுத்தது. அப்பணியினைப் பேராசிரியர் செ.வைத்தியலிங்கனார் அவர்கள் ஏற்று, ஆய்வு மேற்கொண்டு 6 தொகுதிகளை வழங்கியுள்ளார்கள். அவற்றுள் நான்கு தொகுதிகள் அண்ணாமலைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி 1, 2 என்னும் நூல்கள் தமிழக அரசு பரிசு பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

1. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 1 - செ.வைத்தியலிங்கம் (1992)
2. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 2 - செ.வைத்தியலிங்கம் (1996)
3. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 3 - செ.வைத்தியலிங்கம் (2000)
4. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 4 - செ.வைத்தியலிங்கம் (2000)

அச்சில் இருப்பவை


திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் அறக்கட்டளை வெளியீடுகள்

திருப்பனந்தாள் காசிமடம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மக்களுக்கு மலிவுப் பதிப்புகளாகச் சமயம், தமிழ் தொடர்பான நூல்களை வெளியிட்டு வருகிறது.

1. கம்பர் நினைவுப் பரிசுப் பாடல் தொகுதி (1944)
2. சேக்கிழார் நினைவுப்பரிசுப் பாடல் (1944)
3. ஆதி குமரகுருபரர் பரிசுப் பாடல் தொகுதி (1945)
4. Introduction and History of Savia Siddhanta - G.Subramanian Pillai (1951)
5. Lectures on Saiva Siddhantha - M.Balasubramania Mudaliar (1951)
6. Lectures on Saiva Siddhantha - Pro.R.Ramanujachari (1952)
7. Lectures on Saiva Siddhantha - K.Vajravelu Mudaliar (1953)
8. Lectures on Saiva Siddhantha - S.Suchithanandam Pillai (1954)
9. தேவாரதிருமுறை பரிசுப் பாடல் தொகுதி – 1 (1954)
10. தேவாரதிருமுறை பரிசுப் பாடல் தொகுதி – 1 (1954)
11. சிவஞான போதம் - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1954)
12. ஞானாமிர்தம் - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1954)
13. Lectures on Saiva Siddhantha - Yogi Suddhanada Barathi (1955)
14. Lectures on Saiva Siddhantha - Pro . T.M.P.Magadevan (1955)
15. Lectures on Saiva Siddhantha - K.M.Balasubramaniam (1957)
16. Lectures on Saiva Siddhantha - Dr. V.A.Devasenapathi (1959)
17. பன்னிருதிருமுறைகள் (முதற் பகுதி) - க.வெள்ளைவாரணனார் (1962)
18. பன்னிருதிருமுறைகள் (இரண்டாம் பகுதி) - க.வெள்ளைவாரணனார் (1962)
19. திருவாசகம் - நீ.கந்தசாமிப்பிள்ளை (1962)
20. Lectures on Saiva Siddhantha - Dr. V.A.Devasenapathi (1963)


21. Collectd Lectures on Saiva Siddhantha (1964)
22. The Relevance of Saiva Siddhantha - M.Mruguesa Mudaliar (1968)
23. பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டாம் தொகுதி) - க.வெள்ளைவாரணனார் (1969)
24. யாப்பருங்கலக் காரிகை(முதற் பகுதி) - ச.சாமிஐயா (1973)
25. பன்னிரு திருமுறை வரலாறு (முதற் தொகுதி) - க.வெள்ளைவாரணனார் (1976)
26. தமிழிலக்கிய வரலாறு 13, 14, 15 – ஆம் நூற்றாண்டுகள் - தி.வை.சதாசிவபண்டாரத்தார் (1977)
27. தமிழிலக்கிய வரலாறு 250-600 - தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் (1977)
28. நம்பியகப்பொருள் - வெ.பழநியப்பன் (1977)
29. ஐங்குறு நூறு –முழுதும் - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1978)
30. சைவ இலக்கிய வரலாறு - ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (1978)
31. தமிழ் வரலாறு - ரா.இராகவையங்கார் (1978)
32. தொல்காப்பியம் - க.வெள்ளைவாரணனார் (1978)
33. திருமந்திரமாலை 300 - ந.சிவப்பிரகாச தேசிகர் (1979)
34. Siddhata Saivam in Essence and Manifestation - Mrs.Ratnanavaratna (1979)
35. தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் - கு.சுந்தரமூர்த்தி (1980)
36. தொல்காப்பியம்- சொல்லதிகாரம்-சேனாவரையம் - கு.சுந்தரமூர்த்தி (1980)
37. பன்னிரு திருமுறை இரண்டாம் பாகம் - க.வெள்ளைவாரணனார் (1982)
38. நன்னூல் விருத்தியுரை - சோம.இளவரசு (1982)
39. குறுந்தொகை - உ.வே.சாமிநாதையர் (1982)
40. புறப்பொருள் வெண்பாமாலை (1984)
41. தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் - க.வெள்ளைவாரணனார் (1984)
42. குமரகுருபர சுவாமிகள் - டாக்டர் கு.சுந்தரமூர்த்தி (1991)
43. திருவிளையாடற் புராணம் - டாக்டர் கு.சுந்தரமூர்த்தி (பதிப்பாசிரியர்) (1991)

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வெளிவந்திருந்தாலும், தமிழுக்கென்று தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகையால் தமிழ் தொடர்பான நூல்கள் அதிக அளவில் வெளிவந்துள்ளன. இந்நூல்கள் மலிவு விலையில் வெளியிடுவதற்குக் காரணம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமும் தமிழின் பெருமை உலகறிய வேண்டும் என்பதே ஆகும்.

- முனைவர். சே.கல்பனா

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p124.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License