மலர்களின் பருவ நிலைகள்
மலர்களின் அழகைக் கண்டு மகிழ்கிறோம். இந்த மலர்களுக்கும் அது அரும்பியதிலிருந்து உதிர்ந்து விழும் வரை 13 நிலைகள் இருப்பதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த பதின் மூன்று நிலைகள் உங்களுக்குத் தெரியுமா?
1. அரும்பு - அரும்பும் தோன்று நிலை
2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
3. முகை - நனை முத்தாகும் நிலை
4. மொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை ("முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள்.)
5. முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
6. மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
7. போது- மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
8. மலர்- மலரும் பூ
9. பூ - பூத்த மலர்
10. வீ - உதிரும் பூ
11. பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
12. பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
13. செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.