எழுதாக்கிளவி என்றால்...!

1. சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் பேடன் பவுல்.
2. உலகின் முதல் கலைக்களஞ்சியம் கி.மு. 220ல் சீன மொழியில் எழுதப்பட்டது.
3. சூரிய மீன் (Sun Fish) எனப்படும் மீனுக்குக் கண் தெரியாது.
4. தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவின் போது திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை ஓதப்படுகின்றன.
5. பைபிளில் மொத்தம் 35,66,480 எழுத்துக்களும், 7,73,746 சொற்களும் உள்ளன.
6. பெண்களின் கருப்பையின் எடை சுமார் அறுபது கிராம்கள்தான்.
7. நற்செய்தியைக் கேட்டால் கூட காரணமில்லாமல் பயப்படுபவர்களை “யூஃபோபியா” என்று உளவியல் குறிப்பிடுகிறது.
8. இந்திய எல்லைக்குள் மட்டும் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.
9. கம்யூனிசக் கொள்கையுடையவர்கள் பயன்படுத்தும் காம்ரேட் எனும் சொல் ஸ்பானிஷ் மொழியைச் சேர்ந்தது.
10. ஜீன் 21 ஆம் தேதி பகற்பொழுது நீண்டும், டிசம்பர் 22 ஆம் தேதி பகற்பொழுது குறைந்தும் காணப்படும்.
11. இந்தியாவில் முதன் முதலாக தபால்தலை 1825 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
12. உலகிலேயே மிகப் பெரிய தவளை ஆப்பிரிக்காவில் வாழும் கேலியாத் தவளைதான்.
13. சைபீரியாவிலுள்ள பைகால் எனும் ஏரிதான் உலகின் ஆழமான ஏரியாகும். அதன் ஆழம் 13,700 அடி.
14. சிகரெட் புகையிலுள்ள நிகோடின் ஏழு நொடிகளுக்குள் மூளையைச் சென்றடைந்து விடும்.
15. வாய்வழிச் செய்திகளையும், கருத்துக்களையும் சங்க இலக்கியம் எழுதாக்கிளவி என்கிறது.
16. உலகின் மிகப்பெரிய அரண்மனை வாடிகன் அரண்மனைதான்.
17. மனித உடலில் ரத்த ஓட்டமில்லாத பகுதி விழி வெண்படலம் மட்டுமே.
18. ஆர்கலி, ஆழி, புணரி, முந்நீர், பள்ளம், பவ்வம், பரவை - இவையனைத்தும் கடலைக் குறிக்கின்றன.
19. மனித உடலில் வியர்க்காத ஒரு உறுப்பு நாக்கு.
20. தேனீக்கள் ஒரு பவுண்டு தேன் உண்டாக்க 20 இலட்சம் மலர்களிலிருந்து ரசத்தை எடுத்து வர வேண்டும்.
21. உயிரினங்களில் அதிக நேரம் மூச்சை அடக்கிக் கொண்டிருப்பது முதலை. இவை 6 மணி நேரம் மூச்சுத் திணறாமல் தண்ணீருக்குள் இருக்க முடியும்.
22. யானையின் தும்பிக்கையில் 40, 000 தசைகள் உண்டு. ஆனால், ஒரு எலும்பு கூட கிடையாது.
23. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று பெருநிலப்பகுதிகள் (கண்டங்கள்) கூடும் இடத்தில் அமைந்துள்ளது சைப்ரஸ்.
24. முயல் வேகமாக ஓடும் போது 13 அடி தூரம் கூடத் தாவும்.
25. நாய்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் அதன் பாதங்களிலுள்ளன.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.