ஏழுக்குப் பெருமை!

ஏழுக்குப் பெருமை என்றால் “உலக அதிசயங்கள் ஏழு” என்று சொல்லி விடுவீர்கள். அதிசயங்கள் மட்டும்தானா ஏழு? ஏழுக்குப் பெருமை சேர்க்கும் மேலும் சில தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்காக...
கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.
அகத்திணை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை.
இசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
உலோகம்: செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெண்கலம், தரா.
அளவை: நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல்.
கடல்: உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்.
முதல் ஏழு வள்ளல்கள்: குமுணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி.
இடையெழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவச் சிரன், கண்ணன், சந்தன்.
கடையெழு வள்ளல்கள்: எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்.
பெண்களின் பருவம்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
இதுபோல் இந்திர விகாரம் ஏழு, ஏழு உலகம், ஏழுபுணர் இன்னிசை, ஏழெயிற் கதவம், எழுபிறப்பு, எழு முடி, எழுமீன், எழு மகளிர், எழு நிலை மாடம், எழுநாள் எல்லை என்று ஏழுக்குப் பெருமை சேர்க்கும் பல தகவல்கள் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன.
உலகப் பொதுமறையான திருக்குறளில் கூட எழு பிறப்பு, எழுமை என்று ஏழுக்குப் பெருமை சேர்க்கும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.