தபால் தலை தகவல்கள்

இங்கிலாந்தில் 1840 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெளியிட்ட “பென்னி பிளாக்” என்ற விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலைதான் உலகின் முதல் தபால் தலை.

ஆசியாவில் இந்தியாதான் முதன் முதலாகத் தபால்தலை வெளியிடப்பட்டது. அதிலும் விக்டோரியா மகாராணியின் உருவம்தான் பொறிக்கப்பட்டிருந்தது.

காந்திஜியை தபால் தலையில் வெளியிட்ட முதல் அயல்நாடு அமெரிக்காதான்.

நம் நாட்டின் தீபாவளிப் பண்டிகையை தபால் தலையில் வெளியிட்ட நாடு சிங்கப்பூர்.

தபால் தலையில் தன் பெயரை வெளியிடாத நாடு இங்கிலாந்து.

தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

தபால் தலைகளைச் சேகரிக்கத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.

விற்பனையில் அதிகமான வசூலைத் தந்த தபால் தலை, மனிதன் சந்திரனில் இறங்கியதற்காக அமெரிக்கா வெளியிட்ட தபால் தலைதான்.

1913ல் சீனா வெளியிட்ட ஒரு தபால் தலையின் நீளம் ஒன்பதே முக்கால் அங்குலம். அகலம் இரண்டே முக்கால் அங்குலம். இதுதான் உலகின் மிகப்பெரிய தபால் தலை.

முதன் முதலில் தபால் தலையில் இடம் பெற்ற திரைப்பட நட்சத்திரம் மோனாகாவின் இளவரசியான கிரேஸ் செல்வி.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.