ரசிகர்களுக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு?
விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என்று சில துறை சார்ந்தவர்களைப் பின்பற்றும் ரசிகர்களை ஆங்கிலத்தில் Fan என்று சொல்வார்கள்.
இவர்களுக்கு Fan என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?
1932 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சில நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களைப் போல் ஆடை, அணிகலன்களை அணிதல், தலை முடி அலங்காரம் செய்தல் என்று குறிப்பிட்ட நடிகர்களைப் போல் பின்பற்றத் தொடங்கினர்.
ரசிகர்களின் இந்த ஆர்வத்தைக் (வெறி?) கண்ட சில பெரியவர்கள் அவர்களை "FANATICS" என்று வேடிக்கையாக அழைத்தனர். "FANATICS" என்றால் பைத்தியக்காரர்கள் என்று பொருள். இந்த "FANATICS" சுருங்கி பின்னாளில் "FAN" என்றாகி விட்டது.
உண்மை இப்படியிருக்க... "FAN" ஐத் தமிழில் விசிறியாக்கி விட்டார்கள். இது போல் அவரவர் மொழிகளில் "FAN" ஐ மொழிபெயர்த்துப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ரசிகர்கள் எல்லாம் விசிறிகளாகி விட்டனர்.
- தேனி. பொன்.கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.