வவ்வாலுக்குக் கண் பார்வை உண்டா?
ஆஸ்திரேலியாவிலிருக்கும் கோலா என்ற விலங்கு தண்ணீர் குடிப்பதில்லை. ஏனென்றால், அது உணவாக உட்கொள்ளும் யூகலிப்டஸ் மரக்கிளைகளில் அதற்குத் தேவையான நீர் கிடைத்து விடுகிறதாம்.
ஈ, எறும்பு போன்ற பூச்சிகளுக்கு கேட்கும் சக்தி இல்லை.
வண்டு, தேனீ, குளவி போன்றவை தமது கொடுக்கை ஒரே ஒரு முறைதான் கொட்டுவதற்குப் பயன்படுத்த முடியும். ஒரு முறை கொட்டியவுடன் கொடுக்கு ஒடிந்து விடுகிறது.
உலகில் ஆயிரக்கணக்கான நிறங்கள் காணப்பட்டாலும் இதுவரை 267 நிறங்களுக்கு மட்டுமே பெயரிடப்பட்டுள்ளன.
பறவைகள் இலந்தை மரத்தில் மட்டும் கூடு கட்டுவதில்லை. இதுபோல் பறவை வெறுக்கும் ஒரே பழம் இலந்தைப் பழம் தானாம்.
வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் அதன் தலைப்பகுதியில் இல்லை, காலில் இருக்கின்றன.
வவ்வாலுக்கு கண் பார்வை கிடையாது. தான் பறக்கும் போது உண்டாகும் காற்றலைகளின் அதிர்வைக் கொண்டு எதிரிலிருக்கும் சுவர், வழி போன்றவைகளை அறிந்து கொள்கின்றன.
கரப்பான் பூச்சியின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் இல்லை. எனவே அதன் இரத்தம் வெள்ளை நிறத்திலிருக்கிறது.
கொசுக்களில் 2426 வகைகள் இருக்கின்றன.
தேனீயின் விசம் எபிடாக்சின் எனப்படுகிறது. இந்த விசம் வாத நோய், நியூரைட்டிஸ், நியூரால்ஜியா போன்ற பல நோய்களைத் தீர்க்கக் கூடியது.
-தேனி. பொன்.கணேஷ் .
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.