மதுரை விளக்குத் தூண் கதை
மதுரையில் பரபரப்பு மிக்க பகுதிகளில் ஒன்று விளக்குத் தூண். மதுரையில் தெற்கு மாசி வீதியும், கீழமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் உலோகத்திலான பெரிய விளக்குத் தூண் ஒன்று உள்ளது. இந்த விளக்குத் தூண் அமைக்கப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு?
ஆங்கிலேயர் காலத்தில் மதுரையை விரிவுபடுத்த எண்ணிய அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜான் பிளாக்பர்ன் என்பவர் மதுரையிலிருந்த கோட்டையை இடிக்க உத்தரவிட்டார். அகழியில் இடிக்கப்பட்ட கோட்டையின் இடிபாடுகள் கொட்டப்பட்டு இன்றைய வெளிவீதிகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு கோட்டை இருந்த பகுதியில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. கோட்டையை இடித்து மதுரையை விரிவுபடுத்தத் துணைபுரிந்த ஜான் பிளாக்பர்ன் நினைவைப் போற்றும் வகையில் மதுரை மக்களே இந்த விளக்குத் தூணை அமைத்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.