ஆங்கில எழுத்துக்களின் அதிசயம்!
ஆங்கில எழுத்துக்களில் A, B, C & D எனும் நான்கு எழுத்துக்களும் ஒன்றில் தொடங்கி 99 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் (spellings) இடம் பெறவில்லை. முதல் முறையாக Hundred என்ற சொல்லில் D எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.
ஆங்கில எழுத்துக்களில் A, B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Thousand என்ற சொல்லில் A எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.
ஆங்கில எழுத்துக்களில் B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999,999,999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Billion என்ற சொல்லில் B எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.
இன்னொரு சுவையான தகவல் C எனும் எழுத்து எந்த எண்ணிற்கான சொல்லிலும் இல்லை.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.