கலை நயத்துடனான கல் அடுக்கல்கள்
தங்கள் பகுதிகளில் கிடைக்கும் சாதாரண கற்களைக் கூட கலை நயத்துடன் அடுக்கி அந்த இடத்தை அழகாக மாற்றி விடும் திறனுடையவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். வீட்டுத் தோட்டங்கள், பூங்காக்கள், சாலை சந்திப்புகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பொது இடங்களில் இது போன்ற கல் அடுக்கிலான கலை வண்ணங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கல் அடுக்கலுக்கு அந்த இடங்களில் கிடைக்கும் கற்களை அழகிய வடிவமைப்புடன் கூடியதாக மாற்றக் கூடிய நல்ல கற்பனைத் திறனும், அதைச் சரியான முறையில் அடுக்கும் திறனும் அவசியமானது.
இப்படிச் சிறந்த கல் அடுக்கலில் உருவான, சிறப்பான வடிவமைப்பு கொண்ட, கலை நயத்துடனான சில படங்களை இங்கு காணலாம்.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.