1. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு பனாமா.
2. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது மூக்கு ரேகை.
3. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி வவ்வால்.
4. மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
5. டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
6. கனடா, ஜாவா எனும் இரு நாடுகளும் வாத்தை தேசிய பறவையாகக் கொண்டிருக்கின்றன.
7. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
8. கங்காருதான் ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
9. இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் மட்டுமே இருக்கிறது.
10. தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
11. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
12. உலகில் பனாமா கால்வாய் பகுதியில்தான் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
13. அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
14. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
15. `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ' எனப்படுகிறது.
16. பாலில் இரும்புச்சத்து இல்லை.
17. உலகில் ஜெர்மனி நாட்டில்தான் அதிக அளவில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
18. மெக்சிகோ நாட்டில்தான் வாடகைக்கார்கள் அதிகமுள்ளன.
19. உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு நூடில்ஸ்தான்.
20. சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனியாகத் தாய் மொழி இல்லை.
21. உலகில் அதிகக் காலம் வாழும் மிருகம் முதலைதான். இவை 300 ஆண்டுகள் வரை உயிர் வாழுமாம்.
22. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு வரையிலான ஒலியைத் தாங்கிக் கொள்ள முடியும்.
23. தொலைக்காட்சியில் பச்சை, நீலம், சிகப்பு ஆகிய மூன்று நிறங்களே அடிப்படை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
24. அயர்லாந்து நாட்டில் விவாகரத்து செய்ய முடியாது.
25. எப்போதும் மலராத பூ அத்திப்பூ.