துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு

1. பிறப்பு விகிதமே இல்லாத நாடு வாடிகன் சிட்டி.
2. தினசரி பத்திரிக்கை இல்லாத நாடு காம்பியா.
3. உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய். இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
4. காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
5. வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து.
6. வைரத்தில் மொத்தம் ஆறு மூலைகள் உள்ளன.
7. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
8. திராட்சை மலரை தேசிய மலராக கொண்ட நாடு சீனா.
9. ருத்ராட்சத்தில் 38 வகைகள் இருக்கின்றன.
10. மெக்ஸிகோ நாட்டில்தான் அதிகமான டாக்ஸிகள் இருக்கின்றன.
11. கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு நோர்வே.
12. உலகில் வறுமையான நாடு ருவாண்டா.
13. அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் இருக்கும்.
14. முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
15. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
16. .கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை வரை இடும்.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18. சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃப்லாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
19. உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
20. அந்தமான் தீவுகளில் மொத்தம் 204 தீவுகள் இருக்கின்றன.
21. முதலை கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கக் கூடியது.
22. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
23. கண் இல்லாத உயிரினமான மண்புழு, தோலினால் சுவாசிக்கும் உயிரினமும் கூட.
24. இத்தாலி நாடு படகு வடிவில் அமைந்திருக்கிறது.
25. ஐக்கிய இராஜ்ஜியம் வெளியிடும் அஞ்சல் தலையில் அந்த நாட்டின் பெயர் இருக்காது.
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.