1. தேவாரம் என்பதற்கு ‘தெய்வத்திற்கு சார்த்தும் மாலை’ என்று பொருள்.
2. பன்னிருதிருமுறைகளில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 18,350.
3. சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
4. ஒட்டக்கூத்தர் சரஸ்வதியை ’சொற்கிழத்தி’ என்று குறிப்பிடுகிறார்.
5. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள்.
6. எழுதிப் படிக்காமல், காதால் கேட்டு மனப்பாடம் செய்வதால், வேதங்களை ‘ஸ்ருதி’ என்று அழைக்கின்றனர்.
7.‘என் கடன் பணி செய்து கிடப்பதே’எனப் பாடியவர் திருநாவுக்கரசர்.
8. வேதாந்ததேசிகர் ஆண்டாள் மீது பாடிய நூல் கோதாஸ்துதி.
9. நம்மாழ்வார் மீது பாசுரம் பாடிய ஆழ்வார் மதுரகவியாழ்வார்.
10. சிவன் மீது சேந்தனார் பாடிய பாடல் ‘திருப்பல்லாண்டு’
11. வால்மீகி ராமாயணத்தில் உள்ள சுலோகங்கள் எண்ணிக்கை - 24,000.
12. பிரம்மா யாகம் செய்த இடம் ’பிரயாகை’ எனப்படுகிறது.
13. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடிய அடியவர் குமரகுருபரர்.
14. லலிதா சகஸ்ரநாமத்திற்கு இணையான நூல் அபிராமி அந்தாதி.
15. கந்தசஷ்டி கவசம் பாடியவர் தேவராய சுவாமிகள்.
16. துளசிதாசர் எழுதிய இந்தி ராமாயணம் ராமசரித மானஸ்.
17. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிய சித்தர் திருமூலர்.
18. திருச்செந்தூரின் புராணப் பெயர் திருச்சீரலைவாய்.
19. குமரகுருபரர் சரஸ்வதி மீது பாடிய பாடல் சகலகலாவல்லிமாலை.
20. "கடை விரித்தேன்... கொள்வாரில்லை' என்று வருந்தியவர் வள்ளலார்.
21. விழிக்கே அருளுண்டு' என்று அம்பிகையைப் பாடியவர் அபிராமி பட்டர்.
22. சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் பதினான்கு.
23. "ஞாயிறு போற்றுதும்' என்று சூரியனை போற்றும் இலக்கியம் சிலப்பதிகாரம்.
24. துளசியைத் தமிழில் ‘துழாய்’ என்கின்றனர்.
25. "எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல்கள் திருப்பாவை, திருவெம்பாவை.