1.கஜ கர்ணம்
2. அஜ கர்ணம்
3. கோ கர்ணம்
முன்று வகையாக மனிதர்கள் இருக்கின்றனர்.
இதற்குக் கிருபானந்த வாரியார் கூறும் விளக்கம் இது.
கஜகர்ணம்
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல் சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழப்பமடைவார்கள். அவர்களைக் ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்கின்றோம்.
அஜகர்ணம்
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால், அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல் மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக் காட்டினால் அவர்களை வெறுப்பார்கள், திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்கின்றோம் .
கோகர்ணம்
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல் அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள். இவர்களைக் 'கோகர்ணம்' போடுபவர்கள் என்கின்றோம்.