1. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த நூல் - சித்தாந்த அட்டகம்
2. சரஸ்வதி மீது அந்தாதிப்பாடல் பாடியவர் - கவிச்சக்கரவர்த்தி கம்பர்
3. வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படுபவர் - நம்மாழ்வார்
4. தெலுங்கு மொழியில் ஆண்டாளைப் போற்றும் நூல் - ஆமுக்த மால்யதா
5. திருவருட்பாவை பாடிய அருளாளர் - வள்ளலார்
6. தமிழ் இலக்கியத்தில் காளியின் பெயர் - கொற்றவை
7. விநாயகர் மீது காரியசித்தி மாலை பாடியவர் - கபிலர்
8. கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல் - கங்காஷ்டகம்
9. "பாலூட்டும் தாயினும் அன்பு மிக்க சிவன்' என்று பாடியவர் - மாணிக்கவாசகர்
10. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
11. திருவாய்மொழி பாடியவர் - நம்மாழ்வார்
12. மீனாட்சியம்மன் மீது பஞ்சரத்னம் பாடியவர் - ஆதிசங்கரர்
13. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர் - சேந்தனார்
14. குமரகுருபரர் முருகன் மீது பாடியது - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
15. செயல் தடையின்றி நிறைவேற அருளும் விநாயகர் துதி - காரியசித்தி மாலை
16. வீட்டில் லட்சுமி தங்க ஆதிசங்கரர் அளித்துள்ள ஸ்தோத்திரம் - கனகதாராஸ்தவம்
17. ஸ்ரீசூக்தத்தை எழுதியவர் - மகாகவி வேங்கடாத்வரீ
18. மகாலட்சுமி கிரக தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவள் என்று சொல்லும் நூல் - ஸ்ரீசூக்தம்
19. திருமுருகாற்றுப்படை பாடிய சங்கப்புலவர் - நக்கீரர்
20. கந்தசஷ்டிக் கவசத்தை எழுதியவர் - தேவராய சுவாமிகள்
21. சண்முகக் கவசத்தை எழுதியவர் - பாம்பன் சுவாமிகள்
22. கந்தரநுபூதியை பாடியவர் - அருணகிரிநாதர்
23. தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம் - பிரம்ம வைவர்த்த புராணம்
24. கண்ணன் மீது கொண்ட பக்தியால் கோபியர்கள் பாடிய பாடல் - கோபிகாகீதை
25. துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம் - ராமசரித மானஸ்
26. திருமால் மீது முகுந்தமாலை பாடிய ஆழ்வார் - குலசேகராழ்வார்
27. ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்த புராணம் - பிரம்மாண்ட புராணம்
28. நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர் - திருமழிசையாழ்வார்
29. கோளறுபதிகத்தில் பாடப்பட்டவர் - சிவபெருமான்
30. "நாரணன் அன்னை நரகம் புகாள்' என்று பாசுரம் பாடியவர் - பெரியாழ்வார்
31. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர் - வியாசர்
32. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதிப் பாடிய சிவபக்தர் - மாணிக்கவாசகர்
33. இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் - ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்
34. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் - சிவஞானபோதம்
35. திருமூலர் எழுதிய திருமந்திரம் - பத்தாம் திருமுறை