* கங்காரு குட்டிகள் பிறக்கும்போது 2.5 சென்டி மீட்டர்தான் இருக்கும். அந்தக் குட்டிகளுக்கு 'ஜோய்ல்ஸ்' என்று பெயர்.
* திருக்குறளில் 'ஔ' என்ற எழுத்து ஒரு முறை கூட இடம் பெறவில்லை.
* ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கொல்கத்தாவில், 1672 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை உருவாக்கினார்கள்.
* இந்தியா 1924 ஆம் ஆண்டில், பாரீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன் முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது.
* இந்திய தேசிய காங்கிரஸை ஆரம்பித்தவர் ஆலன் ஆக்டேவியஸ் ஹியூம்.
* தஞ்சை பெரியகோவில் ராஜராஜ சோழன் காலத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், மராட்டியர்கள் காலத்தில் பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
* புளுட்டோ கிரகம் தன்னைத்தானேச் சுற்றிக் கொள்ள 6 நாட்களையும், சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகளையும் எடுத்துக் கொள்கிறது.
* உலகின் முதல் கண் வங்கி 1944 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.
* முள்ளம் பன்றியை நீரில் அமிழ்த்தி மூழ்கடிக்க முடியாது. காரணம், அதன் மேலுள்ள முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது. இவை பலூன் போல முள்ளம் பன்றியை மேலே மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது.
* கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில் வாலியும், சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால், ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால், வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும். புராணக்கதையிலுள்ளபடியே இந்தச் சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
* மகாபாரதத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரில் எழுதியவர் ராஜாஜி.
* இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் ‘ராமசரித மானஸ்’
* விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளோ இல்லை.
* கர்னாடகாவிலுள்ள மூலுபாகுல் என்னும் இடத்தில் உள்ள ஆஞ்சனேயருக்குத் தாழம்பூ அணிவிக்கிறார்கள்.
* லட்சத்தீவுக் கூட்டத்தில் இருக்கும் மினிக்காய்த் தீவைக் கடற்பயணி மார்க்கோபோலோ 'பெண் தீவு' என்று குறிப்பிட்டார்.
* டீஸ்டா எனும் ஆறு பாயும் மாநிலம் சிக்கிம்.
* இந்தியாவில் உருவாகிய முதல் ஆண்கள் பாப் பாடகர் குழுவின் பெயர் ‘தி பேண்ட் ஆப் பாய்ஸ்’
* குர்முகி எனப்படும் கதை பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டது.வ்
* உலகில் அதிக அளவில் வெங்காயம் விளையும் நாடு சீனா.
* கேழ்வரகின் அறிவியல் பெயர் ‘எல்லு சீன் குரோகனா'