கல்பாத்தியைச் சேர்ந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதியான அக்ரஹாரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு குறிப்பிட்ட கட்டுமானப் பாங்கினைக் கொண்டிருக்கிறது. பொதுச்சுவர்கள், சரிவான கூரைகள், ஒருங்கமைந்த கிழக்கு-மேற்கு மற்றும் எதிர் திசை தன்மைகள் பார்ப்பதற்கு அழகாக அமைந்திருக்கும். குழந்தைகள் விளையாடுமிடம், விழாக்கால அரங்குகள் மற்றும் சேமிப்பு அறைகள் போன்றவைகளைக் கொண்டிருக்கும் வகையில் இந்த அக்ரஹாரம்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
பிராமணர்களின் குடியிருப்புப் பகுதியான அக்ரஹாரம், புது கல்பாத்தி, பழைய கல்பாத்தி, சத்தாபுரம் மற்றும் கோவிந்தராஜபுரம் என சில பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. பழைய கல்பாத்தியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், புதிய கல்பாத்தியில் மந்தகார மகாகணபதி கோயில், சாத்தாபுரத்தில் பிரசன்ன மகாகணபதி கோயில், கோவிந்தராஜபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் போன்றவை அமைந்திருக்கின்றன.
இந்த அக்ரஹாரப் பகுதிகள் அனைத்தும் கேரள அரசின் சுற்றுலாத்துறையினரால், பாரம்பரிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன.