தடம் மாறிய தமிழ் பழமொழிகள்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!
சரியான பழமொழி
கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
விளக்கம்
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதைக் கல்லாகப் பார்க்கும் போது, அங்கே கடவுளைப் பார்க்க மாட்டீர்கள். அதையே, நீங்கள் கடவுளாகப் பார்க்கும் போது கல்லைப் பார்க்க மாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மருவியே நாய் என்றாகி விட்டது.
*****
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
சரியான பழமொழி
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.
*****
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்
சரியான பழமொழி
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்.
*****
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.
சரியான பழமொழி
ஆயிரம் வேரை (மூலிகை வேரை) கொன்றவன் அரை வைத்தியன்.
*****
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
சரியான பழமொழி
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு
விளக்கம்
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டைப் பதிக்கும் மாடே அதிகப் பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.
*****
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்
சரியான பழமொழி
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
*****
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.