அன்பில் 12 வகைகள் இருக்கின்றன. அவை;
1.
இரக்கம் - எளியவர் மேல் காட்டுகின்ற அன்பு.
2.
கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகின்ற அன்பு.
3.
ஜீவகாருண்யம் - எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தும் அன்பு.
4.
பந்தம் - உறவினர்களிடத்தில் செலுத்தும் அன்பு.
5.
பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
6.
விசுவாசம் - வேலை செய்பவர் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.
7.
பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையிலான அன்பு.
8.
நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.
9.
காதல் - கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பு.
10.
பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
11.
அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
12.
அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகின்ற அன்பு.
அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம் ஏற்படும். நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மையைத் தரும்.