தமிழ்நாட்டு மாட்டினப் பெயர்கள்

இந்தியாவில் வேளாண்மைப் பணிகளில் மொத்தம் 137 வகையான மாட்டு இனங்கள் பயன்பாட்டிலிருந்து வந்தன. இவற்றில், 90க்கும் அதிகமான மாடுகள் தமிழ்நாட்டின் வேளாண் தொழில்களில் பயன்படுத்தப்பட்டன. தற்போது, இந்த மாட்டினங்களில் பல அழிந்து, சுமார் 32 வகையான மாடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. தமிழ்நாட்டில் பயன்பாட்டிலிருந்த நாட்டு மாட்டினங்களில் 89 வகையான மாட்டினங்களின் பெயர்கள் கீழேப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
1. அத்த கருப்பன்
2. அனரி காளை
3. அழுக்கு மரியன்
4. ஆள விரிச்சான்
5. ஆனை சொரியன்
6. கட்டை காளை
7. கட்டை காரி
8. கட்டைவாழ் கூழை
9. கட்டை கொம்பன்
10. கட்டு கொம்பன்
11. கத்தி கொம்பன்
12. கருமரியன்
13. கருமரை காளை
14. கருங்கூளை
15. களர்கால் வெரியன்
16. களர்ச்சி கண்ணன்
17. கள்ள காளை
18. கள்ள காடன்
19. கருப்பன்
20. கண்ணன் மயிலை
21. காடம்பசு
22. காரிகாளை
23. காற்சிலம்பன்
24. குட்டை செழியன்
25. குட்டை நரம்பன்
26. குள்ள சிவப்பன்
27. குத்து கருப்பன்
28. குண்டு கண்ணன்
29. கூறுக்கொம்பன்
30. கூளை வாளன்
31. கூளை சுவளை
32. கொட்டை பாகான்
33. கொண்டைதலையன்
34. ஏறி சுழியன்
35. ஏறு வாளன்
36. நாரை கழுத்தன்
37. நெட்டை கொம்பன்
38. படைப்பு பிடிங்கி
39. படளை கொம்பன்
40. பசுங்கழுத்தன்
41. பனங்காய் மயிலை
42. பட்டிக்காளை
43. பால் வெள்ளை
44. பொட்டைக்கண்ணன்
45. பொக்கு வாயன்
46. போருக் கண்ணன்
47. மட்டை கொழும்பன்
48. மஞ்சள் வாளன்
49. மஞ்சரி வாளன்
50. மஞ்ச மயிலை
51. மறை சுவளை
52. மயிலை
53. மயிலை காளை
54. மேகவண்ணன்
55. முறிக்கொம்பன்
56. முறிக்காளை
57. முட்டிகாலன்
58. சங்குவண்ணன்
59. செம்மறியன்
60. செம்மறை காளை
61. செந்தாழை வைரன்
62. செவலை எருது
63. சொரியன்
64. தனப்பன்
65. தள்ளையன் காளை
66. தரிக்கொம்பன்
67. தொடைசேர் கூழை
68. தூக்கசெழியன்
69. வட்ட புளை
70. வட்ட செழியன்
71. வட்ட கரியன்
72. வர்ணக் காளை
73. வளை கொம்பன்
74. வரி கொம்பன்
75. வெள்ளி கூடும்பன்
76. வெள்ள கொம்பன்
77. வெள்ளை பூரன்
78. வெள்ளை
79. கரித்திய பிள்ளை
80. சந்தனபிள்ளை
81. பனங்காரி
82. செம்புத்துக்காரி
83. காரி மாடு
84. கருக்க மாடு
85. புளிங்குலம் காளை
86. காங்கேயம்
87. உம்பளச்சேரி
88. பர்கூர் காளை
89. கிளாவெரி காளை
தொகுப்பு - மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.