காந்தி கணக்கு என்றால் இலவசம் என்பதாக இருக்கிறதே... இதிலிருக்கும் உண்மை என்ன?
மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது, வியாபாரிகள் அத்தனை பேரும் அவருக்கு முழு ஆதரவு அளித்தார்கள்.
அவர்கள் காந்தியிடம், “எங்களால் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். எங்களுக்கு அவர்கள் எந்தப் பணமும் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்கள்.
அப்படி வந்ததுதான் காந்திக் கணக்கு. ஆனால், நாம் இதற்கு இலவசம் எனும் புரியாத கணக்கு என்கிறோம்.