* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது டால்பின்.
* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் தர்ப்பைப்புல்.
* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.
* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது முதலை.
* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது மரங்கொத்தி.
* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
* மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட பறவை நெருப்புக் கோழி.
* நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி.
* நான்கு மூக்குகளை உடைய உயிரினம் நத்தை.
* நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை ஆந்தை.
* நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் டால்பின்.
* நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு.
* பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை ஹம்மிங் பறவை.
* துருவக் கரடிகள் இடது கையையே அதிகம் பயன்படுத்தும்.
* பற்கள் இல்லாத பாலூட்டி இனம் எறும்புத்தின்னி.
* நட்சத்திர மீன்களுக்கு எட்டு கண்கள்.
* கடல்வாழ் உயிரினங்களில் மூன்று இதயங்களைக் கொண்டது ஆக்டோபஸ்.
* உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் ஸ்டோன் ஃபிஷ் (ஆஸ்திரேலியா).
* தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினம் இறால்.
* நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.
* வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம் இரண்டே வாரங்கள்தான்.
* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’
* கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் ஸ்டிக்ஸ் பேக்.
* ஒரு சாதாரண தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கும்.
* உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.
* ஒட்டகச்சிவிங்கியால் ஒலியெழுப்ப முடியாது.
* மனிதன் சிரிப்பதைப் போலவே குரலெழுப்பும் பறவை குக்கு பெர்ரா (ஆஸ்திரேலியா).
* சுறா மீனிற்கு இரண்டு கருப்பைகள் உள்ளன.
* எலிகள் பிறந்து கண்விழிக்க 14 நாட்கள்ஆகும்.
* கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.