மேகங்கள் நாம் பார்க்கும் பொழுது மிகவும் பஞ்சு போல இலேசாக இருப்பது போலத் தெரியும். ஆனால், மேகங்கள் நாம் பார்ப்பது போல இல்லை. அது மிகவும் எடை மிகுந்ததாக இருக்கும். உண்மையில் ஒரு மேகத்தின் எடை 5 லட்சம் கிலோ கிராம் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு எப்படித் தெரியும் என நீங்கள் கேட்பது தெரிகிறது. இந்த எடை அளவு ஒரு மேகத்தின் நீர் அடர்த்தியை எடுத்து, அதன் அளவால் பெருக்கி அதனைக் கணக்கிட்டிருக்கின்றனர். இவ்வளவு எடை இருக்கும் மேகம் எப்படி மிதக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? மேகத்திற்குக் கீழே உள்ள காற்று கனமாக இருப்பதால் மேகம் மிதக்கிறது அவ்வளவுதான்.