* காப்ரியில், நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய் தெருக்களில் மலம் கழித்தால் தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் டிஎன்ஏ மூலம் அதை கண்டுபிடித்து நாய் உரிமையாளர்களுக்கு €2,000 ($2,400) அபராதம் விதிக்கப்படும்.
* ஆஸ்திரேலியாவில், விக்டோரியா சட்டத்தின் கீழ், சரியான உரிமம் இல்லாமல் விளக்கை மாற்றுவது சட்டத்திற்கு எதிரானது. விக்டோரியாவில், சான்றளிக்கப்பட்ட மின்சாரப் பணியாளர்கள் மட்டுமே விளக்கை மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இதை மதிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.
* கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அக்ரோபோலிஸ், எபிடாரஸ் தியேட்டர்( பழங்கால திரையரங்கம்) போன்ற சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஹை ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பழங்கால பாரம்பரியத்திற்கு உகந்ததாக இல்லை தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மென்மையான காலணிகளை மட்டுமே அணிய அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
* இத்தாலியிலிருக்கும் மிலனின் டியோமோ மற்றும் சியானா கதீட்ரல் போன்ற முக்கியச் சுற்றுலாத் தலங்களில் புறாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 2008 ஆம் ஆண்டில் இத்தாலிய அரசாங்கம் வெனிஸின் புகழ்பெற்ற செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் புறாக்களுக்கு உணவளிக்கத் தடை விதித்தது. மீறினால் 700 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உணவளிப்பது பறவைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பதால், உள்ளூர் அதிகாரிகள் இந்த வழக்கத்தைத் தடை செய்துள்ளனர்.
* சமோவாவில் மனைவியின் பிறந்தநாளை மறந்தால், கணவன் மனைவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தவறு குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தால், கணவன் சிறைக்குச் சென்று சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்பதே இந்த விதியின் அடிப்படை நோக்கமாம்.
* தாய்லாந்தில் தவறுதலாக அந்நாட்டுப் பணத்தை மிதித்து விட்டால் சிறைக்கு செல்ல வேண்டும். தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
* துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ, பாசம் காட்டவோக் கூடாது. குறிப்பாக, இங்கு வரும் தம்பதிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மீறினால் சிறைதான்.