ஒரு ஆணுக்குக் கீழ்க்காணும் முப்பத்திரண்டு அழகு இருந்தால், அது அரச அழகு என்பர். இதனை வடமொழியில் சாமுத்ரிகா லட்சணம் என்றும் சொல்வதுண்டு.
1. தாமரை போன்ற திருவடி
2. திரண்ட நீண்ட சங்கினைப் போன்ற கணைக்கால்
3. எலும்பு தெரியாத சதைப்பற்றுள்ள முழங்கால்
4. யாணையின் துதிக்கை போன்ற தொடை
5. சிறுத்த வயிறு
6. ஆழ்ந்த கொப்பூழ்
7. கண்ணாடி போன்ற பரந்த மார்பு
8. வீணையைப் போன்ற முழந்தாள், முழங்கால்முட்டி
9. முட்டியைத்தொடும் அளவிற்கு நீண்ட கைகள்
10. மேரு மலையையொத்த இரு தோள்கள்
11. வலம்புரிச்சங்கைப் போன்ற கண்டம்
12. செந்தாமரையை நிகர்த்த முகம்
13. வயிறு, தோள், நெற்றி, மூக்கினடி, மார்பு, கையடி உயர்ந்திருந்தல் சிறந்த செல்வம்
14. கண், கபாலம், மூக்கின்முனை, கை, மார்பு நீண்டிருத்தல் நன்மை
15. குடுமி, தோல், விரலின் கணு, நகம், பல் சிறுத்திருந்தால் ஆயுள் மிகும்
16. கோசம், கணைக்கால், நாக்கு, முதுகு குறுகி இருத்தல் செல்வப்பயன்
17. தலை நெற்றி அகன்று இருத்தல் நன்று
18. உள்ளங்கால், உள்ளங்கை, உதடு, கடைக்கண், நா மேல்வாய், நகம் சிவந்திருப்பது, நன்மையுடன் இன்பம் தரவல்லது
19. மார்பு, கழுத்து, கொப்பூழ் வலிமை
20. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஓசை ஏற்படுத்துதல்
21. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஆழம் பெற்றிருத்தல்
22. நீண்ட வாழ்வு
23. அழியாப் புகழ்
24. நீதி தவறாமை
25. நற்குணங்கள் நிறைந்து இருத்தல்
26. அன்புடைமை
27. பண்புடைமை
28. அமைதியுடைமை
29. அருள் பார்வை
30. ஈகை குணம்
31. கல்வி அறிவு
32. வெல்வதற்கு அரியவன்