மயில்களின் தோற்றம் நம் கண்களை கவரும் வகையில் இருக்கிறது. இந்தியா தவிர, இலங்கை, பர்மாவில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன.
* மயில்களுக்கு நீண்ட தோகை இருந்தாலும், நெடுந்தூரம் அவற்றால் பறக்க இயலாது.
* மயில்கள் விதைகள், பூக்கள், சிறு பூச்சிகளைத் தவிர சிறிய பாம்புகளையும் உண்ணும்.
* மயில் அடர்ந்த காடுகளில் வாழ்வதில்லை. குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலேயே வாழ்கின்றன.
* மயில்களால் 11 விதமான ஒலிகளை எழுப்ப முடியும்.
* மயில்கள் இனப்பெருக்க காலத்தில் பல துணையுடன் இணைவதில்லை.
* பெண் மயிலைக் கவரவே ஆண் மயில்கள் தோகைகளை விரித்து ஆடுகின்றன.
* மயில்களால் குறைந்தது 20 ஆண்டுகள் உயிர் வாழ முடியும். பாதுகாக்கப்படும் மயில்கள் இன்னும் அதிக காலம் உயிர் வாழ்கின்றன.
* மயில்களின் கால்களில் சவ்வுகள் இருந்தாலும் நீச்சலடிப்பதில்லை.
* மயில்கள் மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் குணம் உடையவை.