பஞ்சகச்சம் என்பது ஆடவர் உடுத்தும் ஆடை வகைகளில் ஒன்றாகும். இந்த பஞ்சகச்சம் பற்றிய சுலோகம் ஒன்று இருக்கிறது. அது;
“குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா:”
இதன் பொருள் அறிய;
குக்ஷி = இடுப்பு
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று, இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் = சொருகுதல்
பஞ்சகச்சா = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லாக் காரியங்களிலும்
ஷோபனா = மங்களகரமானதாக
ப்ரோக்தா = கூறப்படுகிறது
அதாவது, வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே, “பஞ்சகச்சம்” என்று சொல்கின்றனர்.