ஈமு பறவை, மணிக்கு 50கிமீ தூரம் நடக்கும் ஒரு பறவை, இது நன்றாக நீந்தக் கூடியது. இந்தப் பறவை இனத்திற்கும், ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கும் இடையே ஒரு போர் நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆஸ்திரேலிய வரலாற்று புத்தகத்திலேயே இந்தப் போர் குறித்தத் தகவல் இடம் பெற்றிருக்கிறது.
1930 ஆம் ஆண்டில் இருந்தே மேற்கு ஆஸ்திரேலியாவில் வசித்த விவசாயிகளின் பயிர்களுக்கு ஈமு என்ற பறவை இனம் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அங்கிருந்த விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக ஆஸ்திரேலிய அரசு இந்த பறவை இனத்தின் தொகையைக் கட்டுப்படுத்தவும், இவைகளின் தொல்லையைப் போக்கவும், துப்பாக்கிகளுடன் கூடிய ஒரு படைப் பிரிவை விவசாயிகளுக்கு உதவியாக இருக்க அனுப்பியது.
இந்த முறை பறவைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டது. படைவீரர்களால் இயந்திர துப்பாக்கிகளைக் கொண்டு அப்பறவைகளைக் குறிபார்த்துச் சுட இயலவில்லை.
சம்தளம் இல்லாத பகுதிகளில் அந்த பறவைகளின் இயக்கம் சீராக இல்லாததால், அவர்களால் ஈமு பறவைகளுடன் சரியாகப் போர் புரிய இயலவில்லை. இருந்தாலும், ஒரு சிறிய அளவிலான எண்ணிக்கையில் ஈமு பறவைகளைக் கொல்லப்பட்டன.
இந்தத் தோல்வி பெரும் கிண்டலுக்கும் விமரிசனத்துக்கும் ஆளானது.
ஈமு பறவைகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அரசின் கையால் ஆகாத திறமை, அதிகப்படியான ஆயுத செலவு என பல வழிகளில் பலரும் விமரிசனம் செய்யத் தொடங்கினர்.
அதனால் கொதிப்படைந்த ஆஸ்திரேலிய அரசு, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப் பறவைகளுக்கு எதிராக, இரண்டாவது போரைத் துவக்கியது.
ஆனால் இந்த முறையும் அந்தப் பறவை இனத்தை முற்றிலும் விரட்டி அடிக்கவோ, அழிக்கவோ இயலவில்லை. அந்த இரண்டாம் போரிலும் ஈமு பறவைகளே வென்றது.
அந்தப் போர் ஒரு ஆர்வமாக மற்றும் வேடிக்கை நிகழ்வாக இருந்தாலும், "இயற்கைக்கு எதிரான போரில் மனிதர்கள் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம்” என உணர வைத்தது.
ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு இனத்தின் மீது மோதும் போது என்ன நடக்கும் என்பதை உணர்த்துவதாக அமைந்தது.
ஆனால் வெளி உலகத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த போராக இந்தப் போர் இல்லாத போதிலும், ஆஸ்திரேலிய வரலாற்றுப் புத்தகத்தில் இயல்புக்கு மாறாக நடந்த, ஒரு சுவாரசியமான போர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.