இந்தியாவில் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து போய்விட்டது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகில் புத்தக வாசிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான புத்தகம் படிக்கும் விவரங்கள் குறித்த அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. இந்த அறிக்கைகளின்படி, இந்தியா, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இதில் மின்னணு ஊடகங்களும் இருக்கலாம்.
1. இந்தியா - வாரத்திற்குச் சுமார் 10 மணி நேரம் 42 நிமிடங்கள் என்று இருக்கிறது. இந்தக் கணக்கின்படி, ஆண்டுக்கு 556.4 மணி நேரம் என்று இருக்கிறது.
2. தாய்லாந்து - வாரத்திற்குச் சுமார் 9 மணி நேரம் 24 நிமிடங்கள் வீதம், ஆண்டுக்கு 488.8 மணி நேரமாக இருக்கிறது.
3. சீனா - வாரத்திற்கு 8 மணி நேரம் வீதம், ஆண்டுக்கு 416 மணி நேரமாக இருக்கிறது.
4. பிலிப்பைன்ஸ் - வாரத்திற்கு 7 மணி நேரம் 36 நிமிடங்கள் வீதம், ஆண்டுக்கு 395 மணி 20 நிமிடங்கள் என்று இருக்கிறது.
5. எகிப்து - வாரத்திற்கு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் வீதம், ஆண்டுக்கு 390 நிமிடங்கள் என்று இருக்கிறது.
இந்த அறிக்கையின்படி, ஆண்டுதோறும் அதிகப் புத்தகங்களை வாங்கிய நாடுகளின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் கீழ்க்காணும் நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1. பிரான்ஸ் - 17.0
2. கனடா - 17.0
3. அமெரிக்கா - 12.0
4. தென் கொரியா - 11.0
5. ஸ்பெயின் - 9.9
6. போர்ச்சுகல் - 8.5
7. எஸ்டோனியா - 6.0
8. சிலி - 5.3
9. பெரு - 3.3
10. பிரேசில் - 2.5
அதிகமான புத்தகங்களை வாங்கிப் படிக்கும் நாடுகளைப் பற்றிய தரவுகளில் பெரும்பாலானவை 2017 ஆம் ஆண்டில் இருந்து வந்தவை. 2020க்குப் பிறகு புதிய அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆண்டுக்குச் சராசரியாக 2,75, 232 வாங்கிப் படிக்கிறது. புத்தகம் வாங்குபவர்களின் சந்தைப் பங்கில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் 30% என்று அதிக அளவாக இருக்கிறது.
2. சீனா, சராசரியாக ஆண்டுக்கு 2,08,418 புத்தகங்களை வாங்கிப் படிக்கிறது. இது புத்தகம் வாங்குபவர்களின் சந்தைப் பங்கில் 10% எனும் அளவாகும்.
3. ஐரோப்பிய ராஜ்ஜியம், ஆண்டுக்கு 1,88,000 புத்தகங்களை வாங்கிப் படிக்கிறது. இது புத்தகம் வாங்குபவர்களின் சந்தைப் பங்கில் 9% எனும் அளவாகும்.
4. ஜப்பான்,ஆண்டுக்கு சராசரியாக 1,39,078 புத்தகங்களை வாங்கிப் படிக்கிறது. இது மொத்தச் சந்தைப் பங்கில் சுமார் 7% ஆகும்.
5. ஜெர்மனி - 2017 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த நாடு எத்தனைப் புத்தகங்களைப் படிக்கிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், 2016-2022 அறிக்கையில் இந்த நாடு உலகின் 9% சந்தைப் பங்கை வாங்கியதாகத் தெரிவிக்கிறது.
2016 ஆம் ஆண்டின் பியூ ஆராய்ச்சி அறிக்கையின்படி, அமெரிக்கா வருடத்திற்கு 12 புத்தகங்களைப் படிக்கிறது, நாட்டில் 50% பேர் நான்கு அல்லது அதற்கும் குறைவான புத்தகங்களைப் படிக்கிறார்கள். இந்த நேரத்தில், அமெரிக்கர்கள் 2012 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே மின் புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்களை விட, அதிகமான காகிதப் புத்தகங்களைப் படிக்கிறார்கள். இருப்பினும், மின்னணு ஊடகப் போக்கு வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.
2016 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட மற்ற பாதி அமெரிக்கர்கள் வருடத்திற்கு ஏழு புத்தகங்களைப் படித்தனர். ஒரு நபர் பள்ளியில் இருந்தால், குறிப்பாக கல்லூரியில் படிக்கும் பழக்கம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இருப்பினும், குறிப்பாக 2020 ஆண்டுக்குப் பிறகு அதிகமான மக்கள் மின்னணு மற்றும் அச்சு ஊடகத்தை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், இந்தத் தரவின் 2022 புதுப்பிப்பு, இந்த ஆய்வுக்கு 12 மாதங்களுக்கு முன்பு 9% பேர் மட்டுமே டிஜிட்டல் மீடியாவை மட்டுமேப் படித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
அனைத்து நேரத்திலும் அதிகம் படிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலில் பரிசுத்த வேதாகமம் முதலிடத்தில் உள்ளது. புனித குர்ஆன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஹாரி பாட்டர் தொடர், தலைவர் மாவோ சே துங் (முன்னாள் கம்யூனிஸ்ட் சீனக் கட்சித் தலைவர்) மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகியோரின் மேற்கோள்களின் தொகுப்பும் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.