மூடிய கடல் (Mare Clausum) என்பது பன்னாட்டுச் சட்டப்படி, ஒரு நாட்டின் சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு கடல் அல்லது பெருங்கடல், அல்லது பயணம் செய்யத்தக்க நீர் பகுதி மூடப்பட்டு இருப்பது அல்லது மற்ற நாடுகளால் அணுக முடியாமல் இருப்பதை குறிக்கின்றது.
அனைத்து நாடுகளும் கப்பல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரு கடல் என்பதாகும். பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டு நீர்க் கொள்கைப்படி, பெருங்கடல்கள், கடல்கள், தேசிய அதிகாரத்திற்கு வெளியே உள்ள நீர், இவையெல்லாம் கப்பல் பயணம் செய்ய திறந்துவிடப்பட்டிருக்கும், இதற்குப் பெயர், உயர்ந்த கடல் அல்லது விதிகளற்ற கடல் என்பதாகும். விதிகளற்ற கடலுக்கு (Mare Liberum) விதிவிலக்கான கடலை மூடிய கடல் என்கின்றனர்.
மூடிய கடல் என்பது தற்போது ஏற்பட்ட வழக்கம் என்பதில்லை. கி.மு. 30 முதல் கி.பி 117 ஆம் ஆண்டு வரை நடுவண் தரைக் கடலைச் சுற்றி வளைத்து பெரும்பான்மையான துறைமுகங்களை உரோமப் பேரரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உரோமானியர்கள் இக்கடலுக்கு ‘நமது கடல்’ என்று பெயர் வைக்கத் தொடங்கினார்கள். அக்காலத்தில் நவம்பருக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்டக் காலம் கப்பல் பயணம் செய்ய மிகவும் இடரானது என்று கருதப்பட்டது, அதனால், அப்பொழுது ‘மூடிய கடல்’ என்று அறிவிக்கப்பட்டது, எனினும் கடல் பயணம் செய்யத் தடையேதும் இல்லை. பழங்காலச் சட்டப்படி நாடு சார்ந்து பெருங்கடல் வரையரையறுக்கப்படவில்லை.
எனினும், இடைக்காலத்திலிருந்து கடற்பயணக் குடியரசுகளான வெனிசு குடியரசும், செனோவா குடியரசும் நடுவண் தரைக் கடலில் மூடியகடல் கொள்கைக்கு உரிமை கோரின. நார்டிக் முடியரசும் இங்கிலாந்தும் கூட தங்கள் நெருங்கிய கடல் பகுதிகளில் செல்வழிக் கட்டணம், மீன் பிடிக்கத் தனித்தன்னுரிமை கோரி, வெளிநாட்டுக் கப்பல்களுக்குத் தடை விதித்தன.
கண்டுபிடிப்புகளின் காலத்தில், 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் இடையில், கடலோரமாக இருந்த கப்பல் பயணம் பெருங்கடல் பயணமாக மாறியது. ஐபீரிய மூவலந்தீவிலுள்ள நாடுகள் இந்தச் செயல்முறையில் முன்னோடிகளாக, கண்டுபிடித்த, கண்டுபிடிக்கப் போகும் நிலங்களின் மீது சிறப்புச் சொத்து முற்றாட்சி உரிமையை வேண்டின. புதிய நிலங்களின் இருப்பு, சொத்துக்களின் குவிப்பின் விளைவாக, போர்த்துகல் இராச்சியம், ஐக்கிய இராச்சியத்தின் காச்டில், அரகாம் ஆகியவை வெளிப்படையாக போட்டிப் போடத் தொடங்கின. பகைமையைத் தவிர்க்கும் பொருட்டு, 1479 ஆம் ஆண்டின் அல்ககோவாச் ஒப்பந்தத்திலும், 1494 ஆம் ஆண்டின் தோர்டிசிலா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.
16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டிகளில் ஸ்பெயின் பசிபிக் பெருங்கடலை மூடியப் பெருங்கடலாகக் கருதியது. மற்ற கப்பற்படைகளுக்கு இது மூடிய கடல் ஆகும். பசிபிக் பெருங்கடலின் மேற்கே டச்சுப் படைகள் பிலிப்பைன்சை அச்சுறுத்தின.
உலக வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த டச்சுக்காரர்களுடன் கடுமையாகப் போட்டியிட்ட இங்கிலாந்து, க்ரோடியஸின் யோசனைகளை எதிர்த்தது மற்றும் பிரிட்டிஷ் தீவுகளைச் சுற்றியுள்ள நீரின் மீது இறையாண்மையைக் கோரியது . மூடிய கடல் (Mare Clausum) என்பவர் 1635 ஆம் ஆண்டில் ஜான் செல்டன் இந்த வார்த்தையை உருவாக்கினார். கடல் நடைமுறையில் நிலப்பரப்புப் பிரதேசமாக கையகப்படுத்தும் திறன் கொண்டது என்பதை நிரூபிக்க முயன்றார். முரண்பட்ட கூற்றுக்கள் சர்ச்சையில் இருந்து வளர்ந்ததால், கடல்சார் மாநிலங்கள் தங்கள் கோரிக்கைகளை மிதப்படுத்தவும், நிலத்திலிருந்து கடல்களை விரிவுபடுத்தும் கொள்கையின் அடிப்படையில் கடல்சார் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொள்ளவும் வந்தன.
கொர்னேலியஸ் வான் பைங்கர்ஷோக் தனது டி டொமினியோ மாரிஸில் 1702 ஆம் ஆண்டில் ஒரு வேலைக்கான சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது , இது பீரங்கி வரம்பில் திறம்பட பாதுகாக்கக்கூடிய உண்மையான தூரத்திற்கு கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மூன்று மைல் வரம்பாக வளர்ந்திருக்கிறது.