1. ‘சிலருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், தனக்கு ஒன்றும் தெரியாது என்பதும் தெரியாது. தனக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் அறியாதவர்கள், அவர்களை விலக்கிவிடு.’
(உதாரணம்) ராமாயணத்தில் வாலி உண்மை அறியாமல் சுக்ரீவன் மீது பகைமை பாராட்டுவதன் மூலம் இந்த ரகத்தைச் சேர்ந்தவனாகிறான்.
2. ‘சிலருக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் தனக்குத் தெரியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதை ஒப்புக் கொள்ளவும் செய்வார்கள், அவர்கள் எளியவர்கள். அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடு.’
(உதாரணம்) உண்மையை அறியா விட்டாலும் அனுமன் போன்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு தனது அறியாமையை ஏற்று அதை வெல்வதன் மூலம் சுக்ரீவன் இரண்டாவது ரகத்தைச் சார்கிறான்.
3. ‘சிலருக்கு விஷயம் தெரியும். ஆனால் தனக்குத் தெரியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அத்தகையோர் மறதி அல்லது மயக்கத்தில் உள்ளவர்கள். அவர்களை விழிப்புறச் செய்.’
4. ‘எவன் எல்லாம் அறிந்திருந்தும் தான் அறிந்திருப்பதை முற்றும் உணர்ந்தும் உள்ளானோ, அவனே ஞானி. அவனைப் பின்பற்று.’
(உதாரணம்) சாபத்தின் காரணமாகத் தனது வலிமையைப் பற்றி அறியாத அனுமன் மூன்றாவது ரகத்திலும், தன் வலிமை தெரிந்ததும் தனது அறிவாற்றலைப் பயன்படுத்தியதன் மூலம் அதே அனுமன் நான்காவது ரகத்திலும் சேருகிறான்.