மானிடராக இருப்பவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்றாற் போல் நரக வாசம், பின்பு பூலோகத்தில் மானுடரில்லா பிறவிகள் குறித்து விஷ்ணு ஸ்மிருதி குறிப்பிடுகிறது.
* மிக உயர்ந்த அளவிலான பாவங்களை சேர்த்தவர்கள் அனைத்து வகை தாவரங்களாக அடுத்தடுத்துப் பிறப்பார்கள்.
* கொலைச் செயல் புரிந்தவர்கள் புழுக்கள் (அ) பூச்சிகளாக பிறப்பார்கள்.
* கொடிய பாவங்களைச் சேர்த்தவர்கள் நீர்வாழ் விலங்குகளாகப் பிறப்பார்கள்.
* குறைந்த பாவங்களைச் சேர்த்தவர்கள் பறவைகளாகப் பிறப்பார்கள்.
* வர்ணாசிரம தர்மத்தை மீறியவர்கள் நீர் மற்றும் நில வாழ் உயிரினங்களாக பிறப்பார்கள்.
* சாதிக் கலப்பு செய்தவர்கள் மான்களாக பிறப்பார்கள்.
* பிச்சை எடுப்பவர்களை அவமதித்தவர்கள் கால்நடைகளாகப் பிறப்பார்கள்.
* தூய்மைக்குக் கேடு விளைவிப்பவர்கள் சண்டாளர்களாகப் பிறப்பார்கள்.
* இதர குற்றங்கள் புரிந்தவர்கள் காட்டு விலங்குகளாகப் பிறப்பார்கள்.
* அடுத்தவரின் உணவை உண்டவர்கள் புழுக்கள் (அ) பூச்சிகளாகப் பிறப்பார்கள்.
* திருட்டுத் தொழில் புரிந்தவர்கள் ராஜாளிகளாகப் பிறப்பார்கள்.
* பரந்த பாதையை மூடியவர்கள் பொந்துகளில் வாழும் பாம்புகளாகப் பிறப்பார்கள்.
* தானியத்தைத் திருடியவர்கள் எலிகளாகப் பிறப்பார்கள்.
* செம்பைத் திருடியவர்கள் அன்னப் பட்சிகளாகப் பிறப்பார்கள்.
* தண்ணீரைத் திருடியவர்கள் நீர்ப்பறவைகளாகப் பிறப்பார்கள்.
* தேனைத் திருடியவர்கள் காட்டு ஈக்களாகப் பிறப்பார்கள்.
* பால் திருடியவர்கள் காகங்களாகப் பிறப்பார்கள்.
* பழச்சாறுகள் திருடியவர்கள் நாய்களாகப் பிறப்பார்கள்.
* வெண்ணெய் திருடியவர் கீரிகளாகப் பிறப்பார்கள்.
* மாமிசம் திருடியவர்கள் பருந்துகளாகப் பிறப்பார்கள்.
* கொழுப்பு திருடியவர்கள் நீர்க்காக்கைகளாகப் பிறப்பார்கள்.
* எண்ணெய் திருடியவர்கள் கரப்பான்களாகப் பிறப்பார்கள்.
* உப்பைத் திருடியவர்கள் சுவர்க் கோழிகளாகப் பிறப்பார்கள்.
* பட்டு திருடியவர்கள் கௌதாரிகளாகப் பிறப்பார்கள்.
* கைத்தறி திருடியவர்கள் தவளைகளாகப் பிறப்பார்கள்.
* பருத்தி திருடியவர்கள் சுருள் பறவைகளாகப் பிறப்பார்கள்.
* பசுவைத் திருடியவர்கள் உடும்புகளாகப் பிறப்பார்கள்.
* சர்க்கரை திருடியவர்கள் வெளவால்களாகப் பிறப்பார்கள்.
* திரவியங்கள் திருடியவர் கஸ்தூரி எலிகளாகப் பிறப்பார்கள்.
* காய்கறிகள் திருடியவர்கள் மயில்களாகப் பிறப்பார்கள்.
* தானியங்கள் திருடியவர்கள் பன்றிகளாக / முள்ளம்பன்றிகளாகப் பிறப்பார்கள்.
* தீயைத் திருடியவர்கள் நீண்ட கழுத்துப் பறவைகளாகப் பிறப்பார்கள்.
* பாத்திரங்களைத் திருடியவர்கள் குளவிகளாகப் பிறப்பார்கள்.
* சாயத்தைத் திருடியவர்கள் கௌதாரிகளாகப் பிறப்பார்கள்.
* யானையைத் திருடியவர்கள் ஆமைகளாகப் பிறப்பார்கள்.
* பழங்களைத் திருடியவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள்.
* பெண்களைக் களவாடியவர்கள் கரடிகளாகப் பிறப்பார்கள்.
* வாகனங்களைத் திருடியவர் ஒட்டகங்களாகப் பிறப்பார்கள்.
* கால்நடைகளைத் திருடியவர்கள் கழுகுகளாகப் பிறப்பார்கள்.
இறப்பிற்குப் பின்பு, நரகத்தில் உரிய தண்டனைகளை அனுபவித்த பின்பு, பூமியில் திருட்டு மற்றும் பாவத்தைச் செய்தவர்கள், மேலேச் சொன்ன பிறவிகளை அடைந்து மீண்டும் மானிடப் பிறவி எடுப்பார்கள்.