புத்திக்கு எட்டு வகையான ஆற்றல்கள் இருக்கின்றன. அவற்றை நம் முன்னோர் 'அஷ்டாங்க புத்தி' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை;
1. கேட்டலாகிய ஆற்றல் - ‘கிரஹணம்'
2. கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல் - 'தாரணம்'
3. அதை வேண்டும்பொழுது நினைவு கூறல் - 'ஸ்மரணம்'
4. அதை எடுத்து விளக்குதல் - ‘பிரவசனம்'
5. ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல் - ‘யூகம்'
6. வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல் 'அபோஹனம்'
7. ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல் -'அர்த்தவிஞ்ஞானம்'
8. மெய்யறிவு பெறுதல் - 'தத்துவ ஞானம்' (மகான்களுக்கு மட்டும் இது கிட்டும்)