நன்னூல் நூலுக்கு அமைய வேண்டிய பத்து அழகுகளுடன், நூலுக்கு உரியதற்ற பத்து வகைக் குறைபாடுகளையும் குறிப்பிடுகிறது. அவை;
நூலுக்கு அமைய வேண்டிய பத்து அழகுகள்
1. சொற்கள் வீணாக விரியாமல் சுருங்கக் கூறி விளக்குதல்.
2. சந்தேகத்திற்கு இடமின்றி பொருள் விளங்க வைத்தல்.
3. கற்பவருக்கு இன்பத்தைத் தருமாறு கூறுதல்.
4. நல்ல சொற்களைத் தேர்ந்து சேர்த்தல்.
5. ஓசை நயத்துடன் கூறுதல்.
6. ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருத்தல்.
7. பொருளைக் காரண காரிய முறையாக அமைத்தல்.
8. சான்றோர் வழக்கத்துடன் மாறுபாடின்றிச் சொல்லுதல்.
9. சிறந்த பொருளைக் கூறுதல்.
10. எளிதில் விளங்கத்தக்க உதாரணங்களைத் தருதல்.
நூலுக்கு உரியதற்ற பத்து வகை குறைபாடுகள்
1. எண்ணிய பொருளை விளக்குவதற்கு வேண்டியவற்றைக் குறைவாகக் கூறுதல்.
2. எண்ணிய பொருளை விளக்குவதற்கு வேண்டியவற்றைவிட அதிகமாகக் கூறுதல்.
3. முன்பு கூறிய பொருளை மீண்டும் ஒரு காரணமும் இல்லாது கூறுதல்.
4. முன்பு கூறியதற்கு மாறாகக் கூறுதல்.
5. இலக்கணக் குறைகளுடைய சொற்களைச் சேர்த்தல்.
6. ஒன்றின் பொருள் இதுவா? அதுவா? என்று மயக்கம் கொள்ளும்படி வைத்தல்.
7. பொருள் செறிவில்லாதச் சொற்களைக் கூறுதல்.
8. சொல்லத் தொடங்கியதைவிட்டு மற்றொன்றை இடையில் விவரித்தல்.
9. சொல்லும் பொருளும் முன் பகுதியில் சிறப்பாக அமைய, பின்பகுதியில் சிறப்பின்றி தேய்ந்து முடிதல்.
10. சொற்கள் இருந்தும் பயனின்றிப் போதல்.