குருச்சேத்திரத்தில் பாண்டவர் அணிப் படைகளுக்கும், கௌரவர் அணிப் படைகளுக்கும் நடந்த போரில், அணிகளின் தலைமைப் படைத்தலைவர்கள், தங்கள் படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளைத் தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு சிறப்பு வடிவத்தில் தங்கள் படைகளை (வியூகம்) அமைத்துக் கொண்டு போரிட்டனர்.
படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்;
1. நாரை வியூகம்
2. முதலை வியூகம்
3. ஆமை வியூகம்
4. திரிசூலம் வியூகம்
5. சக்கர வியூகம்
6. பத்ம வியூகம் (பூத்த தாமரைமலர் வியூகம்)
7. கருட வியூகம்
8. கடல் அலைகள் போன்ற வியூகம்
9. வான் மண்டல வியூகம்
10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
12. அசுர வியூகம்
13. தேவ வியூகம்
14. ஊசி போன்ற வியூகம்
15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
16. பிறை சந்திர வடிவ வியூகம்
17. பூ மாலை போன்ற வியூகம்