இந்து சமய முறைப்படி, இறந்து போனவர்களைத் தென்னை மட்டையினால்தான் பாடைகட்டி எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
இதன் காரணம் என்னவென்று தெரியுமா?
தென்னைமட்டை மரத்தை விட்டு விழும் போது, அது அந்த மரத்தில்தான் இருந்ததற்கு அடையாளமாக ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டுத்தான் கீழே விழும். அந்த வடு அந்த மரம் அழியும் வரை இருக்கும்.
தென்னைமட்டையினால் செய்த பாடையைப் பார்க்கும் மற்ற மனிதர்களுக்கு, தங்கள் பிறப்பை இந்த உலகம் உள்ளளவும் மறக்காத வகையில் ஏதேனும் நற்செயலை ஓர் அடையாளமாகச் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரச் செய்வதற்காகத்தான் தென்னைமட்டையில் பாடை கட்டுகிறார்கள்.