1. நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு. அவை;
1. வானத்திலே கழுகினுடைய வழி
2. பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி
3. நடுக்கடலிலே கப்பலினுடைய வழி
4. ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.
2. போதும் என்று சொல்லாத நான்குண்டு. அவை;
1. நீத்தார் உலகம்
2. மலட்டுக் கர்ப்பம்
3. தண்ணீரால் திருப்தியடையாத நிலம்
4. போதுமென்று சொல்லாத நெருப்பு.
3. பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவை;
1. அற்பமான உயிர்னமாயிருந்தும், கோடைகாலத்தில் தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு
2. சக்தியற்ற உயிரினமாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டி வைக்கும் குழிமுயல்கள்
3. அரசன் இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்
4. தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரண்மனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.
4. விநோத நடையுள்ளவைகள் நான்குண்டு. அவை;
1. மிருகங்களில் சக்தி வாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னடையாததுமாகிய சிங்கம்
2. போர்க்குதிரை
3. வெள்ளாட்டுக்கடா
4. ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா